Zoho வேலைவாய்ப்பு.. டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இன்று (அக்டோபர் 18) கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட்செய்யப்பட்டு சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் முன்னிலையில் உள்ள நிறுவனங்களில் ஒன்று தான் ஜோஹோ. தமிழகத்தில் பல இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

it jobs job jobs

தற்போது ஜோஹோ நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் இயங்கி வரும் ஜோஹோ நிறுவனத்தில் டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் (Technical Support Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு கல்வி தகுதி என்று பிரத்யேகமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதனால் டிகிரி, இன்ஜினியரிங் உள்ளிட்ட கல்லூரி படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஆனாலும் விண்ணப்பம் செய்வோர் கண்டிப்பாக டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியரிங் பிரிவில் குறைந்தபட்சம் 2 முதல் அதிகபட்சமாக 8 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். நைட்ஷிப்ட் மற்றும் ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற ஆர்வமாக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் வாய்ஸ், இ-மெயில் மற்றும் சாட் முறையில் டெக்னிக்கல் சப்போர்ட் வழங்க வேண்டியிருக்கும். மேலும் ஆன்லைன் டெமோ மற்றும் கஸ்டமர் டிரெய்னிங் செய்ய வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. விண்ணப்பம் செய்வோருக்கு தகுதி மற்றும் பணி அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி இன்று (அக்டோபர் 18) தான். இதனால் உடனடியாக இன்றே விண்ணப்பம் செய்வது நல்லது.

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு அடுத்தக்கட்ட இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+