Zoho வேலைவாய்ப்பு.. இன்று மதியம் 2 மணி வரை விண்ணப்பிக்கலாம்.. பிப்., 22ல் இண்டர்வியூ - மதுரையில் பணி
மதுரை: பணி அனுபவம் இல்லாதவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை ஜோஹோ ஐடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 22ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இந்த பணியை பெற விரும்புவோர் இன்று மதியம் 2 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது டெக்னிக்கல் ரைட்டர்ஸ் (Technical Writers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இந்த பணிக்கு 2024, 2025ம் ஆண்டில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு டெக்னிக்கல் ரைட்டர்ஸ் பிரிவில் 0 - 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். 2026ம் ஆண்டில் படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
டிகிரி முடித்து டெக்னிக்கல் ரைட்டர்ஸ் பிரிவில் பணி அனுபவம் இல்லாதவர்களுக்கு Grammer பிழையின்றி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டெக்னிக்கல் கான்செப்ட் மற்றும் டெர்மினோலாஜிஸ் உள்ளிட்டவற்றை புரிந்து கொள்ளும் தன்மை இருக்க வேண்டும். எஸ்இஓ (SEO) மற்றும் சோசியல் மீடியா டிரெண்ட் உள்ளிட்டவற்றை பற்றிய அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்.
காம்ப்ளக்ஸ் டெக்னிக்கல் டாபிக்குகளை டிரான்ஸ்லேஷன் செய்ய தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 22ம் தேதி மதுரையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நடைபெற உள்ளது.
முன்னதாக இண்டர்வியூவில் பங்கேற்ற விரும்புவோர் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய இன்று(பிப்ரவரி 17) கடைசி நாளாகும். இன்று மதியம் 2 மணி வரை மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும். அதன்பிறகு விண்ணப்பம் செய்ய முடியாது. இதனால் தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications