அனுபவம் வேண்டாம்.. ZOHO ஐடி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை.. சென்னையில் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டில் ஜோஹோ பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசியில் இந்த நிறுவனங்களில் இயங்கி வருகின்றன.

it jobs job

இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி தற்போதைய அறிவிப்பு பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

ஜோஹோவில் தற்போது யூசர் எக்ஸ்பிரியன்ஸ் டிசைனர் (User Experience Designer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் 0 - 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

இருப்பினும் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. Figma, Adobe XD அல்லது அதேபோன்ற டூல்ஸ்களில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். Bachelor in Design, HCI அல்லது அதுசார்ந்த பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிய வேண்டும். இது முழுக்க முழுக்க UX Design பிரிவுக்கான பணியாகும். இதனால் அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

மேலும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+