அவரா சொன்னார் அப்படி...!
அந்த வேலைக்காரப் பெண் ரொம்ப நாளாக அந்த எஜமானியம்மா வீட்டில் வேலை பார்த்து வருகிறாள். எஜமானியம்மாளோ செம கஞ்சம். பார்த்து பார்த்துதான் சம்பளம் கொடுப்பாள். இதனால் கடுப்பாகிப் போன வேலைக்காரி, இதெல்லம் வேலைக்காகாது, பேசாம கேட்டுட வேண்டியதுதான் என்று முடிவு செய்த, அம்மா, இந்த மாசத்திலிருந்து எனக்கு சம்பளத்தை ஏத்துங்க என்று கூறி விட்டாள்.
எதுக்குடி திடீர்னு சம்பளத்தைக் கூட கேக்குற என்று எஜமானியம்மாள் எகிற, காரணம் இருக்கும்மா, அதனால்தான் கேட்கிறேன் என்றாள் வேலைக்காரப் பெண். அது என்ன காரணம் சொல்லேன் என்று எஜமானியம்மாள் கேட்க காரணத்தை அடுக்கினாள் வேலைக்காரப் பெண்.
வேலைக்காரப் பெண் - நான் உங்களை விட சூப்பரா 'அயர்ன்' செய்றேன்ல, அதுக்காகத்தான்.
எஜமானி - யார் சொன்னது என்னை விட நீ நன்றாக அயர்ன் செய்கிறாய் என்று?
வேலைக்காரப் பெண்- 'அவர்'தான்!.
எஜமானி - (அதிர்ச்சி அடைந்தபடி) என்னது அவரா, அவரா சொன்னார் அப்படி?
வேலைக்காரப் பெண் - ஆமாம்மா அவர்தான் சொன்னார். அடுத்து, நான் உங்களை விட நன்றாக சமைக்கிறேனாம்.
எஜமானி- எந்த முட்டாள் சொன்னது அப்படி?
வேலைக்காரப் பெண் - வேற யாரு, அவர்தான்.
எஜமானி - அவரா???
வேலைக்காரப் பெண்- அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், உங்களை விட படுக்கையில் நான்தான் நன்றாக சுகம் தருகிறேனாம். அதனாலதான் கூடுதலா சம்பளம் கேட்கிறேன்மா என்றாள் வேலைக்காரப் பெண் அமைதியாக.
இதைக் கேட்டதும் கொதிப்படைந்து, பற்களை நறநறவென்று கடித்தபடி இப்படியா சொன்னார் எனது கணவர், அதுவும் உன்னிடம் போயா இப்படிச் சொன்னார் என்று கேட்டார்.
அதைக் கேட்ட வேலைக்காரப் பெண் எந்தப் பதட்டமும் இல்லாமல், அவர் இல்லைம்மா, நம்ம வீட்டுத் தோட்டக்காரன்தான் இதையெல்லாம் சொன்னான் என்று கூறி நிறுத்த.. ...
எஜமானி -உனக்கு எவ்வளவு சம்பள உயர்வு வேண்டும். அதை மட்டும் சொல் ப்ளீஸ்...!!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications