ஃபேஸ்புக்கில் விஜயகாந்த்தைக் கலாய்த்து பிரபலமாகும் "செல்ஃபி புள்ள..." பாடல்!
சென்னை: கத்தி படத்தில் வரும் செல்ஃபி புள்ள பாடலை வைத்து ஃபேஸ்புக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கிண்டல் செய்கிறார்கள். அதில் முதல்வர் ஜெயலலிதாவையும் இணைத்துள்ளதால் பரபரப்பும் கூடியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் கத்தி படத்திற்கு கொலவெறி பாடல் புகழ் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி நடைபெறுகிறது.

கத்தி படத்தில் விஜய் லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள என்ற பாடலை பாடியுள்ளார். இதையடுத்து அனிருத் விஜய்யுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி, தனியாக ஒரு செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் செல்ஃபி போட்டியையும் அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த பாடலை வைத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஃபேஸ்புக்கில் கிண்டலடிக்கிறார்கள். விஜயகாந்த் கையில் கேமராவை வைத்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து ஏ புள்ள செல்வி லெட்ஸ் டேக் எ செல்ஃபி என்கிறாராம். அதற்கு ஜெயலலிதா கொன்னுடுவேன் என்பது போன்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.
விஜயகாந்த்தைக் கிண்டலடித்து ஃபேஸ்புக்கில் ஏகப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக விஜயகாந்த்தைக் கிண்டலடிப்பதற்கு ரெஸ்ட் கொடுத்திருந்தனர். இப்போது மீண்டும் களம் இறங்கியுள்ளனர் கிண்டல்காரர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications