Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: வேணா பீனிக்ஸ்சு- சீப்பு தா உனக்கு ஆப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ். எல்லாரும் எப்படி இருக்கீங்க. எக்ஸாம்ஸ்க்கு தயாராயிட்டு இருப்பீங்கன்னு நெனைக்கிறேன். உங்க மூளைக்கு ஃபிரெஷான கதையோட வந்திருக்கேன். நாம பீனிக்ஸ் பறவை பத்தி நெறைய கதைகளை கேள்விபட்டிருப்போம். அதேமாதிரி நானும் பீனிக்ஸ் பத்தி ஒரு கதை சொல்லப்போறேன் கேளுங்க.

முன்னொரு காலத்துல ஸ்டார்ஹெவன் ஊர்ல செலெஸ் ங்கிற ஒரு அழகான இளம்பெண் வாழ்ந்து வந்தாள்.அவளுக்கு ஒரு அழகான கூந்தல் இருந்தது அது அவ நடக்கும்போது அழகா அசையும் அதுமட்டுமில்ல அது நெறைய மாயசக்திகளை கொண்டது. சின்ன வயசுல செலெஸ் விளையாடிட்டு இருக்கும் போது ஒரு மெர்மைட் ஹயாத்தாமரைகள் இடையில மாட்டி காத்திக்கிட்டு இருந்ததா செலெஸ் பாத்த, மெர்மைட் ட காப்பாத்த தன்னோட முடிய பயன்படுத்தினா. அது மெர்மைட் ட தூக்கி தரைல போட்டுருச்சு. தன்னோட சக்திகளை கட்டுப்படுத்த தெரியாம செலெஸ் கவலைப்பட. உனக்கு அடிப்பட்டிருந்தா என்ன மன்னிச்சுருனு மெர்மைட் கிட்ட வருத்தப்பட்டா.மெர்மைட் அந்த குட்டி செலெஸ் கிட்ட வந்து நீ வருத்தப்படாத னு சொல்லி தன்னோட தலைல இருந்த அழகான சீப்பா செலெஸ்கிட்ட கொடுத்தா. "வருத்தப்படாத இந்த சீப்புக்கு கடலோட எல்லா சக்தியும் இருக்கு. இது உன்னோட சக்திக்காக கட்டுப்படும். அதுக்கு நீ மொதல்ல இத நம்பனும். உன்னோட சக்தியை நம்பனும் " னு சொல்லி அந்த சீப்பா குட்டி செலெஸ் தலைல மாட்டி விட்டா. "இந்த உலகத்துக்கு நீ எது தரியோ அதுதான் உனக்கு திரும்ப கிடைக்கும்னு" சொல்லி குட்டி செலெஸ்க்கு முத்தம் குடுத்துட்டு மெர்மைட் அங்க இருந்து கெளம்பிட்டா.

Kids story in tamil : phoenix and a girl

அதுல இருந்து ஸ்டார்ஹெவன் மக்களுக்கு உதவ ஆரம்பிச்ச செலெஸ். அவளால ஒரு வயசான ஆள அவர் போகவேண்டிய இடத்துக்கு பறக்கவெக்க முடிஞ்சது, குழந்தைகளுக்கு கனவுகளை உருவாக்கி மகிழ்விக்க முடிஞ்சது, எளிய மக்களோட ஆசைகளை நிறைவேற்றிவெக்க முடிஞ்சது, செலெஸ் அவளோட சக்திகள பயன்படுத்தும்போது அவளோட தலைமுடியும் சீப்பும் மின்னும். பாக்கவே அழகா இருக்கும். மேலும் அவ நோய்களையும் காயங்களையும் குணப்படுத்தினா. அதனால ஸ்டார்ஹெவன் மக்களுக்கு செலெஸ்ஸ ரொம்ப புடிக்கும். அவளை தங்களோட அதிர்ஷ்ட தேவதையா பாத்தாங்க.

.

இப்போ பீனிக்ஸ் ஓட என்ட்ரி. ஒரு அழகான மாலைபொழுதுல மூணு பீனிக்ஸ் பறவைங்க ஸ்டார்ஹெவன்கு வந்தாங்க. அங்க அவங்க தங்கி ஓய்வெடுக்க. அதுல ஒரு பீனிக்ஸ் பேரு ரேய்ஸ், அது ஒரு சின்ன பீனிக்ஸ். அதனால அவ்வளவு எளிதா தன்னோட உருவத்தை மாத்தமுடியல. அதனால மத்த பீனிக்ஸ் பறவைங்க அத குத்திபேசுனாங்க. "நீ உருவத்துல தான் பீனிக்ஸ் ஆனா உனக்கு ஒரு கோல்டுபிஷ் ஓட சக்திகள் தா இருக்குனு" சொல்லி சிரிச்சாங்க. கஷ்டப்பட்டு தன்னோட உருவத்தை மாத்திட்டு ரேய்ஸ் பீனிக்ஸ், ஸ்டார்ஹெவன் தெருவுல நடந்துபோய்ட்டு இருந்தது. அப்போ அது செலெஸ்ஸ பாத்துச்சு. அவ குழந்தைகளுக்கு இடையில இருந்து அழகான மாய கனவுல உருவாக்கிட்டு இருந்ததை பாத்து ரேய்ஸ் பீனிக்ஸ் ஆச்சரியபட்டது. அவளோட தலைல இருந்து கால் வரைக்கும் மின்னிகிட்டு இருந்ததை பிரம்மிப்போட பாத்த ரேய்ஸ் பீனிக்ஸ் கிட்ட ஒரு மூதாட்டி கேட்டாங்க. "எங்களோட அதிர்ஷ்ட தேவதைய பாத்து பிரம்மிச்சு போய்டியா. அவளுக்கு இயற்கையாவே இந்த சக்திகள் இருக்குனு" சொல்லி பெருமைப்பட்டாங்க. ரேய்ஸ் பீனிக்ஸ் செலெஸோட முழு கதையை ஆர்வமா மூதாட்டி கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டது. "அப்போ செலெஸ் நெனச்சா என்ன ஒரு வலிமையான பீனிக்ஸா உருவாக்க முடியும்னு" மூதாட்டி கிட்ட சொல்லிட்டே செலெஸ்கிட்ட போனது அந்த ரேய்ஸ் பீனிக்ஸ்.

செலெஸ பாத்து,"உங்க முடி அழகா இருக்கு. அதுதான் என்ன இங்க ஈர்த்ததுனு" சொல்லுது. செலெஸ் அதுக்கு "ஓ நன்றி, ஆனா நீங்க இந்த ஊர் ஆள்மாதிரி இல்லையேனு " செலெஸ் கேக்கற. "என்னோட பேரு ரேய்ஸ், நா ஒரு வழிப்போக்கன்னு பொய் சொல்லிட்டு. உங்கள மாதிரி எனக்கும் மேஜிக்கல் ஹேர்ஸ் வேணும் தரீங்களானு" ரேய்ஸ் பீனிக்ஸ் செலெஸ்கிட்ட கேக்குது. "ஐய்யோ, என்னால அது முடியாதுபோலையே. அது இயற்கை குடுத்த வரம்னு செலெஸ் சொல்ல, "அப்போ என்ன ஒரு சக்திவாய்ந்த பீனிக்ஸ் பறவையா மாத்தறீங்களானு" ரேய்ஸ் கேட்டது செலெஸ்கு பிடிக்கல. "அவ்ளோ சக்தி ஒருத்தங்களுக்கு சுலபமா கெடச்சிட்டா அத அவங்க தவறான வழியில தா பயன்படுத்துவாங்க, என்ன மன்னிச்சுரு, என்னால உனக்கு உதவ முடியாதுனு" சொல்லி செலெஸ் அங்க இருந்து கெளம்பிடற. ஏமாந்து போன ரேய்ஸ் பீனிக்ஸ் சோகமா தன்னோட நண்பர்கள் தங்கியிருந்த விடுதிக்கு போகுது. அப்போ அதோட மனசுல ஒரு சபலம். "இப்போ நாம போனாலும், அவங்க நம்மள கேலி பண்ணுவாங்க. எப்படியாவது சக்திமிக்க ஒரு பீனிக்ஸா மாறிட்டு தான் இவங்கள சந்திக்கணும்னு" தன்னோட மனசுல ஒரு சபதம் எடுத்துட்டு செலெஸ தேடி போகுது. ஒரு வழியா செலெஸோட வீட்டை கண்டுபுடிச்சு. ஜன்னல் வழியா பீனிக்ஸா உருமாறி செலெஸ பாக்கவும், அவளோட அழகிய சீப்பு மேஜைமேல் இருந்ததை பாத்து ஒரு குருட்டு எண்ணத்தோட அத எடுத்துட்டு அங்க இருந்து கெளம்பிருச்சு ரேய்ஸ் பீனிக்ஸ்.

அதோட மனசுல இனி தான்தான் ஒரு சக்திவாந்த பீனிக்ஸ்னு ஒரு தைரியம் வந்தது. ஆனா அந்த சீப்பு ரேய்ஸ் கிட்ட வேல செய்யல. ரேய்ஸ் கடுமையா முயற்சி செய்யுது. அப்போ சீப்போட ஒருபல் உடையது.அதுல இருந்து ரேய்ஸ்க்கு சக்தி வருது. ரேய்ஸ் அத தலைல மாட்டுன உடனே ஒரு தன்னை சுத்தி நெருப்பு சூழும் பீனிக்ஸா மாறுது. சந்தோஷத்துல அங்க இருந்து தன்னோட நண்பர்கள் கிட்ட கெளம்பிபோகுது. மறுநாள் காலைல செலெஸ் வழக்கம் போல எழுந்து அழகான சூரிய உதயத்தை பாத்துட்டு, தன்னோட மேஜையை பாக்கற. அங்க எப்போவும் இருக்கற சீப்பு இல்ல. செலெஸ் அதிர்ந்து போற. அப்போ வெளிய ஒரு சத்தம். மக்கள் வந்த ஆச்சர்யமா பாத்துட்டு இருக்காங்க. செலெஸ் மேல பாக்கறா. மூணு பீனிக்ஸ் பறவைங்க வட்டமிட்டு பறந்து போயிட்டு இருக்கு.அதுல ஒன்னு பயங்கரமா நெருப்பு சூழ பறந்துட்டு இருந்தது. கீழ மக்கள் எல்லாரும் பேசிக்கறாங்க, "சில நாட்கள் நம்ம ஊர்ல வழிப்போக்கர்களா தங்கியிருந்தது,இந்த பறவைக்குதானு". செலெஸ்கு இப்போ புரிந்து சீப்பு திருடபற்றுக்கு அது நேத்து நாம சந்திச்ச வழிப்போக்கன் வேலைதான்னு. செலெஸ் யோசிக்கற, "சீப்பா சீக்கரம் மீட்டெடுக்கும். அந்த பீனிக்ஸ் அத தீயவழில செயல்படுத்தும்னு". மொதல்ல கெளம்பி காட்டுக்கு போற. தனக்கு எதாவது தடயம் கிடைக்குமான்னு பாக்கற. அங்க ஒரு முயலோட காத்து விசயமா இருக்கறத பாக்கற கூட பக்கத்துல இருந்த குதிரையோட கால்கள் வித்தியாசமா இருக்கறதையும் பாக்கற. இதுயெல்லாம் அந்த சீப்போட மகிமைதாங்கிறத புரிஞ்சுக்கறா. தன்னோட கட்டுப்பாடற்ற சக்தியை வெச்சு நிலைமையை எப்டியோ சரிசெய்ற செலெஸ். பீனிக்ஸ்அ தேடி வேகமா போறா.

Kids story in tamil : phoenix and a girl

அந்த சமயம் ரேய்ஸ் பீனிக்ஸ் தன்னோட நண்பர்கள் கிட்ட தன்னோட சக்தியை காட்டி பெருமைபட்டுட்டு இருந்துச்சு,"பாத்திங்களா நண்பர்களே, என்னோட முழு சக்தி. இது தா ரேய்ஸோட சக்தி. இப்போ சொல்லுங்க யாரு பெரிய பீனிக்ஸ்" சிரிச்சிட்டே கேக்குது. நண்பர்கள் ரேய்ஸ் பீனிக்ஸ வியப்போடு பாத்துட்டு வராங்க. "ரேய்ஸுக்குகு எதோ ஆயிருச்சு. அவனோட கண்கள் பயங்கரமா இருக்கு. எதோ சரி இல்லனு யோசிக்கறாங்க". இது எல்லாம் நடக்கும் போதே திடீர்னு ரேய்ஸ் பீனிக்ஸ் வானத்துல இருந்து கீழ விழுது. தரைல விழுந்த ரேய்ஸ் பீனிக்ஸ்கு கோவம், சீப்போட ஒரு பல்ல உடைக்குது. அதனால பறக்க முடில. மறுபடியும் கோவத்துல சீப்ப உடைக்க போறப்போ முழு சீப்பும் உடைஞ்சு விழுது. அதுல இருந்து வர கட்டுப்படாத சக்தி ரேய்ஸ் பீனிக்ஸ நகரவிடாம பண்ணுது. ரேய்ஸோட உடம்பு கடல் பாறைகள் மாதிரி மாறிட்டு போகுது. ரேய்ஸ் பீனிக்ஸ் பயத்துல கத்துது. ரேய்ஸ் பீனிக்ஸோட நண்பர்கள் வந்துட்டாங்க. ரேய்ஸ்கு என்ன ஆகுது அவங்களுக்கு புரியல. "யாராவது உதவி செய்ங்கனு கத்தறாங்க". அப்போ அந்த சத்தம் கேட்டு ரேய்ஸ் பீனிக்ஸ தேடிகிட்டு இருந்த செலெஸ் அங்க வர்றா. ரேய்ஸ் பீனிக்ஸ் அவளை பாத்து "அதிர்ஷ்ட தேவதையே ! என்னை காப்பதுனு" கேக்குது. செலெஸ் பக்கத்துல சீப்பு உடைஞ்சு அதுல இருந்து வர சக்தி தான் ரேய்ஸ் பீனிக்ஸ இப்படி கல்லா மாத்துதுன்னு புரிஞ்சுக்கற. சின்னவயசுல மெர்மைட் அவகிட்ட சொன்னத மனசுல வெச்சுட்டு, தன்னோட சக்தி எல்லாம் ஒருநிலை படுத்தறா. கஷ்டமா இருந்தாலும் அத ஒரு வழியா ஒன்னாகி அந்த சீப்புமேல செலுத்தறா. சீப்போட கட்டுப்பாடற்ற சக்தி செலெஸ் ஓட கட்டுப்பாட்டுக்கு வருது. சீப்பு பழைய நிலைக்கு வருது. ரேய்ஸ் ஓட நிலையும் மாறுது, ரேய்ஸ் தன்னோட தவற உணர்ந்து செலெஸ்கிட்ட மன்னிப்பு கேக்குது. "என்ன மன்னிச்சிரு செலெஸ். என்னோட இயலாமையினாலதான் நா சீப்ப திருடிட்டேன்". ரேய்ஸோட நண்பர்கள், "நண்பா நீ எங்கள்ல ஒருத்தன். நீ திருடுனதுக்கு நாங்க தா காரணம். எங்களை மன்னிச்சிரு. இனி எப்போவும் உன்ன கேலி பண்ணமாட்டோம்னு" ரேய்ஸ மத்த பீனிக்ஸ் கட்டி தழுவிகிட்டாங்க. செலெஸ் ரேய்ஸ் பீனிக்ஸ் கிட்ட, "ரேய்ஸ் நீ ஒன்னு தெரிஞ்சுக்கோ. அன்பு தா பெரிய சக்தி. இந்த மாயாஜாலம் எல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க எப்போவும் இதே மாதிரி அன்பா இருங்கனு" சொல்லி, ரேய்ஸ் பீனிக்ஸ் திருடுன சீப்புல தன்னோட ஒரு முடிய கட்டி, "இது என்னோட பரிசு உனக்கு. உங்களுக்கு எதாவது ஆபத்து வந்த இது உங்களுக்கு உதவும்.இது அன்புக்கு மட்டும் தான் கட்டுப்படும். நீங்க எப்போவும் அன்பா இருக்கனும்னு" சொல்லி ரேய்ஸ் பீனிக்ஸ் தலைல சீப்பா மாட்டிவிடுற. மூணு பீனிக்ஸும் செலெஸ் கிட்ட இருந்து சந்தோசமா பறந்து போறாங்க.

ஒரு வித்தியாசமான பீனிக்ஸ் கதை நல்ல இருந்துச்சுல குட்டிஸ். சரி சரி போய் எக்ஸாம் நல்லா பண்ணுங்க. இதே மாதிரி அடுத்த வரம் ஒரு நல்ல கதையோட வரன் பாய்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+