பிரச்சனை வரும் முன்னாடியே பீர் பாட்டில கொடுத்திருப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'குடிமகன்' ஒருவர் பார் பணியாளரை தலைசுற்ற வைக்கும் ஒரு பதிலை சொன்ன காட்சிதான் இது.

முன்னணி மதுபார் ஒன்றில் நுழைந்த 'குடிமகன்' மற்றும் சப்ளையர் நடுவேயான உரையாடலை பாருங்கள்.

A Tamil joke about bar

குடிமகன்: ஒரு பீர் பாட்டில எடுத்து தாப்பா. பிரச்சினை வரப்போகுது.

சப்ளையரும் அவர் சொன்னபடி எடுத்து குடிக்கிறார். மொத்தத்தையும் குடித்தார் குடிமகன்.

குடிமகன்: பிரச்சினை வர்றதுக்குள்ள இன்னொரு பாட்டிலை தாப்பா!

சப்ளையரும் எடுத்து கொடுக்கிறார். இப்படியாக சொல்லியே, 3 பாட்டிலை காலி செய்த பிறகு சப்ளையருக்கு சந்தேகம் வருகிறது.

சப்ளையர் கேட்கிறார், "சார் இப்படி குடிச்சிகிட்டே இருக்கீங்களே, காச கொடுங்க"

குடிமகன்: ஐயய்யோ... நான் சொன்னேன்ல, இந்தா வந்துடிச்சி பாரு பிரச்சினை.

சப்ளையர்: ?!?!?!?!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Tamil joke about bar and liquor drinking.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற