Joke : சார்.. சார்.. இது அப்படியில்லை.. சுற்றுலா பரிதாபங்கள்!
சென்னை: பொதுவாக எல்லோரும் தெரியாத ஊரில் சுற்றுலாவிற்கு சென்றால் கண்டிப்பாக ஏதோ ஒரு முறை ஏமாற்ற பட்டிருப்போம். அதே போல நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ ஏமாற்றப்பட்டு அதை நினைத்து இன்றும் நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றால் கமெண்டில் சொல்லுங்க..
இப்படித்தான் நண்பர் ஒருவர் சுற்றுலாவிற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். போன இடத்தில் கையை வைத்து கொண்டு சும்மா இல்லாமல், ஒவ்வொரு பொருளாக பார்த்து பார்த்து ரசித்து, வாங்கவும் செய்தார்.

அப்படியே அருகில் இருந்த ஒரு அழகான கைவினை பொருள் கடையை பார்த்தார். அவருக்கு எல்லா பொருளும் பிடிக்க ஆரம்பித்தது. இருந்தாலும் அங்கு இருந்த ஒரு வித்தியாசமான கை விசிறியை எடுத்து பார்த்தார். அதை பார்த்த கடைக்காரர் வேகமாக வந்து வாங்குறீங்களா சார் என்றார்.
உடனடியாக, நண்பரும் ஆமாம் என்ன விலை என்றார்.
1000 என்று சொல்ல இவரும் வாங்கிவிட்டார்கள். கடையை விட்டு வெளியே வந்து அதை விரித்து முகத்தின் முன்பு விசிற, அதன் கைப்பிடி உடைந்தது. இவருக்கு அச்சச்சோ இப்படி ஆகிவிட்டதே என வருத்தம் அடைய, உடன் இருந்த இன்னொரு நண்பர் கொடுத்து விட்டு பணத்தை திரும்ப கேட்கலாம் என அறிவுரை சொன்னார்.
இருவரும் மீண்டும் அந்த கடைக்குள் நுழைந்தார்கள். இதை பார்த்த கடைக்காரர், சார் வேற எதுவும் வேணுமா என்று கேட்க, நண்பரோ அட நீங்க கொடுத்ததே பிஞ்சு விழுந்திருச்சு, பணத்தை திரும்ப கொடுங்க என்று சொன்னார்.
ஆஹா என உஷாரான கடைக்காரர், சார் அந்த கை விசிறியை நீங்க எப்படி உபயோகித்தீர்கள் என்று கேட்டார்.
நண்பரோ, விசிறியை எடுத்து விரித்து, கையை ஆட்டி விசிறி காண்பித்தார்.
அச்சச்சோ சார்..சார்.. இதை அப்படி செய்யக்கூடாது என்று பதற..
நண்பர் அதிர்ச்சியில் வேற எப்படிங்க என கேட்டார்.
கடைக்காரர் விசிறியை விரித்துவிட்டு, அவர் தலையை அந்த பக்கம், இந்த பக்கம் ஆட்டி காண்பித்தார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications