Zoho ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. தென்காசியில் பணி நியமனம்!
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் தென்காசியில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் பிரபல ஐடி நிறுவனங்கள் பல உள்ளன. அதில் ஒன்று தான் ஜோஹோ. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசியில் ஜோஹோ நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் தான் தென்காசியில் உள்ள ஜேஹோ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி ஐஓஎஸ் டெவலப்பர் (iOS Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு ஸ்விப்ட் மற்றும் ஐஓஎஸ் எஸ்டிகே -வில் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் Apple's Human Interface Guidelines (HIG) பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும். UIKIT மற்றும் SwiftUI Frameworks உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் லோக்கல் டேட்டா ஸ்டோரேஜில் Core Data பற்றிய அறிவு இருக்க வேண்டும். மேலும் iOS டிசைன் பேட்டனில் MVC, MVVM மற்றும் VIPER உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருப்பதோடு, Xcode பயன்படுத்தி debugging ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. சம்பளம் பற்றிய விபரம் இறுதிக்கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவடையலாம். எனவே உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications