கோவையில் பணி.. சென்னையில் நடக்கும் இண்டர்வியூவை மிஸ் செய்யாதீங்க.. அழைக்கும் ZOHO
சென்னை: தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஜோஹோ நிறுவனத்தில் கோவையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ என்பது சென்னையில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் ஜோஹோ ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஜோஹோ சார்பில் கோவையில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதன்படி ஜோஹோ ஐடி நிறுவனத்தில் தற்போது மால்வர் அனலிஸ்ட் (Malware Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை பணி அனுபவம் என்பது கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் விண்ணப்பம் செய்வோருக்கு C, C++, Python, ASM உள்ளிட்ட ஸ்கில்ஸ்செட் என்பது இருக்க வேண்டும். அதேபோல் ரிவர்ஸ் இன்ஜினியரிங், மால்வர் அனலிசிஸ் மற்றும் சைபர் த்ரெட் ரிசர்ஜ் உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். டைனமிக் மற்றும் ஸ்டட்டிக் டெக்னிக்ஸை பயன்படுத்தி மால்வர் அனலிஸிஸ் செய்ய வேண்டி இருக்கும்.
அதேபோல் ஆட்டோமேஷன் டிடெக்ஷன் மற்றும் அனலிஸ்சிஸ் பணியை பைத்தான் மற்றும் சி ++ பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டி இருக்கும். இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் இந்த சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணிக்கான அறிவிப்பு வெளியாகி 4 நாட்கள் முடிந்துவிட்டது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி என்பது முடிவுக்கு வரலாம். எனவே பணியை விரும்புவோர் உடனடியாக ஜோஹோ இணையதளம் சென்று ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.
இப்படியாக விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூ என்பது சென்னையில் நடைபெறும். இண்டர்வியூ தேதி, இடம் உள்ளிட்டவை நேரடியாக தெரிவிக்கப்படும். இறுதியாக பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஜோஹோவில் அடிக்கடி இண்டர்வியூவில் பங்கேற்பவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி பங்கேற்று பணிக்கு தேர்வானாலும் கூட அவர்களின் நியமனம் ரத்து செய்யப்படும் என்று வார்னிங் செய்யப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications