ஏய்..எப்புட்றா..வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
கணவன் மனைவி உரையாடல்கள் பல வீடுகளில் கேட்டிருப்பீர்கள்..காமெடி டைமில் கணவன் மனைவி பேசிக்கொண்டது உங்களுக்காக.
சென்னை: கணவனும் மனைவியும் ரொமான்ஸ் ஆக பேசிக்கொள்வதை ஒட்டுக்கேட்க முடியாது.. அடி தடி காமெடியை ஒட்டு கேட்டால் ஒரே சிரிப்புதான். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சரியான காமெடி டைம் வேண்டும் என்றால் கணவன் மனைவி சண்டையை ஒட்டுக்கேட்கலாம். இதோ உங்களுக்காக நாங்கள் தரும் கணவன் மனைவி கலக்கல் ஜோக்ஸ்.
மனைவி: காலையில எழுந்திருச்சி என்ன வைக்கிறதுன்னே தெரியலையே..
கணவன்: கவலைப்படாதே..மாவு வாங்கிட்டு வரேன் தோசை ஊத்திக்கலாம்
மனைவி: அட நீங்க வேறங்க.. வாட்ஸ் அப்ல என்ன ஸ்டேட்டஸ் வைக்கிறதுன்னு தெரியலை... போட்டோ, வீடியோ எதுவும் இல்லையே...
கணவன்: உனக்கு உன்னோட கவலை.. சரி சரி கடைக்கு போகணும்னு சொன்னியே போகலாமா?
மனைவி: சாயங்காலம் சீக்கிரம் ஆபிஸ் விட்டு வந்துருங்க ஷாப்பிங் போகலாம்...

கணவன்: கடை வீதியில்..செருப்பு வாங்கறதுக்கு ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக்கிற.. என் செருப்பே தேய்ந்து போயிடும் போல இருக்கே..
மனைவி: உங்களைத்தான் அவசரப்பட்டு செலக்ட் பண்ணிட்டேன்.. காலுக்கு செருப்பையாவது சரியா பார்த்து செலக்ட் பண்ணிக்கிறேனே.
கணவன்: அதுவும் சரிதான்... நான்தான் இதைப்பத்தி யோசிக்காம விட்டுட்டேன்.
மனைவி: ஏங்க நம்ம வீட்ல சமையல் செய்றவங்களை நிறுத்திட்டு இனிமே நானே சமைக்கப்போறேன் எனக்கு எவ்வளவு சம்பளம் தருவீங்க
கணவன்: உனக்கு எதுக்குடா செல்லம் சம்பளம்? நீ சமைக்க ஆரம்பிச்சா என்னோட இன்சூரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே கிடைக்கும்.
மனைவி: நல்ல நாள் அதுவுமா என்ன பேச்சு பேசறீங்க..
கணவன்: என்னது நல்லா நாளா? என்ன விஷேசம் இன்னைக்கு?

மனைவி: உங்களுக்கு எதுதான் ஞாபகத்துல இருக்கும்?இன்னைக்கு கல்யாண நாளுங்க வாங்க அப்படியே கோவிலுக்கு போகலாம்..
கணவன் : வரலைன்னா விடப்போறியா? அங்க போய் சாமிக்கு அர்ச்சனை பண்றதுக்குள்ள இங்க வீதியில நீ அர்ச்சனையை ஆரம்பிச்சிடுவே.. வா போகலாம்.
மனைவி: எனக்கு ஒரு டவுட்டு அதை இன்னைக்கு கேட்கலாமா?
கணவன் : என்னடா செல்லம் கல்யாண நாள் அதுவுமா உனக்கு டவுட் வருது..
மனைவி: மும்தாஜ் செத்துப்போனதுக்கு அப்புறம்..ஷாஜகான் தாஜ்மகாலை கட்டினார். நான் இறந்த பின்னாடி நீங்க என்ன கட்டுவீங்க.
கணவன் : என்ன.. வேற ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டுவேன்.
ஏய் எப்புட்றா..அப்புறம் கடை வீதியில நடந்த அர்ச்சனையே வேற லெவல்தான் போங்க..
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications