"அனுபவம் வேண்டாம்".. டிகிரி மட்டுமே போதும்.. Zoho தரும் அசத்தலான வேலைவாய்ப்பு.. ரெடியா?
சென்னை: ஜோஹோ ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்து அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு எந்தெந்த தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
ஜோஹோ ஐடி நிறுவனத்தில் தற்போது எஸ்ஆர் இ (SRE) எனும் Site Reliability Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை பெற விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பிஎஸ்சி, பிசிஏ, பிஏ, பிஇ, பிடெக் உள்பட எந்த பிரிவில் படிப்பை முடித்திருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.

2026ம் ஆண்டில் படிப்பை முடிப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி அனுபவம் - பணி அனுபவம் இல்லாதவர்கள் என இருதரப்பினரும் விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி பார்த்தால் விண்ணப்பம் செய்வோருக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் கிளவுட் ஆட்டோமேஷன், கிளவுட் இன்ஃப்ராஸ்ரெக்ச்சர், அல்லது எஸ்ஆர்இ சம்பந்தப்பட்ட ரோலில் 0-2 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாதவர்கள் என்றால் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி Bash, Shell அல்லது பைத்தான் ஸ்கிரிப்ட்டிங் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் கிளவுட் நெட்வொர்க்கிங், செக்யூரிட்டி கான்செப்ட்ஸ் மற்றும் ஐேஎம் ஃபண்டமென்டல்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் புரோகிராமிங் லேங்க்வேஜில் சி, சி++, ஜாவா/பைத்தான் ஆகியவற்றில் ஏதேனம் ஒன்று தெரிந்திருக்க வேண்டும். நெட்வொர்க்கிங் டூல்ஸை எடுத்து கொண்டால் netstat, ping, tracerourte, nc, ssh/scp, wireshark, tcpdum உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் SRE பிராக்டிசில் SLIs, SLOs மற்றும் SLAs உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர மேலும் சில தகுதிகள் உள்ளன. அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணி என்பது 24X7 என்ற முறையில் இருக்கும். இதனால் ஷிப்ட் அடிப்படையிலும், நைட்ஷிப்ட்டிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் எங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இன்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பங்குச்சந்தையில் வெடிக்கக் காத்திருக்கும் 'ஏஐ' பபுள்? ZOHO ஸ்ரீதர் வேம்புவின் அதிரடி எச்சரிக்கை பின்னணி! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications