ZOHO -வின் புதிய வேலைவாய்ப்பு.. அனுபவம் வேண்டாம்.. டிகிரி மட்டுமே போதும்.. சென்னையிலேயே பணி நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் தொடர்ந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்த அனைவரும் விண்ணப்பம் செய்யலாம்.

ஜோஹோ.. தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் சென்னை, மதுரை, தென்காசி (மத்தளம்பாறை) உள்பட பல்வேறு இடங்களில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்ற பலரும் ஆர்வமாக உள்ளனர்.

it jobs job jobs

அப்படி ஆர்வமாக உள்ளவர்களுக்கான புதிய வாய்ப்பை ஜோஹோ நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணி பற்றிய முழுவிபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி ஜோஹோ நிறுவனத்தில் Product Marketers பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்ற எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்பதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் Content Creationg Skills இருப்போர் விண்ணப்பிக்கலாம். மேலும் Cross Functional Teams உடன் சேர்ந்து பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ப்ரசென்டேஷன், பப்ளிக் ஸ்பீக்கிங் திறமையை கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் Product Marketers பிரிவில் 0 முதல் 5 ஆண்டு ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் பணி அனுபவம் இன்றி மேற்கூறிய தகுதிகள் இருப்பின் அவர்களும் விண்ணப்பம் செய்யலாம். மேலும் பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பளம் பற்றிய விபரம் இண்டர்வியூவின் போது தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது ஒவ்வொருவருக்கும் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

பணிக்கு தேர்வாகும் நபர்களின் வேலை என்பது ஜோஹோ நிறுவனத்தின் Product-களை புரோமோட் செய்வது மற்றும் இதற்காக புதிய கன்டென்ட்டுகளை உருவாக்கும் வகையில் இருக்கும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு அடுத்தக்கட்ட ரவுண்ட்டுகளுக்கு அழைக்கப்படுவார்கள்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் ஆக வேண்டும் என்றால் மறக்காமல் இந்த ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். அதாவது விண்ணப்பம் செய்யும்போது கடைசியில் Portfolio Link/ Work Sample Link கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கும். அதில் கட்டாயமாக உங்களின் Portfolio Link/ Work Sample Link-யை அட்டாச் செய்ய வேண்டும். இது இல்லாத பட்சத்தில் அதிகபட்சமாக விண்ணப்பம் ரிஜெக்ட் ஆக சான்ஸ் உள்ளது. இதனால் கட்டாயமாக Portfolio Link/ Work Sample Link உருவாக்கி வைத்து கொள்வது நல்லது

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+