‛‛அனுபவம் வேண்டாம்’’.. ZOHO தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. சென்னையில் பணி நியமனம்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஜோஹோ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அந்த பணி என்ன? விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதி வேண்டும்? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:
தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. பலருக்கும் இந்த அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது கனவாக உள்ளது.

இந்நிலையில் தான் சென்னையில் செயல்பட்டு வரும் ஜோஹோ நிறுவனத்தில் நெட்வொர்க் ஆபரேஷன்ஸ் இன்ஜினியர் (Network Operations Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம்செய்வோர் நெட்வொர்க் ஆபரேஷன் இன்ஜினியர் பிரிவில் 0 - 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். ஆனாலும் அவர்களுக்கு சில முக்கிய விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
அதன்படி நெட்வொர்க்கிங் ப்ரோட்டோகால்ஸ் மற்றும் டெக்னாலஜிகளில் நல்ல திறமை கொண்டிருக்க வேண்டும். அதாவது TCP/IP, DNS, DHCP, BGP, OSPF, VXLAN, EVPN உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் Cisco routing, Switching, firewall, நெட்வொர்க் டூல்ஸ் மற்றும் டெக்னாலஜிகளில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் டேட்டா சென்டர் இன்ஃப்ராடெக்ச்சர் மற்றும் எக்யூப்மென்ட்டில் அனுபம் இருப்பதோடு, பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். உதாரணமாக Wireshark பயன்படுத்தி Pcap & DPI அனலிட்டிக்கிஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். CCNA, CCNA, CompTIA Network+ அல்லது அதற்கு நிகரான சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 24X7 என்றஅடிப்படையில் ரோட்டேஷனல் ஷிப்டில் பணியாற்ற தயாராக இருப்பதோடு, நல்ல கம்யூனிகேசன் திறமை கொண்டிருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications