குழந்தை நீதி கதைகள்: அப்ப எனக்கு பசிக்கும்ல.. ஹங்கிரி கிரெடேலும் அறிவாளி ஹென்செலும்!

Subscribe to Oneindia Tamil

குட்டிஸ் ரெடியா இருக்கீங்களா , இன்னைக்கு கொஞ்சம் மேஜிக் அதிகமாக இருக்க கூடிய கதை படிக்க போறோம். ஹென்செல் அப்புறம் கிரெடேல் இந்த ரெண்டு குட்டி பசங்கள பத்திதான் இந்த கதை. வாங்க நம்ம மாயாஜால உலகத்துக்கு..

ஒரு கிராமத்துல ஏழை மரவெட்டி ஒருவர் இருந்தார். அவருக்கு ஹென்செல், கிரெடேல் என்ற மகனும் மகளும் இருந்தனர். குறைந்த வருமானத்தில் அவரது மனைவி மொத்த வரவு , செலவுகளை சிறப்பாக கவனித்து வந்தார். ஒருநாள் ஹென்செல் அம்மாவிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. ஹென்செல் அப்பாவின் வருமானத்தில் பெரிதாக அவரது மனைவியை கவனித்து கொள்ள முடியவில்லை. திடீரென அவர் இறந்து போனார். கவலையில் ஹென்செல் , கிரெடேல் மூழ்கினர். அவர்களது தந்தைக்கு அவர்கள் இருவரையும் கவனித்து கொண்டு வேலையும் செய்ய முடியவில்லை.

Kids story in tamil : Hensel and Gretel

அக்கம்பக்கத்தினர் ஹென்செல் அப்பாவிடம் நீங்கள் வேறு திருமணம் செய்து கொள்ளுங்கள். ஹென்செல் , கிரெடேல் இருவரையும் கவனித்து கொள்ள அவர்களுக்கு ஒரு அம்மா வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவரும் ஆமாம் என்பது போல் தலையசைத்தார். தடபுடலாக அவரது திருமணமும் நடந்து முடிந்தது. ஹென்செல், கிரெடேல் இருவரும் புது அம்மா வந்த சந்தோஷத்தில் இருந்தனர்.

மரவெட்டி கொண்டு வரும் வருமானத்தில் சித்தியால் குடும்பத்தை நடத்த முடியவில்லை. சாப்பாடு சமைத்து இருவருக்கும் பரிமாறினார். கிரெடேல்க்கு பசி அடங்கவில்லை. அவர் சித்தியிடம், அம்மா எனக்கு இன்னும் பசிக்கிறது சாப்பாடு வேணும் என்றார். சித்தியோ , இருந்த சாப்பாட்டையெல்லாம் அவரது தட்டில் போட்டு கொண்டார். கிரெடேலிடம் இதுதான் அளவு இதற்கு மேல் சாப்பாடு வேணும் என்றால் , நீ போய் சம்பாதித்து கொண்டு வா, இல்லையென்றால் கொடுப்பதை சாப்பிட்டுவிட்டு அமைதியாக இரு, எந்த வேலையும் செய்யாமல் சும்மாதானே இருக்கிறாய் என்று கடுமையாக பேசினார். ஹென்செலுக்கு அவரது நடவடிக்கை புரிந்தது. கிரெடேலிடம் எனது சாப்பாடை சாப்பிட்டுகோ என்று கொடுத்து விட்டான்.

இப்படியே நாட்கள் நகர்ந்தன. சாப்பாட்டிற்காக இருவரும் மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் அவரது சித்தியோ அதை பொருட்படுத்தாமல் அவரை மட்டுமே கவனித்து வந்தார். மழைக்காலம் வந்தது. விறகு வெட்டியால் போதுமான வருமானத்தை ஈட்ட முடியவில்லை. அவரது மனைவிக்கோ கோபம் வர ஆரம்பித்தது. சாப்பாடு சரியாக கிடைக்காததால் சண்டையிட்டார். வெளியூருக்கு சென்று வேலை பார்க்க சொல்லி கணவரை வற்புறுத்தினார். அவரும் சரி என்று கிளம்பினார். இதுதான் சரியான சமயம் என்று எண்ணி ஹென்செல் மற்றும் க்ரேட்டலை காட்டுக்குள் விட்டு வர முடிவு செய்தாள்.

சித்தி இருவரிடமும் நாம் காட்டுக்குள் சென்று வரலாம் என்று தந்திரமாக சொன்னாள். ஹென்செல் புத்திசாலியான பையன் , அதனால் சித்தி ஏதோ சூழ்ச்சி செய்கிறார் என்று புரிந்துகொண்டார். போகும் வழியெல்லாம் கூழாங்கற்களை போட்டுகொண்டே சென்றான். அவனது முதல் அம்மா காட்டுக்குள் சென்றால் தொலைந்து போகாமல் இருப்பதற்கு இந்த பெப்ள்ஸ் உதவியாக இருக்கும் என்று சொன்னதை நினைவில் வைத்திருந்தான். அடர்ந்த காடும் வந்தது. சித்தி இருவரிடமும் நீங்கள் விளையாடி கொண்டிருங்கள் நான் வந்து விடுகிறேன் என்று சொல்லி சென்று விட்டார்.

ஹென்செல் , கிரெடேல் நன்றாக விளையாடி கொண்டிருந்தனர். நேரம் செல்ல செல்ல சித்தி வரமாட்டார்கள் என்று உறுதி செய்தான் ஹென்செல். இருவரையும் அங்கிருந்த குரங்கு ஒன்று பார்த்தது. இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டது. ஹென்செல் நடந்ததை கூறினான். குரங்கும் உன்னை காட்டின் ஒரு பகுதியில் விடுகிறேன் நீ அங்கிருந்து உன் வீட்டிற்கு செல்லலாம் என்றது. ஹென்செலும் சரி என தலையாட்டினான்.

இதற்கிடையில் திரும்பி சென்று கொண்டிருந்த சித்தி வழியெங்கும் பெபிள்ஸ் இருப்பதை பார்த்தாள். கண்டிப்பாக இது ஹென்செல் வேலையாக இருக்கும் என்று முடிவு செய்தாள். அந்த கற்களை பொறுக்கி கொண்டு வேறு திசையில் போட்டு விட்டு வீட்டுக்கு சென்றாள். அப்பாடா இனி நிம்மதியாக இருக்கலாம் என்று பெருமூச்சு விட்டாள்.

ஹென்செல், கிரெடேல் இருவரும் குரங்கு காட்டிய வழியில் நடந்து சென்றனர். ஒருவழியாக அவன் பெபிள்ஸ் போட்ட இடத்தை அடைந்தான். குரங்கிற்கு நன்றி சொல்லிவிட்டு அந்த வழியாக இருவரும் நடந்தார்கள். சிறிது தூரத்தில் கற்கள் இல்லை என்பதை உணர்ந்தான் ஹென்செல்.

கிரெடேல் நடந்து நடந்து பசி எடுக்கிறது என்றாள். ஹென்செலும் ஆமாம் எனக்கும் பசிக்கிறது என்றான். நடு காட்டிற்குள் சென்றனர். தூரத்தில் ஒரு வீடு இருப்பதை பார்த்தனர். நடந்து வேகமாக அதன் அருகில் சென்றனர். அது ஒரு சாக்லேட்டால் செய்த வீடு. கிரெடேல் " ஹென்செல் இங்குவந்து பார் ஜெம்ஸ் இருக்கிறது. சுகர் காண்டியால் செய்த ஜன்னல் இருக்கிறது " என்றாள். ஹென்செல் " மேலே பார் கேக் , ஐஸ்கிரீம் என அழகாக இருக்கிறது இந்த வீடு" என்றான் . இருவரும் பசியால் அந்த வீட்டின் மேலிருந்த சாக்லேட்டை எடுத்து சாப்பிட்டனர்.

திடீரென அந்த வீட்டின் கதவுகள் திறந்து ஒரு வயதான பெண்மணி வெளியில் வந்தார். அவர் கோபமாக இருவரையும் பார்த்து,' உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள், என் வீட்டை சாப்பிட ' என்றார். இருவரும் எங்களுக்கு பசி அதிகமாக இருந்தது அதனால் தான் சாப்பிட்டோம் என பாவமாக சொன்னனர்.

வயதான பெண்மணி பரிதாப்பட்டு, உள்ளே அழைத்து சென்றாள். இருவரையும் டைனிங் டேபிளில் அமர சொன்னார். தன் கையில் இருந்த மந்திர கோலை வைத்து சாப்பாடு வரட்டும் என்றார். டேபிளில் வித விதமான உணவுகள் தோன்றின. இருவரையும் சாப்பிட சொன்னார். இருவரும் திருப்தியாக சாப்பிட்டனர். கிரெடேல் நடந்து வந்ததால் சோர்வாக இருக்கிறது என்றாள். வயதான பெண்மணி உடனே தன் கையில் இருந்த கோலை நீட்டி ஒரு கட்டில் மற்றும் மெத்தையை வர வைத்தார். இருவரும் சிறிது ஓய்வெடுங்கள் என்றார். இருவரும் தூங்கி முழித்தனர்.

சரி நாங்கள் வந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டது அம்மா தேடுவார்கள் என்றான் , ஹென்செல். இருவரும் கதவு வரை நடந்தனர். வயதான பெண்மணி இருங்கள் என்றாள். இல்லை இல்லை பாட்டி நேரமாகி விட்டது நீங்கள் கொடுத்த உணவிற்கு நன்றி என்றாள் கிரெடேல். ஆமாம் கிளம்புகிறோம் என்றான் ஹென்செல். வயதான பெண்மணி இடைமறித்தாள். அப்படியெல்லாம் விட முடியாது , என மந்திரக்கோலை நீட்டி கதவை பூட்டினாள். ஹென்சேலை ஒரு கூண்டு போல் உருவாக்கி உள்ளே அடைத்தாள். பாட்டி என் அண்ணனை விடுங்கள் என்று அழுதாள் கிரெடேல். பாட்டி சத்தமாக சிரித்து கொண்டே கொடூரமான கிழவியாக மாறினாள்.

அவள் பார்ப்பதற்கு பெரிய நகங்கள் வைத்து கொண்டு பயங்கரமான சூனியக்காரி போன்று தெரிந்தார். இருவரும் பயந்தனர். வயதான சூனியக்காரி என்பதால் பார்வை மங்கலாக இருந்தது. கிரெடேலிடம் ஓசியில் சாப்பாடு போடுவார்களா , போய் வீட்டை தொடைத்து சுத்தம் செய் என்று மிரட்டினாள். என்னடா நமக்கு மட்டும் சாப்பாட்டிலே குறி வைக்கிறார்கள், என்று நினைத்து கொண்டே ஹென்சேலை எப்படி காப்பாற்றுவது என எண்ணினாள்.

வீட்டிற்கு திரும்பிய சித்திக்கு பேரதிர்ச்சி , வெளியூர் சென்ற கணவர் திரும்பிவிட்டார். அவர் குழந்தைகளை எங்கே என்றார். அது, அது என திணறினாள். உண்மையை சொல் என கேட்டதும் அவள் நடந்ததை கூறினாள். என் குழந்தைகளை இப்படி செய்துவிட்டாய் என அவர் கேட்டதும் அவளுக்கு உணர்ந்தது. நீயெல்லாம் தாயாய் இருப்பதற்கே தகுதி இல்லாதவள் என்று கோபமாக வெளியே தேட சென்றார். அவளும் தன் தவறை உணர்ந்து என்னை மன்னித்து விடுங்கள் நானும் வருகிறேன் என்று தேட சென்றாள்.

சூனியக்காரியோ, ஹென்செலுக்கு சிக்கன், மட்டன் என வித விதமாக உண்ண கொடுத்து கொண்டே இருந்தாள். அவள் அவனை சாப்பிட போகிறாள் என்பதை புரிந்து கொண்டான். அவள் உன் விரல்களை நீட்டு நீ கொழுத்து இருந்தால் தான் என் பசி அடங்கும் என்றாள். அவன் சிக்கன் எலும்புகளை தன் விரல் இடையில் வைத்து கம்பியின் நடுவில் நீட்டினான். சூனியக்காரி வயதானவர் என்பதால் சரியாக கண் தெரியவில்லை. தொட்டு பார்த்துவிட்டு இவன் என்ன எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாகவில்லை என்று காத்திருந்தாள். அவனுக்கு மேலும் உணவுகள் வரவழைத்து கொடுத்தாள். கொஞ்ச நேரத்தில் அவளால் பசி பொறுக்க முடியவேயில்லை.

ஹென்சேலை, சாப்பிட்டு விட முடிவு செய்தாள். இதை பார்த்த கிரெடேல் நாம் தான் எதாவது செய்து அண்ணனை காப்பாற்ற வேண்டும் என நினைத்தாள். சூனியக்காரி பெரிய பாத்திரத்தில் சூப் செய்வதற்கு தண்ணி வைத்து ரெடி செய்தாள். கிரெடேலிடம் கொஞ்சம் நெருப்பு மூட்டு என்றாள் சூனியக்காரி. கிரெடேல் எனக்கு எப்படி செய்வது என்று தெரியாதே என்றாள். சாப்பிட மட்டும் தெரியுமா என்று திட்டிக்கொண்டே விறகுகளை அடுக்கினால் சூனியக்காரி. சமயம் பார்த்து காத்திருந்த கிரெடேல் , சூனியக்காரி விறகுகளை நெருப்பு மூட்டியதும் , அருகில் நின்றிருந்த சூனியக்காரியை தள்ளி விட்டாள். நெருப்பில் தடுமாறி விழுந்து இறந்தாள் சூனியக்காரி.

அருகில் இருந்த சூனியக்காரியின் மந்திரகோலை வைத்து ஹென்சேலை கூண்டில் இருந்து மீட்டாள். இருவரும் அருகில் இருந்த அறைக்கு சென்றனர். சில பெட்டிகள் இருந்ததை பார்த்த ஹென்செல் கோலை வைத்து அதை திறந்தான். பேட்டியின் உள்ளே தங்கம், வைரம், முத்து என விலையுயர்ந்த பொருட்கள் இருந்தது. அம்மாவிடம் இதை கொடுக்கலாம் என்றான் ஹென்செல். அங்கு சில குழந்தை சிலைகளை இருந்ததை பார்த்த கிரெடேல் இதை பார்த்தால் நம்மை போல சிறுவர்கள் மாதிரி தெரிகிறது ஆனால் எப்படி இவர்களை மீட்பது என யோசித்தாள். ஹென்செல் கையில் இருந்த கோலை வைத்து அவர்களை மீட்டான்.

அனைவரும் வீட்டின் வெளியே வந்தனர். குழந்தைகள் எங்களை காப்பாற்றியது நன்றி என்றனர். கிரெடேல் , ' அண்ணா இப்போ வீட்டுக்கு எப்படி செல்வது நமக்கு வழி தெரியாதே என்றாள். ஹென்செல், ' அதான் மந்திர கோல் இருக்குதே என்றான். அருகில் இருந்த ப்ரூம்ஸ்டிக்க்கை பறக்கும் துடைப்பமாக மாற்றினான். குழந்தைகள் அதில் ஏறி ஹார்ரி பாட்டர் ரேஞ்சில் பறந்தனர்.

காட்டின் மேல் பறக்கும்போது ஹென்செல் அப்பாவின் குரல் கேட்டது. அவர்ககள் சத்தம் வந்த திசை பக்கம் சென்றனர். அப்பா , அம்மா இருவரையும் பார்த்தனர். அப்பா இருவரையும் கட்டி பிடித்து கொண்டார். அம்மா இருவரிடமும், என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று இருவரையும் அணைத்து கொண்டாள். ஹென்செல் அப்பாவிடம் சொன்னான், அப்பா இனிமேல் நாம் கஷ்ட பட வேண்டாம் நான் இந்த பொருட்களை கொண்டு வந்தேன் என நடந்தை கூறினான்.

அவர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர். ஹென்செலும் கிரெடேல் அம்மா அப்பாவுடன் சந்தோசமாக வாழ்ந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+