IT Jobs: அனுபவம் தேவையில்லை.. டிகிரி மட்டுமே போதும்.. சென்னை ZOHO அலுவலகத்தில் வேலை.. கோவையில் இண்டர்வியூ
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து Software Debug Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய அனுபவம் தேவையில்லை. பணிக்கான இண்டர்வியூ கோவையில் நடைபெற உள்ள நிலையில் தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
ஜோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் டீபக் இன்ஜினியர் (Software Debug Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிபிஏ, பிஎஸ்சி, பிகாம், பிசிஏ படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

மேலும், பிஇ (கம்ப்யூட்டர் சயின்ஸ், இசிஇ, எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், இஐஇ, மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ், சிவில், கெமிக்கல், ஏரோநாட்டிக்கல், ஏரோஸ்பேஸ், புரோடக்சன்), பிடெக், எம்பிஏ, எம்எஸ்சி, எம்சிஏ, எம்காம், எம்இ, எம்டெக், பிஎச்டி படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கு 2026ம் ஆண்டில் படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு இந்த பணிக்கு 0-3 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
இருப்பினும், விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி இன்ஃப்ராஸ்ட்ரக்சர், டெப்ளாய்மென்ட் பைப்லைன்ஸ், அப்ளிகேஷ் ம்றும் ரன்டைம் என்விரான்மென்ட் உள்ளிட்டவற்றில் troubleshooting, debugging, மற்றும் புரடக்சனில் வரும் பிரச்சனையை தீர்ப்பது உள்ளிட்டவற்றில் ஆர்வமாக இருக்க வேண்டும்.
‛ஸ்ட்ராங்' அனலிட்டிக்கல்ஸ் ஸ்கில் மற்றும் டீமாக சேர்ந்து பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். புதிய ‛ஆர்க்கிடெக்ட்ச்சர்' பற்றி கற்று கொண்டு பணியாற்றிய தயாராக இருக்க வேண்டும். Code பற்றி தெரிந்திருந்தால் அது பெரிய பிளஸ் பாயிண்ட்டாகும். ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருப்பதோடு, ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக கம்யூனிகேட் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
ஏனென்றால் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம் என்பதால் இப்போதே விண்ணப்பிப்பது நல்லது.
இந்த பணிக்கான இண்டர்வியூ கோவையில் நடைபெற உள்ளது. அதில் தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். கோவையில் இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூ சார்ந்த பிற விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications