ZOHO-வில் இன்டன்ஷிப் வாய்ப்பு.. 2021 டூ 2024 வரை படிப்பை முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.. செம சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் ரீசர்ஜ் மற்றும் டெவலப்மென்ட் கேட்டகிரியில் 3 பிரிவுகளில் இன்டர்ஷிப் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கு 2021 முதல் 2024 வரை படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை உள்பட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

it jobs job jobs

அந்த வகையில் தற்போது ஜோஹோ நிறுவனத்தில் இன்டன்ஷிப்க்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. ஐடி துறையில் சாதிக்க விரும்புவோருக்கு இன்டன்ஷிப் என்பது நல்ல பயிற்சியாக அமையும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

தற்போதைய அறிவிப்பின்படி ஜோஹோ நிறுவனத்தில் ரீசர்ஜ் மற்றும் டெவலப்மென்ட் பிரிவின் இன்டன்ஷிப் (Research and Development - Internship)க்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 3 வகையான இன்டன்ஷிப் உள்ளது. அதாவது இன்டன் - கம்ப்யூட்டிங் & மெஷின் லேனிங் (Intern - Computing & Machine Learing), இன்டன் - மெக்கானிக்கல் & ரோபோட்டிக்ஸ் ஹார்டுவேர் (Intern - Mechanical & Robotics Hardware), இன்டன் - எலக்ட்ரானிக்ஸ் & எம்பட்டட் (Intern - Electronic & Embedded) என 3 பிரிவுகளில் இன்டன்ஷிப் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதில் இன்டன் - கம்ப்யூட்டிங் & மெஷின் லேனிங்கை(Intern - Computing & Machine Learing) பொறுத்தவரை பில்டிங், டெஸ்ட்டிங், டெப்லாயிங் மெஷின் லேனிங், டீப் லேனிங் டெவலப்பிங் அல்காரிதமிக் சொல்யூஷன், நியூ பிளாட்பார்ம் டெவலப் செய்தல் உள்ளிட்ட பணிகள் இருக்கும்.

அதேபோல் இன்டன் - மெக்கானிக்கல் & ரோபோட்டிக்ஸ் ஹார்டுவேர் (Intern - Mechanical & Robotics Hardware) பிரிவு என்றால் சிஏடி (CAD) சாப்ட்வேர் பயன்படுத்தி மெக்கானிக்கல் டிசைன் செய்ய வேண்டும். ஃபேப்ரிகேஷன், அசம்பிளி அண்ட் டெஸ்ட்டிங், மோட்டார்ஸ்/அக்டூடேட்டர்ஸ் பயன்படுத்தி எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் டிசைன், மெக்கானிக்கல்/ரோபோட்டிக்ஸ் சிஸ்ட்ம்ஸின் சென்சார்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் உள்ளிட்ட பணிகள் இருக்கும்.

மாறாக இன்டன் - எலக்ட்ரானிக்ஸ் & எம்பட்டட் (Intern - Electronic & Embedded) பிரிவு என்றால் எம்பட்டட்/ரில் டைம் சாப்ட்வேர் டிசைன், கோடிங் மற்றும் டெஸ்ட்டிங், எம்சியூ மற்றும் ஃஎப்பிஜிஏ (MCU and FPGA) அடிப்படையில் எம்பட்டட் ஹார்ட்வேர் டிசைன் மற்றுமு் டெஸ்ட்டிங், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேரின் எம்பட்டட்/ரியல் டைம் கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பணிகள் இருக்கும்.

இந்த இன்டன்ஷிப்க்கு 2021 முதல் 2024 வரை கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிற நிறுவனங்களில் வேலை செய்து கொண்டிருந்தால் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்படாது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் கேரளா மாநிலம் கொட்டாரக்கரையில் நியமனம் செய்யப்படுவார்கள். இதனால் இன்டன்ஷிப்க்கு தேர்வாகும் கேரளா மாநிலம் கொட்டாரக்கரைக்கு செல்ல வேண்டியிருக்கும்.

இன்டன்ஷிப் எவ்வளவு காலம், இந்த காலத்தில் வழங்கப்படும் சலுகைகள், உதவித்தொகை உள்ளிட்ட விபரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் நல்ல ஆஃபர் வழங்கப்படலாம். இந்த பணிக்கு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி மதியம் 3 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஷார்ட்லிஸ்ட் செய்யப்படுவோர் கேரளாவின் கொட்டாரக்கரைக்கு சென்று சென்று இன்டர்வியூவில் பங்கேற்க வேண்டியிருக்கும். இன்டர்வியூ தேதி விபரம் அனைத்தும் கடிதம் அல்லது இ-மெயில் மூலம் ஷார்ட்லிஸ்ட்டில் தேர்வானவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்

இன்டன்ஷிப் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+