Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: என் பெரு கோல்ட் நான் பண்றதெல்லாம் போல்ட் ! சுட்டி பெண் கோல்டிலாக்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டிஸ், உங்கள்ல நிறைய பேருக்கு கற்பனை கதைகள் பிடிக்கும் இல்லையா, இன்னைக்கு உங்களுக்காக அது மாதிரி தான் ஒரு கதைய சொல்ல போறேன். நீங்களும் ஹாப்பியா படிங்க.

ஒரு காட்டுக்கு பக்கத்துல அழகான குட்டி வீடு இருந்துச்சு. அங்க ஒரு அம்மா அவங்க பொண்ணு கோல்டிலாக்ஸ் ஹாப்பியா வாழ்ந்து வந்தாங்க. கோல்டிலாக்ஸ் ரொம்ப சுட்டியான பெண், அப்புறம் அவளுக்கு ரொம்ப நீளமான முடி, அது கோல்டன் கலர்ல இருக்கும். காலைல விடிந்ததும் கோல்டிலாக்ஸை அவங்க அம்மா எழுப்புரத்துக்காக வந்தாங்க. அவங்க, கோல்டிலாக்ஸ் ,கோல்டிலாக்ஸ் எழுந்திரிமா, னு சொல்லிகிட்டே உள்ளே வந்தாங்க. கோல்டிலாக்ஸ் ' அம்மா இன்னும் அஞ்சு நிமிஷம் ப்ளீஸ்மா' னு சொன்னா. அவங்க அம்மா பெட்ஷீட்டை எடுத்து பார்த்த கோல்டிலாக்ஸ் இல்ல. அம்மா பயந்துட்டாங்க பயந்துட்டாங்க சொல்லிட்டே கோல்டிலாக்ஸ் கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வந்தாள்.

Kids story in tamil : Goldilocks and the three bears

அம்மாவும் சிரித்துக்கொண்டே வந்து பிரேக்பாஸ்ட் சாப்பிடு னு சொல்லிட்டு டைனிங் டேபிள்ல சாப்பாடு எடுத்து வச்சிட்டு இருந்தாங்க. ரெண்டு பெரும் சாப்பிடு இருக்கும்போது அம்மா சொன்னாங்க , கோல்டிலாக்ஸ் நீ பாட்டிக்கு கொஞ்சம் பழங்கள் கொடுத்துட்டு வா, பாட்டியும் உன்ன பாக்குறதுக்கு ஆவலா இருக்காங்க. கோல்டிலோக்ஸ் சொன்னா ' இல்லமா நான் இன்னைக்கு காட்டுக்குள்ள பொய் கொஞ்சம் பெரிஸ் பறிச்சுட்டு வரேன். அம்மா சொன்னாங்க ,'கோல்டிலாக்ஸ் நீ எப்படி தனியா போவ, கோல்டிலோக்ஸ் சொன்னா ' அம்மா உங்க கூட நான் நெறைய தடவை வந்துருக்கேன் என்னால முடியும்'.

கோல்டிலோக்ஸ், ஆனா ரொம்ப தூரம் காட்டுக்குள்ள போயிடாத அங்க மிருகங்கள் இருக்கும், அம்மா சொன்னாங்க. ஒகே மாம் , நான் பத்திரமா திரும்பி வந்திடுவேன்னு கோல்டிலோக்ஸ் சொன்னாள்.

கோல்டிலோக்ஸ் ரொம்ப சந்தோசமா துள்ளி குதிச்சிகிட்டே ஒரு குட்டி பழக்கூடைய தூக்கிட்டு காட்டுக்கு போக ஆரம்பிச்சா. அவ அம்மா கூட போன இடங்களை பார்த்து பார்த்து பெரிஸ பறிச்சுக்கிட்டே காட்டுக்குள்ள வந்துவிட்டாள். அங்க ஒரு முயல் கூட்டத்தை பார்த்தாள், அத துரத்திக்கிட்டே போனாள். அங்க ஒரு பூந்தோட்டத்தை பார்த்தால் அத ரசிச்சுகிட்டே நடக்க ஆரம்பித்தாள்.

அந்த காட்டுக்குள்ள ஒரு அப்பா கரடி , ஒரு அம்மா கரடி , அப்புறம் ஒரு குட்டி கரடியும் இருந்துச்சு. அப்பா கரடி கொஞ்சம் பெருசா இருந்துச்சு. அம்மா கரடி அத விட கொஞ்சம் சின்னதா இருந்துச்சு. குட்டி கரடியோ ரொம்ப குட்டி குழந்தை போல இருந்துச்சு. அவங்க வீட்ல டேபிள், ஷேர், கட்டில் எல்லாம் அவங்களுக்கு ஏத்தமாரி அவங்களே செஞ்சி வச்சிருந்தாங்க. சாப்பாடு சமைச்சி வச்சி சாப்பிடலாம்னு வந்த ஆனால் அது மிகவும் சூடாக இருந்துச்சு. அப்பா கரடி சொல்லிச்சு கொஞ்ச நேரம் நம்ம வெளிய போயிட்டு வரலாம். அதுக்குள்ளே சாப்பாடு ஆறிடும் வந்து சாப்பிட்டுக்கலாம், அப்பா கரடி சொன்னதும் எல்லாரும் வெளிய போனாங்க.

கோல்டிலாக்ஸ் நடந்து நடந்து ரொம்ப டயர்ட் ஆகிவிட்டாள். அவளுக்கு பசிக்கவும் செய்தது. அப்போதுதான் அவளுக்கு புரிந்தது வீட்டை விட்டு ரொம்ப தூரம் வந்துவிட்டோம் என்று. வீட்டுக்கு செல்லும் வழியையும் மறந்துவிட்டாள் கோல்டிலாக்ஸ் . ஆனாலும் முயற்சியை விடாமல் நடக்க ஆரம்பித்தாள். அப்போது காட்டுக்குள் இருந்த கரடியின் வீடு கோல்டிலாக்ஸ் கண்ணில் பட்டது. அவர்களது சாப்பாட்டின் வாசனை கோல்டிலாக்ஸ் மூக்கை துளைத்தது. கோல்டிலாக்ஸ் வீட்டிற்குள் சென்றாள். அங்கு ஒரு டேபிள் சுற்றி மூன்று ச்சேர்கள் இருந்ததை பார்த்தாள். அது ஒவ்வொவரு ச்சேரும் அளவில் பெரியதும் , சிறியதுமாக இருந்தது.

அந்த டேபிலில் மூன்று பௌல் இருந்தது. அதில் சாப்பாடு மற்றும் ஹனி கேக் இருந்தது. பௌல் ஒன்று பெரியதாக, ஒன்று மீடியம் அளவில், மற்றோன்று சிறியதாக இருந்தது. கோல்டிலோக்ஸ் பெரிய சைஸ் சேரில் அமர்ந்தாள், அது அவளுக்கு வசதியாக இல்லை. மிடில் சைஸ் சேரில் உக்கார்ந்தாள் அது மிகவும் மிருதுவாக இருந்தது. கடைசியா குட்டி சேரில் அமர்ந்தாள் அது அவளைவிட மிகவும் சின்னதாக இருந்தது. அவளின் எடை தாங்க முடியாமல் உடைந்தது.

கோல்டிலோக்ஸ்க்கு பசி வேறு, நின்று கொண்டே பெரிய பௌலில் இருந்து சாப்பாடை சாப்பிட்டால் அது மிகவும் சூடாக இருந்தது. மீடியம் சைஸ் பௌலில் இருந்த சாப்பாடு மிகவும் கட்டியாக இருந்தது, அவள் இறுதியில் குட்டி பௌலில் இருந்த ஹனி கேக்கை சாப்பிட்டாள். அது மிகவும் ருசியாக இருந்தது. அதில் இருந்த அனைத்தையும் சாப்பிட்டு முடித்தாள். அவளுக்கு நடந்து வந்ததால் அசதியாக இருந்தது. குட்டி துக்கம் போட்டால் அருமையாக இருக்கும் என எண்ணினாள். மாடிக்கு சென்றாள். பெட்ரூமில் மூன்று விதமான கட்டில் இருந்தது. அதில் குட்டி கரடியின் கட்டிலை தேர்வு செய்தாள். அது அவளுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

இதர்க்கிடையில் , வெளியே சென்ற கரடி குடும்பம் வீட்டுக்கு திரும்பின. அவர்கள் வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிரிச்சியாகின. யாரோ வீட்டில் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டான. அவர்களின் சாப்பாடு டேபிளில் எல்லாம் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ந்தன. குட்டி கரடி, ' அப்பா என் சேரை யாரோ உடைச்சிட்டாங்க' னு அழ ஆரம்பிச்சுது. மூவரும் மெதுவாக பெட்ரூமிற்கு சென்றார்கள்.

அப்போது , குட்டி பெண்ணான கோல்டிலோக்ஸ் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தாள். இதை பார்த்த குட்டி கரடி கத்த ஆரம்பித்தது , என்னோட கட்டில யாரோ தூங்குறாங்க. கோல்டிலோக்ஸ் சத்தம் கேட்டதும் முழித்துவிட்டாள். அவள் கரடி குடும்பத்தை பார்த்தாள். அவளுக்கு பயமாக இருந்தது. சட்டென பெட்டில் இருந்து எழுந்தாள். கரடி குடும்பம் அவளை பிடிக்க கிட்ட நெருங்கியது. அவள் அருகில் இருந்த ஜன்னலை திறந்து வெளியே குதித்தாள்.

கோல்டிலோக்ஸ் உயிர் பயத்தில் ஓட ஆரம்பித்தாள். கரடி குடும்பம் மாடியில் இருந்து இறங்கி வந்து அவளை துரத்தியது. அவளும் வேகமாக ஓட ஆரம்பித்தாள். கரடியால் அவளை பிடிக்க முடியவில்லை. கோல்டிலோக்ஸ் ஒருவழியாக வீட்டுக்கு போகும் வழியை அடைந்தாள்.

கோல்டிலாக்ஸ் இறுதியாக வீட்டை அடைந்தாள். அவளது அம்மாவை பார்த்ததும் , அழ ஆரம்பித்தாள் . அம்மா, அம்மா காட்டுக்குள்ள கரடிமா என அழுதாள். கோல்டிலாக்ஸ் அம்மாவோ பதறி என்னாச்சு கோல்டிலாக்ஸ் , நீ நன்றாக இருக்கிறாயா என கேட்டார். கோல்டிலோக்ஸ் நடந்ததை கூறினாள். அம்மா சொன்னார் இதற்குத்தான் பெரியவர்கள் சொல்றத கேக்கணும் , காட்டுக்குள்ள தனியா போகாதன்னு சொன்னேன் அப்படின்னு சொன்னாங்க. கோல்டிலாக்ஸ் சாரிமா இதுக்கு அப்புறம் உங்க சொல் பேச்சு கேட்ப்பேன் காட்டுக்கு தனியா போக மாட்டேன்னு சொன்னாள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+