"ஒன்இந்தியா தமிழில்" உங்கள் குழந்தைகள் போட்டோக்கள் வர வேண்டுமா? ரொம்ப ஈஸி!

Subscribe to Oneindia Tamil

ஹலோ மக்களே! சம்மர் ஹாலிடே வந்தாச்சு.. பலரும் விடுமுறையை செலவழிக்க சொந்த ஊர், சுற்றுப்பயணம் என எதாவது ஒரு திட்டம் வைத்திருப்பீர்கள் இல்லையா. அதோடு இந்த ஒரு வாய்ப்பையும் உங்கள் குழந்தைகளுக்கு நங்கள் கொடுக்க போகிறோம்.

என்னவென்று யோசித்துக் கொண்டிருக்கீங்களா, அதை சொல்லத்தானே வந்திருக்கோம். இப்போ அதிகமா சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் செய்யும் கின்னஸ் ரெகார்ட் முதல் சின்ன சின்ன குறும்புகள் வரை வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன.

Kids Fun Activities and Pose Photos In Tamil During Summer Season

அது போல உங்கள் குழந்தைகளின் அழகிய தருணங்களை புகைப்படம் எடுத்து வைத்துள்ளீர்களா? கின்னஸ் சாதனை செய்தால் தான் நாளிதழ்களில் வர முடியும் என்று எண்ணும் பெற்றோரின் கவலையை போக்க இந்த வாய்ப்பு உதவும். எப்படின்னு யோசிக்கிறீங்களா?

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகள் வரையும் சின்ன சின்ன கிறுக்கல்கள், அது சுவரோவியமோ அல்லது பேப்பர் ஓவியமோ பெற்றோர்களுக்கு அது பெரிய சாதனை தான். அப்படி உங்கள் குழந்தை செய்த செயல்கள் எதை பார்த்து நீங்கள் வியந்தீர்களோ. அதை புகைப்படமாக எடுத்து எங்களுக்கு அனுப்பலாம்.

ஓவியம் மட்டும் தான் அனுப்ப முடியுமா? வேறு எதுவும் அனுப்ப முடியாதா என்ற சந்தேகம் இருக்கா? அதற்கு உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு, உங்கள் மகனோ மகளோ கார், பில்டிங் பிளாக் என எதுவாக இருந்தாலும் அவர்கள் ஆர்வமாக செய்யும் செயல்களை எங்களுக்கு புகைப்படமாக அனுப்பலாம்.

அட நீங்க வேற என் பாப்பா எப்பவும் டிவி தான் விரும்பி பாப்பா, அதில் வரும் கார்ட்டூன் கேரக்டேர்கள் என்றால் அவளுக்கு அவ்வளவு பிரியம் என்று சொல்கிறீர்களா? உங்களுக்கும் வாய்ப்பு இருக்கு, ஆமாம் உங்கள் குழந்தை விரும்பி பார்க்கும் கார்ட்டூன் மற்றும் அவர்கள் அதில் இருந்து கற்று கொள்ளும் வார்த்தைகள் என எதுவாய் இருந்தாலும் உங்கள் குழந்தையின் புகைப்படத்துடன் எங்களுக்கு அனுப்பலாம் அதுபோல உங்கள் குழந்தைகளின் வீர தீர செயல்கள் எதுவாக இருந்தாலும் அதை போட்டோவாக அனுப்பலாம். வீட்டில் சின்னதாக குட்டிக்கரணம் போட்டாலும் சரி, இல்லை கராத்தேயில் கலக்கினாலும் சரி, சிலம்பை எடுத்துக்கொண்டு பலரையும் மிரள வைத்தாலும் சரி எல்லாவற்றையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த மாதிரி எதாவது செய்தால் தான் உங்கள் செய்தி தளத்தில் வருமா என்று கேட்டால், நீங்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு விஷயத்தை சொல்ல போகிறோம். உங்கள் குழந்தையின் முதல் நடை, முதல் பயணம், முதல் உணவு, பள்ளி உடையில் முதலில் நீங்கள் எடுத்த புகைப்படம், கலைநிகழிச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள், மாறுவேடம் இட்ட புகைப்படங்கள், முதல் பிறந்தநாள் என உங்கள் குழந்தைகளை பார்த்து நீங்கள் நெகிழ்ந்த தருணத்தை எங்களுக்கு அனுப்பலாம்.

மேலும் இந்த புகைப்படங்கள் இப்பொது எடுத்ததாக இருக்க வேண்டியது இல்லை. உங்கள் குழந்தைகளின் பழைய புகைப்படங்கள் நீங்கள் சேமித்து வைத்த நினைவுகள் என நீங்கள் பகிரலாம். புதிதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

இந்த புகைப்படங்களை வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை எங்கள் ஒன் இந்தியா தமிழ் செய்தி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளோம். உங்களது நினைவுகளை குழந்தையின் புகைப்படத்துடன் எங்களுக்கும் பகிர்ந்து அவர்களுக்கும் இதை ஒரு நினைவு பொக்கிஷமாக மாற்ற மறந்து விடாதீர்கள். வாய்ப்பை தவற விடாதீர்கள்.

முக்கிய குறிப்பு: உங்கள் குழந்தை புகைப்படத்துடன், படிப்பு, வயது குறிப்புகளை [email protected] என்ற இந்த மெயில் ஐடிக்கு அல்லது 91489 26682 என்ற இந்த வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+