லூசாய்யா நீ.... செய்தியாளரை கண்ணு வேர்க்க வைத்த விவசாயி!
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக விவசாயி ஒருவரை பேட்டி எடுக்கச் சென்றுள்ளார் செய்தியாளர் ஒருவர்.
பேட்டிக்கு முன்னதாக விவசாயியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் செய்தியாளர். ஆனால், உரையாடலின் முடிவில் மயக்கம் அடைந்த செய்தியாளரை பேட்டி எடுப்பதற்கு முன்னதாகவே மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.
அப்படி அவர்கள் என்ன பேசினார்கள் எனப் பார்க்கலாமா...

என்ன சாப்பாடு?
செய்தியாளர்: உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..?
விவசாயி: கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?!

புல் தான்...
செய்தியாளர் : வெள்ளைக்கு..!
விவசாயி : புல்லு..!
செய்தியாளர் : அப்ப கருப்புக்கு..?!
விவசாயி : அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..!

எங்கே கட்டுவீங்க...?
செய்தியாளர் : இதை எங்கே கட்டி போடறீங்க..?
விவசாயி : எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?!

வெளி ரூம்ல தான்...
செய்தியாளர் : வெள்ளையை..!
விவசாயி : வெளில இருக்குற ரூம்ல..!
செய்தியாளர் : அப்ப கருப்பு ஆட்டை..?!
விவசாயி : அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!!

குளிக்கிறது எப்படி?
செய்தியாளர் : எப்படி குளிப்பாட்டுவீங்க..?
விவசாயி : எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?!

தண்ணி தான்...
செய்தியாளர் : கருப்பு ஆட்டை..!
விவசாயி : தண்ணில தான்...!
செய்தியாளர் : அப்ப வெள்ளையை..?!
விவசாயி : அதையும் தண்ணிலதான்..!

லூசாய்யா நீ....
பேட்டி எடுக்க வந்த செய்தியாளர் கடுப்பாகிறார்.
செய்தியாளர் : லூசாய்யா நீ... ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுறே... அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே இருக்கே..?!! "

அப்போ கருப்பு...?
விவசாயி : ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!!
செய்தியாளர் : ( ஆர்வமாகி ) அப்ப கருப்பு ஆடு..?!!

டேய்....
விவசாயி : அதுவும் என்னுடையது தான்..!!
செய்தியாளர் : டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!!
( பேட்டியெடுக்க வந்தவருக்கு எப்படி மயக்கம் வந்திருக்கும் என்பது இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்குமே...)
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications