Jokes: முன் வைத்த காலை பின்னாடி வைக்கலாமா? முதல்நாள் வகுப்பு அலப்பறைகள்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ளன. முதல்நாள் வகுப்பில் நடக்கும் அனுபவங்கள், கிடைக்கும் புதிய நண்பர்கள், பாடங்கள் நடத்தப்படாத ஜாலியான நாட்கள் இன்று நம் நினைவில் நிழலாடும். அந்த வகையில் முதல்நாள் வகுப்பில் நடப்பதைபோன்ற ஒரு கற்பனை நகைச்சுவை..
ஆசிரியர்: மாணவர்களே... எல்லாரும் முதல் நாள் கிளாசுக்கு வந்திருக்கீங்க! நான் சொல்றத நல்லா மனசுல பதிய வைக்கனும்... எக்காரணத்த கொண்டும் முன்வெச்ச கால பின்னாடி வைக்கவே கூடாது... சரியா..?
மாணவர்கள்: ஓகே சார்..

(தாமதமாக வந்த மாணவர் அனுமதியின்றி உள்ளே வருகிறார்..)
ஆசிரியர்: டேய்... வெளியே போ! வரது லேட்டு... இதுல அனுமதி வாங்காம வரியா?
மாணவன்: சாரி சார்.. இனிமே சீக்கிரமா வந்துடுறேன், ஆனால் இப்போ வெளிய போக மாட்டேன்.
ஆசிரியர்: சொன்னா கேக்க மாட்டியா?
மாணவன்: நீங்க சொன்னது கேட்டுதான் சார் முன் வெச்ச கால பின்னாடி வைக்க மாட்டேன்னு உறுதியா நிக்கிறேன்.
ஆசிரியர்: இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. உள்ள போ! (மனதிற்குள்: இனி இந்த அட்வைச யாருக்கும் சொல்லக்கூடாது)
மற்றொரு மாணவன்: சார், முன்வெச்ச கால பின்னாடி வைக்க கூடாதுன்னு சொல்றீங்க.. கலர் கயிறு கட்டிட்டு வரக்கூடாதுன்னு ஆர்டர் போட்டு அடுத்த நாளே கட்டிட்டு வர தடை இல்லன்னு சொல்லிட்டீங்களே..
ஆசிரியர்: அது வந்து...
(சொல்லி முடிப்பதற்குள் மற்றொரு மாணவன் எழுந்து...)
மற்றொரு மாணவன்: ஆமா சார்... என் தம்பி கூட போன வருசம் எல்.கே.ஜி. கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சான். இந்த வருசம் கவர்மெண்ட் ஸ்கூல்ல யு.கே.ஜி. இல்லன்னு கேள்விப்பட்டு நிறைய காசு கொடுத்து பிரைவேட் ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க... கடைசில திரும்ப யுகேஜி இருக்குன்னு சொல்லிட்டாங்க... எங்களுக்கு தானே காசு வேஸ்டு
ஆசிரியர்: தம்பி... அரசியல் பேசாத!
மற்றொரு மாணவன்: கலைஞரே எங்க வயசுல அரசியலுக்கு வந்துட்டாராம்... நாங்க பேசுனா தப்பா சார்
ஆசிரியர்: விடுங்கடா... நான் சொன்னது தப்புதான்!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications