ஜோஹோவில் வேலை வேண்டுமா? ஆன்லைனில் உடனே விண்ணப்பிங்க.. சென்னையில் பணி
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் சென்னையில் இயங்கி வரும் ஜோஹோவில் மெஷின் லேர்னிங் இன்ஜினியர் (Machine Learning Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு சாப்ட்வேர் டெவலப்மென்ட் பிரிவில் ஆண்டு முதல் 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஸ்ட்ராங் மேத்தமேட்டிக்கல் & நியூமெரசி ஸ்கில்ஸ் (Mathematical & Numeracy Skills) இருக்க வேண்டும். அதேபோல் மெஷின் லேர்னிங்/டேட்டா இன்ஜினியரிங்/மெஷின் லேர்னிங் ஆபரேஷன் (MLOps) உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் புரோகிராமிங் லேங்குவேஜ்களான சி, சி++, ஜாவா, Scala அல்லது பைத்தான் உள்ளிட்வற்றில் ஏதேனும் ஒன்று எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும்.
அதோடு டேட்டா ஸ்ட்ரெக்சர்ஸ், டேட்டா மாடலிங், டிசைன் பிரின்சிபல்ஸ், சாப்ட்வேர் ஆர்க்கிடெக்சர்ஸ் மற்றும் CI/CD Pipelines உள்ளிட்டவற்றில் அடிப்படை புரிதல் இருக்க வேண்டும். அதேபோல் ஃபைல் சிஸ்டம்ஸ், சர்வர் ஆர்க்கிடெக்சர்ஸ், டிஸ்ட்ரிபுட்டட் சிஸ்டம்ஸ், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், டிரான்பார்மர்ஸ், மெஷின் லேர்னிங் அண்ட் டீப் லேர்னிங் அல்காரிதம்ஸ் உள்ளிட்டவற்றை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் Deep learning, Natural Language Processing, Image Processing, Recommender Systems, Reinforcement Learing, Generative AI உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Statistical Modelling Techniques, Pattern mining Techniques and LLM's மற்றும் மெஷின் லேர்னிங் ப்ரேம்வொர்க்ஸ்களான TensorFlow, PyTorch, Keras உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் பிக் டேட்டா டெக்னாலஜிஸ் மற்றும் சொல்யூஷன்ஸ் Spark, Hive, Hadoop, Kafka உள்ளிட்டவற்றிலும் அனுபவம் கொண்டிருப்பது சிறப்பானதாகும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் சென்னை ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications