Zoho நிறுவனத்தில் அசத்தலான வேலை.. விண்ணப்பம் செய்ய ரெடியா? மிஸ் பண்ணாதீங்க
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
தமிழகத்தில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது ஜோஹோ நிறுவனத்தில் டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் (Technical Support Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 6 மாத அனுபவம் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். விண்ணப்பிப்போருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அமெரிக்கா கஸ்டமர்களுடன் போனில் பேசும் திறமை இருக்க வேண்டும்.
கஸ்டமர்களுடன் இ-மெயில், சாட் முறையில் பேச வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். கஸ்டமர் சர்வீஸ் ஸ்கில், கஸ்டமர்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருக்க வேண்டும். தனித்து பணியாற்றும் திறமை இருக்க வேண்டும். புதிய டெக்னாலஜியை கற்று கொள்ள ஆர்வமாக இருக்க வேண்டும்.
நைட்ஷிப்ட் மற்றும் ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற ஆர்வமாக இருக்க வேண்டும். குறிப்பாக US Shift என்றாலும் தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்பத்துக்கான காலஅவகாசம் எப்போது வேண்டுமானாலும் முடியலாம் என்பதால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications