முன்அனுபவம் வேண்டாம்.. ZOHO ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 0 முதல் 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பம் செய்வது நல்லது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அடுத்தடுத்து பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஜோஹோ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:
அதன்படி தற்போது ஜோஹோவில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சி (C), சி++ (C++) மற்றும் ஜாவா (Java) தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு 0 முதல் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் முன்அனுபவம் இல்லாமல் மேற்கண்ட தகுதி உள்ளவர்களும் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் புதிய சாப்ட்வேர் ப்ரோகிராமை டெவலப் செய்தல், டெஸ்ட் செய்தல் உள்ளிட்ட வேலைகளை செய்ய வேண்டும். மேலும் பிழையின்றி Code எழுத வேண்டும். சாப்ட்வேர் ப்ரோகிராமில் ஏற்படும் Debug, Troubleshoot தீர்க்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் புதிய தொழில்நுட்பத்தை கற்பதில் ஆர்வம் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வாகும் நபர்கள் எந்த இடத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது பற்றிய தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தேவையை பொறுத்து ஜோஹோவின் ஒரு இடத்தில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பார்த்தால் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை உள்ளிட்ட இடங்களில் பணி செய்யும் வாய்ப்பு என்பது கிடைக்கலாம். இல்லாவிட்டால் வேறு இடங்களில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இப்படியாக விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூ உள்பட பிற விபரங்கள் என்பது விண்ணப்பம் செய்யும்போது நீங்கள் கொடுக்கும் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோல் ஜோஹோவில் தொடர்ந்த பல இண்டர்வியூவுக்களில் பங்கேற்று வருபவர்கள் இதில் பங்கேற்க வேண்டாம். மீறி பங்கேற்று பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் அவர்களின் ஆஃபர் கடிதம் வாபஸ் பெறப்படும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications