ப்ளீஸ், இத கொஞ்சம் டேஸ்ட் பாருங்களேன்....
கையில் ஒரு பாட்டிலும் ஒரு ஸ்பூனுமாக ஆய்வகம் ஒன்றில் நுழைந்தார் ராமு.
அங்கிருந்த ஆய்வாளாரிடம் பேசுகிறார் இப்படி....

என்ன வேண்டும் சார்?
ஆய்வாளர்: வாங்க சார், என்ன வேணும் உங்களுக்கு?
ராமு: நான் ஒன்றைத் தருகிறேன், அதை ருசித்துப் பார்த்துச் சொல்கிறீர்களா...?

டேஸ்ட் பாருங்கள்....
ஆய்வாளர்: நிச்சயமாக... தாருங்கள்.
உடனடியாக ராமு, தன் கையில் வைத்திருக்கும் பாட்டில் இருந்து ஒரு ஸ்பூன் திரவத்தை ஊற்றி ஆய்வாளரிடம் கொடுத்தார் ராமு.

உப்பு கரிக்கிறது....
அதை வாயில் ஊற்றி, ருசித்துப் பார்த்த ஆய்வாளர் சற்றே முகச் சுளிப்புடன்....
ஆய்வாளர்: கொஞ்சம் உப்பாக இருக்கிறது சார்...

நல்லவேளை....
ராமு: நல்லவேளை உப்பாகத்தானே இருக்கிறது. இனிப்பாக இல்லையே....
ஆய்வாளர்: இல்லை சார். ஏன்.. என்னாயிற்று?

நன்றி சார்...
ராமு : என்னை டெஸ்ட் பண்ணின டாக்டர் எனக்கு சர்க்கரை நோய் இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து, எனது சிறுநீரை டெஸ்ட் பண்ணச் சொன்னார். நல்லவேளை நீங்கள் சர்க்கரை இல்லை, உப்பாக இருக்கிறது எனத் தெரிவித்து விட்டீர்கள். நன்றி.
( உவ்வே...உவ்வே...என்ன சத்தம் எனப் பார்க்கிறீர்களா... வேறென்ன ஆய்வாளரின் வாந்தி சத்தம் தான் இது...)












Click it and Unblock the Notifications