குழந்தை நீதி கதைகள்: மாயாஜாலமா.. மந்திரமா.. பூக்களால் உருவான லூசியின் மந்திர வீடு..
சென்னை: Kids story in Tamil: ஹாய் நண்பர்களே! எல்லாரும் எப்படி இருக்கீங்க.. வெள்ளிக்கிழமை வந்தாச்சு நாளைக்கு ஸ்கூல் லீவு கண்டிப்பா எல்லோரும் ஜாலியா இருப்பீங்க இல்லையா, அப்படியே நம்ம லூசியோட வீட்டுக்கு போய்ட்டு வரலாமா.. சரி வாங்க போலாம்.
முன் ஒரு காலத்தில பாரிஸ் நகரத்தில் அழகான கிராமம் ஒன்று இருந்தது. அங்கதான் நம்ம லூசியோட வீடு இருந்தது. அவ வீட்டுக்கு பின்னாடி அழகிய பூந்தோட்டம் வச்சிருந்தாள். அதில் பல வண்ணங்கள் நிறைந்த பூக்கள் இருந்தது, விதவிதமான பூக்களும் இருந்தன. லூசி அவ தோட்டத்தில் ரொம்ப புடிச்ச தோட்டம் ரோஜா தோட்டம் தான். அந்த தோட்டம் மற்ற பூ தோட்டத்தின் நடுவில் இருந்தது.

இந்த பூக்களை எல்லாம் பறித்து நகரத்தில் விற்பதே அவளது அன்றாட வேலையாக இருந்தது. பல மைல் தொலைவில் நடந்து சென்று விற்று வருவாள். அவளது பூக்களுக்கு நகரத்தில் நல்ல மவுசு. அதுவும் அவளது ரோஜாக்களுக்கு தனி பிரியர்கள் உண்டு. ஏனேனில் அவை ஒரு மாதிரி மின்னும் விதத்தில் இருக்கும். லூசி மிகவும் ஏழை பெண். அவள் இதை விற்று வரும் வருமானத்தில் வாழ்ந்து வருபவள்.
நகரத்து வாசிகள் அவளிடம் தினமும் ஆர்டர் கொடுத்து விடுவார்கள். எவ்வளவு பூக்கள் வேண்டும் என்ன மாதிரியான பூக்கள் வேண்டும் என. அவர்களின் தேவைக்கு ஏற்ப பூக்களை பறித்து விற்க செல்வாள் லூசி.மற்ற நேரங்கள் முழுவதும் அந்த தோட்டத்திலேயே தனது நேரத்தை செலவிடுவாள். அதனுடன் பேசிக்கொண்டு இருப்பாள். இதை பார்ப்பவர்களுக்கு விசித்திரமாக இருக்கும்.
அன்று அவளிடம் ரோஜா பூக்களுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. அவளும் அவற்றை பறித்துக்கொண்டு நகரத்திற்கு கிளம்பினாள். திரும்பி வரும்போது திடீரேன மழை பொழிய ஆரம்பித்து விட்டது. அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி கொண்டாள். மழை விட்ட பாடில்லை. அவள் எண்ணமெல்லாம் தனது தோட்டத்தின் நிலையை எண்ணியே இருந்தது. அதன் வருமானத்தில் தான் அவளது வாழ்க்கையை கழித்து கொண்டிருந்தாள். இப்போது என்ன செய்ய போகிறேன் என எண்ணி கொண்டே அந்த மழையின் இடையிலே தோட்டத்தை நோக்கி விரைந்து ஓடினாள்.
அவள் நினைத்தது போலவே அவளது பூந்தோட்டம் பெருமழையால் அழிந்துவிட்டது. மொத்தமாய் சரிந்து கிடந்ததை பார்த்து மனம் நொந்து போனாள். அது இரவு நேரம் என்பதால் அவளுக்கு அதை சரி பண்ண முடியாது என்று தோன்றியது. முடிந்த வரை நிலத்தில் நீர் தேங்காமல் எடுத்து விட்டாள். எந்த பலனும் இல்லை மழை விடாமல் பெய்ததால் சோகத்தில் ஆழ்ந்தாள்.
விடிந்தது மழையும் நின்றது. அவளது தோட்டத்தை நோக்கி வேகமாக சென்றாள். எல்லா செடிகளும் தண்ணியில் சரிந்து வீணாகி கிடந்ததை பார்த்து மனமுடைந்தாள். திடீரென அவள் கண்களில் ஏதோ மின்னுவது போல தோன்றியது. அவளது ரோஜா தோட்டத்தில் ஒரே ஒரு ரோஜா மட்டும் தான் நிமிர்ந்து நின்றது. அவளுக்கு அது புத்துணர்ச்சியை கொடுத்தது. சேதமடைந்த நிலத்தில் இருந்து அதை எடுத்து தனது வீட்டின் பக்கத்தில் நட்டாள்.
அது அவளது வீட்டின் ஒரு பகுதியில் உரசியது. அவ்வளவுதான், மொத்த வீடும் அழகான ரோஜா வீடாக மாறியது. இருந்தாலும் வெளியில் இருந்த பார்க்க சின்ன வீடாகத்தான் தெரிந்ததுதான். அவள் உள்ளே சென்று பார்த்தால் அப்படியே ஒரு மாளிகையாக இருந்தது. லூசி வியந்து போய் அதை பார்த்து கொண்டிருந்தாள். அவளுக்கு தேவையான அனைத்தும் அவளுக்கு கிடைத்தது. அவை எதுவும் தீர்ந்து போகவில்லை. லூசிக்கு ஒரே ஆச்சர்யம். அந்த ரோஜாவிடம் நன்றிகளை கூறி கொண்டிருந்தாள்.
அவளது இத்தனை நாள் கடின உழைப்புக்கு பலனாக இதை பார்த்தாள். அவள் மகிழ்ச்சியாக தற்போது வாழ ஆரம்பித்தாள். பூக்களின் நடுவில் அழகான ரோஜா பூ வீட்டில் மீண்டும் புது பூந்தோட்டங்களை அமைத்தாள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவள் மாளிகையில் இருப்பதாக தெரியாது. அதனால் யாரும் அவளை எந்த வித தொல்லையும் செய்யவில்லை. அவள் கேட்கும் அனைத்தையும் அந்த ரோஜா பூ வீடு கொடுத்தாலும் அவளது மகிழ்ச்சிக்காக பூக்களை விற்க சென்று வருவாள். தன்னிலை மாறாத அவளின் குணத்திற்காகவே அவளுக்கு இந்த மந்திர வீடு அவளை இன்னும் நன்றாக பார்த்து கொண்டது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications