Jokes: கடுப்பான கஸ்டமர் கேரும்.. கன்பியூஸ் ஆன டாக்டரும்
பரபரப்புகளும், சோகங்களும், இலக்குகளும், மன அழுத்தங்களும் நிறைந்த இந்த உலகத்தில் நம் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சிரிப்பு முக்கியம். அதை ஏற்படுத்தும் நகைச்சுவையைதான் இந்த ஜோக்ஸ் மூலம் நாம் வழங்குகிறோம்
ஜோக் - 1
சரவணன்: ஹலோ சார்! இது கஷ்டமான கேர் தானே?
கஸ்டமர் கேர்: ஆமா சார்... ஆனா இது கஸ்டமர் கேர்.. கஷ்டமான கேர் இல்ல! உங்களுக்கு உதவுறதுக்காகதான் நாங்க இருக்கோம். என்ன உதவி வேண்டும்?
சரவணன்: எனக்கு 5 வயசுல ஒரு பையன் இருக்கான் சார். சரியான வாண்டு, துறுதுறுன்னு இருப்பான்.
கஸ்டமர் கேர்: சின்ன பசங்க அப்டிதான் சார் இருப்பாங்க.. நாமதான் சமாளிக்கனும்.
சரவணன்: அது விடுங்க சார்.. அவன் நீங்க கொடுத்த சிம் கார்ட முழுங்கிட்டான்!
கஸ்டமர் கேர்: அய்யயோ! அப்ப உடனே டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க.
சரவணன்: அத அப்றம் பாத்துக்கலாம் சார்.. சிம் கார்ட்ல 500 ரூபா பேலன்ஸ் இருந்துச்சு.. அவன் பேசுனா காசு போவுமா?
கஸ்டமர் கேர்: கியோவை அழைத்தமைக்கு நன்றி... ஃபோன வைடா டேய்!

ஜோக் - 2
மனைவி: ஏங்க! அந்த டாக்டர் இந்த நடுராத்திரி நேரத்துல கத்திய தூக்கிட்டு எங்க போறாரு..?
கணவன்: அவருக்கு தூக்கத்துல ஆப்பரேசன் செய்ற வியாதியாம்.. உனக்கு தெரியாதா?
மனைவி: எனக்கு தெரியாதே.. ஏங்க அவருக்கு அப்டி ஆச்சு?
கணவன்: அத டாக்டர் கிட்டதான் கேக்கனும். இன்னொன்னு தெரியுமா? அவருக்கு குளிர் காலத்துல ஆப்பரேஷன் பன்றதா இருந்தா ரொம்ப புடிக்குமாம்.
மனைவி: அப்டியா? கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க மாமா வயித்து வலிக்கு காட்ட போனப்ப கூட குளிர் காலத்துல சர்ஜரி பன்னலாம்னு சொல்லிதான் அனுப்பி இருக்காரு.. ஏன் இப்டி பன்றாரு?
கணவன்: அவரு ஒரு டுபாகூர் டாக்டர். அப்பரேசன் செய்றப்போ கை நடுக்குனா குளிர்ல நடுங்கிருச்சுன்னு சொல்லி சமாளிக்கலாம்ல.. அதான்..
மனைவி: இப்பவாச்சும் சொன்னீங்களே! என் மாமா தப்பிச்சாரு..
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications