ZOHO அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி நியமனம்.. அசத்தலான அறிவிப்பு
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ செயல்பட்டு வருகிறது. இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு ஜோஹோ ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு போட்டியாக வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது இந்த நிறுவனம்.

இந்நிலையில் தான் ஜோஹோ ஐடி நிறுவனத்தில் இருந்து ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Full Stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேவையான தகுதிகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்த பணிக்கு இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது தொடர்புடைய பிரிவில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். ஜாவா, ஆங்குலர், MySQL மற்றும் cassadra-வில்அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Developing high- Volume, Low - Latency Applications உள்ளிட்டவற்றில்அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Code எழுத தெரிந்திருக்க வேண்டும். CI/CD பைப்லைன்ஸ், ஆட்டோமேஷன் டூல்ஸ் மற்றும் பிராக்டீஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சாப்ட்வேர் டெவலப்மென்ட் ரோலில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். தற்போதைய அறிவிப்பில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூவுக்கான நேரம், இடம் உள்ளிட்டவை தொலைபேசி அல்லது இ-மெயில் மூலமாக தெரிவிக்கப்படும்.பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications