ZOHO-வில் புதிய வேலைவாய்ப்பு.. வந்தாச்சு சூப்பர் அறிவிப்பு.. சென்னையில் பணி நியமனம்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பணிக்கான தகுதி மற்றும் விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. சென்னை, மதுரை, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை உள்பட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது ஜோஹோ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி ஜோஹோ நிறுவனத்துக்கு விஷூவல் டிசைனர் (Visual Designer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு என்று விண்ணப்பம் செய்வோருக்கு குறிப்பிட்ட கல்வி தகுதி என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனாலும் கூட விண்ணப்பம் செய்வோர் விஷூவல் டிசைனர் பணியில் 2 முதல் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி விண்ணப்பம் செய்வோருக்கு கிராபிக்ஸ், இல்லஸ்ட்ரேஷன், அனிமேஷன்ஸ் உள்ளிட்டவற்றை மார்க்கெட்டிங் சேனல்களுக்கு ஏற்ப உருவாக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் போட்டோ மற்றும் வீடியோ உருவாக்கவும், எடிட் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். வீடியோவில் எடிட் செய்யவும், அனிமேஷன் காட்சிகளை இணைக்கவும், ஆடியோ எபெக்ட் சேர்க்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
அதோடு விஷூவல் டிசைனர் பணி தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கொடுக்கும் பணியை செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி விஷூவல் டிசைன் மொழியை மேம்படுத்தும் கலை தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பளம் பற்றிய விபரம் இண்டர்வியூவின் போது தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது ஒவ்வொருவருக்கும் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications