அனுபவம் வேண்டாம்.. ZOHO ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. தமிழ்நாட்டிலேயே பணி நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து தற்போது டெக்னிக்கல் ரைட்டர் (Technical Writer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை. பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான தகுதி உள்பட பிற விவரங்கள் வருமாறு:

தற்போது பலருக்கும் ஐடி பணியில் சேர வேண்டும் என்பது பெரும் கனவாக உள்ளது. குறிப்பாக பிரபல நிறுவனங்களில் பணியை பெற்று விட வேண்டும் என்று கருதி பலரும் முயன்று வருகின்றனர். அப்படி முயற்சி செய்வோரின் கனவை நிறைவேற்றும் வகையில் தான் ஜோஹோ ஐடி நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

zoho-hiring-for-technical-writer-role-in-tamil-nadu

தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோவில் டெக்னிக்கல் ரைட்டர் (Technical Writer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

அதேபோல் Fresher ஆக இருப்போரும் விண்ணப்பம் செய்யலாம். கல்லூரியில் ஏதேனும் பிரிவில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாமல் இந்த பணியை விரும்புவோர் என்றால் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி விண்ணப்பத்தாரர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் புதிய அம்சங்களை கற்க ஆர்வமாக இருக்க வேண்டும். ஹார்ட்வொர்க் செய்ய ஆர்வமாக இருக்க வேண்டும். அதிகம் வாசிக்கும் நபராக இருக்க வேண்டும். 2026ம் ஆண்டில் டிகிரி படிப்பை முடிப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய கூடாது.

அதேபோல் சமீபத்தில் அல்லது அடிக்கடி ஜோஹோவில் இண்டர்வியூவில் பங்கேற்றவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம். அதனையும் மீறி ஒருவேளை விண்ணப்பம் செய்து பணிக்கு தேர்வாகும் நபர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படுவார்கள். இதனால் எந்த இடத்தில் நியமனம் செய்தாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. திறமை, பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம்.

எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+