பல்டி அடிக்கிறதுல நானெல்லாம் பிஎச்டி படிச்சவனாக்கும்... கணவன் மனைவி ஜோக்ஸ்

கணவன் மனைவி ஜோக்ஸ் சிரிக்க மட்டுமே யார் மனதையும் புண்படுத்துவது நோக்கமல்ல.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நடைபெறும் உரையாடல்கள் சில சமயங்களில் சண்டையை வரவழைத்து விடும். சில சமயங்களில் அதிக நேரம் காமெடியாக நீளும். அதுவும் மாமனார் மாமியாரை வைத்து சீண்டி மனைவியின் கோபத்தை உரசிப்பார்ப்பது கணவர்களுக்கு அலாதியான சுகம். மனைவிகள் சும்மா விடுவார்களா? பதிலுக்கு கணவர் வீட்டு பரம்பரையையே சந்திக்கு இழுத்து விட்டு விடுவார்கள். அப்படி ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தை ஒட்டு கேட்ட போது நமக்கு கிடைத்த கண்டென்ட் தான் இந்த காமெடி.

கணவன்: ஏய் அங்க பாரு அங்க பாரு உங்க சொந்தக்காரங்க எல்லாம் வந்துகிட்டு இருக்காங்க..

(கிச்சனில் சமைத்துக்கொண்டிருந்த மனைவி ஓடிவந்து வெளியே வந்து பார்த்த போது குரங்குகள் வரிசையாக வந்து கொண்டிருந்தன அதைப்பார்த்த மனைவிக்கு வந்ததே கோபம். அடுத்து மனைவி சொன்னதுதான் செம ட்விஸ்ட்)

மனைவி: வாங்க மாமா... வாங்க அத்தை..வாங்க கொழுந்தனாரே.. வாங்க நாத்தனாரே என்று அழைக்க.. கணவன் செம பல்பு வாங்கினார். இருந்தாலும் மனைவி சொன்னதற்கு பதில் கொடுக்க வேண்டுமே

Husband and wife jokes: Life and family comedy jokes

கணவன்: "ஏய்..என்னடி வாய் ரொம்ப நீளுது..அவங்க எல்லாம் என்னோட அப்பா அம்மாவா?"

மனைவி: நீங்கதானங்க என்னோட சொந்தம்னு சொன்னீங்க.. உங்கள கட்டிக்கிட்டதுக்கு அப்புறம் உங்க வீட்டு ஆளுங்கதாங்க என்னோட சொந்தம் அதனாலதான் அப்படி வரவேற்பு கொடுத்தேன்.

கணவன்: ( பேச்சை மாற்ற வேண்டுமே) சரி சரி ஊர்ல இருந்து அப்பா அம்மா வரப்போறாங்களாம் போன் வந்துச்சு..

மனைவி : "எனக்கு ஒரே குளிர் ஜுரமா இருக்கு என்னால எந்த வேலையும் செய்ய முடியாது.. அவங்களை இன்னொரு நாளைக்கு வரச்சொல்லுங்க"..

கணவன்: அப்படியா இரு உடனே நான் போன்ல சொல்லிடுறேன்.. "அத்தை.. மாமா உங்க பொண்ணுக்கு உடம்பு சரியில்லையாம் நீங்க அடுத்த மாசம் வருவீங்களாம்"...

மனைவி: "என்னது எங்க அப்பா அம்மாவா? அதை ஏன் நீங்க தெளிவா சொல்லலையே"..

Husband and wife jokes: Life and family comedy jokes

கணவன்: "நீ எங்க சொல்ல விட்டே.. நான் சொல்லி முடிக்கிற முன்னாடியே உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டியே..( மைண்ட் வாய்ஸ்சில்.. நல்ல வேளை நான் தப்பிச்சிட்டேன்)

மனைவி: "உங்க அப்பா அம்மா பத்தி நான் சொன்னதுக்கு நீங்க என்ன என்ன பழி வாங்கிட்டீங்கல்ல..இருங்க உங்கள நான் வச்சிக்கிறேன்".

கணவன்: (மைன்ட் வாய்ஸ்) அடியே நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்.. பல்டி அடிக்கிறதுல நான் பிஎச்டி வாங்கியிருக்கேனாக்கும்..எங்க கிட்டயேவா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+