Zoho-வின் புதிய வேலைவாய்ப்பு.. மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு ஆள் சேர்ப்பு! சென்னையில் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஜோஹோ ஐடி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஜோஹோ ஒன்றாகும். சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

it jobs job

இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதன் விபரம் வருமாறு:

ஜோஹோ நிறுவனத்தில் தற்போது மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் (Marketing Executive) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் (Front end மற்றும் back end) பணியில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வேலை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் கன்டென்ட் மார்க்கெட்டிங் அல்லது ரைட்டிங்/பிளாக்கிங், சோசியல் மீடியா மார்க்கெட்டிங், இ-மெயில் மார்க்கெட்டிங் உள்ளிட்டவை தெரிந்திருந்தால் விண்ணப்பம் செய்வோருக்கு பிளஸ் பாயிண்ட்டாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மார்க்கெட்டிங் டீமுடன் சேர்ந்து செயல்பட வேண்டியிருக்கும்.

தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம். பணி அனுபவம், தகுதியின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோ நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூக்கு அழைக்கப்படுவார்கள்.

பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+