அனுபவம் வேண்டாம்.. டிகிரி போதும்.. ஜோஹோ ஐடி நிறுவனத்தில் 2 பிரிவில் காலியிடங்கள்.. சூப்பர் சான்ஸ்
சென்னை: ஜோஹோ ஐடி நிறுவனத்தில் இருந்து சாப்ட்வேர் டெவலப்பர் மற்றும் கன்டென்ட் /டெக்னிக்கல் ரைட்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய மார்ச் 31ம் தேதி கடைசி நாளாகும். பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
ஜோஹோ ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே டிகிரி முடித்தவர்கள் அல்லது 2025ம் ஆண்டில் டிகிரி முடிப்போருக்காக புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வந்துள்ளது.

அதாவது ஜோஹோ ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது சாப்ட்வேர் டெவப்பர் மற்றும் கன்டென்ட்/டெக்னிக்கல் ரைட்டர் என்று 2 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணிக்கு 0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் இல்லாதவர்கள் என்றால் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி சாப்ட்வேர் டெவலப்பர் பணியை விரும்புவோர் என்றால் கட்டாயம் டிகிரி முடித்திருக்க வேண்டும். C, C++, Java ஆகியவற்றில் ஸ்கில்செட் இருக்க வேண்டும். கோடிங் எழுத தெரிந்திருக்க வேணடும். புராடெக்ட் டெவலப்மென்ட் லைப் சைக்கிளில் அனைத்து பிரிவுகளில் பங்களிப்பு செய்ய வேண்டும்.
மாறாக கன்டென்ட்/டெக்னிக்கல் ரைட்டர் பணியை விரும்புவோருக்கு டிகிரி முடித்து C, C++, Java ஆகியவற்றை ஸ்கில்செட்டாக வைத்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். சாப்ட்வேர் டாக்குமென்டேஷன் தொடர்பாக டெக்னிக்கல் ரைட்டிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். MS Word/Zoho Writer மற்றும் ஆன்லைன் ஹெல்ப் ஆத்தரிங் டூல்ஸ் ஆகியவற்றை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
வெப் டெக்னாலஜி மற்றும் அப்ளிகேஷன்ஸ் பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும். Grasps Domain மற்றும் டெக்னிக்கல் கான்செப்ட் தெரிந்திருக்க வேண்டும். மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கன்டென்ட் கொடுக்க தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக ரைட்டிங்கில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய மார்ச் 31ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications