’என்னை கல்யாணம் பண்ணிக்குவியா...?’
நேரங்கெட்ட நேரத்தில் நாங்கள் இந்த ஆஃபர் தர்றோம், அந்த ஆஃபர் தர்றோம் என கடுப்பேத்தும் கம்பெனிக் கால்களால் வெறுத்துப் போன இளைஞர் ஒருவர் கஸ்டமர் கேருக்கு போன் செய்து கலாய்க்கிறார் இப்படி....

கல்யாண ஆசை...
பெண் : வணக்கம். ----- பேசுகிறேன். நான் தங்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் கூறுங்கள்?
இளைஞர் : என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறியா...?

சரியான எண் தான்....
பெண் : ( அதிர்ச்சியுடன்...) சார், நீங்கள் தவறான எண்ணுக்கு அழைத்து விட்டீர்கள் என எண்ணுகிறேன். நம்பரை மறுமுறை சரி பார்த்து அழைக்கவும். நன்றி...
இளைஞர் : இல்லை, நான் சரியாகத் தான் அழைத்திருக்கிறேன். சொல், என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா..?

சாரி சார்....
பெண் : மன்னித்துக் கொள்ளுக்கள் சார், எனக்கு உங்களைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை...
( வாடிக்கையாளரின் அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப் படும் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையுடன் பேசுகிறார்)

ஹனிமூன் போலாமா....
இளைஞர் : நல்லா யோசிச்சுச் சொல்லுங்க மேடம், காதல் திருமணம் செஞ்சுக்கிட்டீங்கனா சுவிட்சர்லாந்துக்கு ஹனிமூன் போகலாம், அரேஞ்ச் மேரேஜ்னா பாரீஸ் போகலாம்...
பெண் : எனக்குத் தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கவே விருப்பம் இல்லைனு சொல்லிட்டேனே அப்புறமும் ஏன் இதெல்லாம் சொல்றீங்க...

என்னக் கொடுமை சார் இது..?
இளைஞர் : சிம்பிளா வேணும்னா ரூ 20 ஆயிரம் செலவு பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம், கிராண்ட்டா வேணும்னா ரூ2 லட்சம் செலவாகும். பரவாயில்லையா....?
பெண் : எனக்கு விருப்பம் இல்லைனு எத்தனைத் தடவைச் சொல்றது சார்...
( சற்று கடுப்புடன் பேசுகிறார் அப்பெண்...)

இப்பப் புரியுதா...?
இளைஞர் : இப்போ புரியுதா... தேவையிலாம, தேவையில்லாதத பேசுனா எவ்ளோ கோபம் வரும்னு....கண்ட நேரத்துல கால் பண்ணி ‘அந்த ஆஃபர், இந்த ஆஃபர்'னு இனிமே யாராவது எனக்கு கால் பண்ணினா, உனக்குத் தான் நான் கால் பண்ணுவேன் புரியுதா...?
பெண் : நல்லா புரிஞ்சது சார். உங்க நம்பர 'டூ நாட் டிஸ்டர்ப்' லிஸ்ட்ல போட்டுடறேன்....

டவுட்டு...
பெண் : ஆனா, எனக்கு ஒரு டவுட்டு.... எனக்குப் பதிலா இந்தக் காலை ஒரு ஆண் ஆபிசர் அட்டெண்ட் பண்ணிருந்தா நீங்க என்ன பண்ணியிருப்பீங்க...?

அடப்பாவி....
இளைஞர் : ஹா...ஹா...ஹா...அப்பவும் ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா'னு தான் கேட்டுருப்பேன்...எப்பூடி
பெண் : ....!!!!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications