குழந்தை நீதி கதைகள்: விலைமதிப்பில்லாத ஒன்று? அதை தேடி கொடுத்தால் கிடைக்கும் புதையல்
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க. இந்தவாரம் தேவதை கொடுத்த புதையல் கதைதான் படிக்க போறீங்க. யாரெல்லாம் ஆர்வமா இருக்கீங்க? சரி தேவதை சொன்ன விலைமதிப்பில்லாத பொருள் என்னனு தெரிஞ்சிக்கலாம் வாங்க.
ஒரு கிராமத்தில் மார்ட்டின் என்ற பெயரில் இளைஞன் இருந்தான். அவனது அப்பா ஒரு வியாபாரி. அவனுக்கு அம்மா, ஒரு தங்கையும் இருந்தார்கள். மார்ட்டின் ஒரு மிகப்பெரிய சோம்பேறியாக வலம் வந்து கொண்டிருந்தான். ஒருநாள் அவனுக்கும், அவனது அப்பாவிற்கும் ஒரு சண்டை வந்தது. அவன் எப்போதும் சோம்பேறியாக இருந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருந்ததால் அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்.

இவனும் கோபத்தில் அங்கிருந்து கிளம்பி நடக்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தில் சோர்வாக உணர்ந்தான். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு பழைய கிணறு இருந்ததை பார்த்தான். அதன் அடியில் அமர்ந்து சிறிது களைப்பாறினான். அப்போது அவன் அப்பா அவனை திட்டியது நினைவுக்கு வந்தது. அதை எண்ணி அலுத்து கொண்டிருந்தான். திடீரென அந்த கிணற்றில் இருந்து ஒரு குரல் கேட்டது. அவன் அதிர்ச்சியில் யாரது என கேட்டான்.
கிணறில் இருந்து தேவதை வெளியே வந்தாள். அவள், ஏன் சோகமாய் இருக்கிறாய் என்னவென்று வினவினாள். அவன் தனது அப்பாவிடம் வியாபாரம் செய்வதற்கு முதலீடாக பணம் கேட்டேன் என்று நடந்த சண்டையை எடுத்து சொன்னான். புரிந்து கொண்ட தேவதை உனக்கு ஒரு புதையலை தருகிறேன், ஆனால் இப்போது அல்ல. தினமும் எனக்காக நீ ஒரு பொற்காசை கொண்டு வரவேண்டும். அப்போது உனக்கு அந்த விலைமதிப்பில்லாத பொருளை கொடுக்கிறேன் என்றாள்.
அவனும் உற்சாகத்தில் புதையல் கிடைக்க போகிறது என கிளம்பினான். ஆனால் அவன் இதுவரை எந்த வேலையும் செய்ததில்லை என்பதை மறந்து போய் குதித்து கொண்டிருந்தான். அவன் அப்பாவிடம் பணம் கேட்டால் திட்டுதான் விழும் என்பதால் அவன் அம்மாவிடம் ஒரு பொற்காசை வாங்கி கொண்டு பொழுது சாயும் போது அந்த கிணற்றுக்கு சென்றான். தேவதையை அழைத்தான். பொற்காசை பெற்று கொண்ட தேவதை அதை கிணற்றில் வீசியது.
அவன் அதற்காக கவலை படவில்லை நமக்குத்தான் பெரிய புதையல் கிடைக்க போகிறதே என அங்கிருந்து கிளம்பினான். அவனது அம்மாவும் சில நாட்கள் அவனுக்கு ஒரு பொற்காசை கொடுப்பதை வழக்கமாக வைத்தார்கள். அவர்களிடம் இருக்கும் பொற்காசுகள் காலியாவதை உணர்ந்த அம்மா அவனுக்கு கொடுப்பதை நிறுத்தினார். இன்றைக்கு கொடுக்க காசுகள் இல்லையே என யோசித்தவனுக்கு அவனது தங்கை நினைவுக்கு வந்தாள்.
அவளை ஏமாற்றி, கெஞ்சி என சில நாட்கள் அவளது பொற்காசுகளை கொடுத்தான். வாங்கிய அதனை பொற்காசுகளை கிணற்றுக்குள் தேவதை வீசினாள். இப்படியே கொஞ்ச நாள் போனது. மார்ட்டின் தங்கை பொற்காசுகளை நாம் ஏன் இவனுக்கு கொடுக்க வேண்டும் என எண்ணி தர மாட்டேன் என மறுத்தாள். இன்றைக்கு தேவதைக்கு கொடுக்க காசு இல்லையே என்று குழம்பினான்.
சரி, வேலை க்கு செல்லலாம் என முடிவு செய்து வேலை தேடி அலைந்தான். ஒருவழியாக ஒரு பண்ணையில் வேலை கிடைத்தது. அவன் அங்கு நிலத்தை உழுது. மாடுகளுக்கு தீவனம் வைத்து, குளிப்பாட்ட என இதுவரை செய்யாத ஒன்றை செய்தான். அவனுக்கு ஊதியமாக ஒரு பொற்காசு கிடைத்தது. அதை தேவதையிடம் கொடுத்தான். அவளும் அதை கிணற்றில் வீசினாள். மார்ட்டின் சிறிது கவலை ஆனான். இருந்தாலும் புதையலுக்காக தானே என மறுநாள் வேலைக்கு தயாரானான்.
அந்த பண்ணியில் இன்றைக்கு இன்னும் அதிகமாக வேலை செய்தான். அவன் சாப்பிடாமல் வேலை பார்த்தான். அதனால் அன்று 3 பொற்காசுகள் கிடைத்தன. தேவதையிடம் ஒரு பொற்காசை கொடுத்துவிட்டு, 2 பொற்காசுகளை அம்மாவிடம் கொடுத்தான். வீட்டில் வயிறு நிறைய சாப்பிட்டான்.
மறுநாள் சீக்கிரமே வேலைக்கு சென்றான். அவன் மலைகளில் ஏறி தேன் சேமிக்க சென்றான். இந்த முறை அவனது உழைப்பு இன்னும் கடினமாக இருந்தது. அவன் கைகளில் காயங்களும் ஏற்பட்டு இருந்தது. அவனுக்கு கிடைத்த 5 பொற்காசுகளை எடுத்து கொண்டு தேவதையிடம் கொடுத்தான். அவள் ஒரு பொற்காசு போதும் என அதை தூக்கி கிணற்றுக்குள் வீசினாள்.
மார்டினுக்கு இந்த செயல் பிடிக்கவில்லை. நான் எவ்வளவு கஷ்டபட்டு இந்த பொற்காசுகளை ஈட்டி வருகிறேன். நீ அதை சுலபமாக கிணற்றில் வீசுகிறாய். உன் புதையலே எனக்கு வேண்டாம். நான் அதை வேலை செய்து சம்பாரித்து கொள்கிறேன் என்றான் கோபமாக

தேவதை, உன் விலைமதிப்பில்லாத பொருள் வேண்டாமா? என்றாள். அதற்கு மார்ட்டின், என்னுடைய கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தை இப்படி கிணற்றில் போடுகிறாய், இதைவிடவா நீ கொடுக்கும் புதையல் பெருசாக இருக்க போகிறது என்றான் கோபம் கலந்த உணர்ச்சியோடு. தேவதை இடைமறித்தாள், ஆமாம் அதேதான் நானும் சொல்கிறேன் உன் உழைப்பே விலைமதிப்பில்லா பொருள், உன் உழைப்பால் இதைவிட பல மடங்கு பொற்காசுகள் கிடைக்கும் என்றாள். அவனும் உண்மையை உணர்ந்து, இதன் பிறகு நான் சோம்பேறியாக இருக்க மாட்டேன் என்றான்.
தேவதை ஒரு பெட்டி நிறைய தங்க காசுகளை கொடுத்தாள். மார்ட்டின் அதை வாங்க மறுத்தான். அப்போது தேவதை இது நீ கொடுத்த பொற்காசுகள் தான். உனக்கு சொந்தமானதுதான், இதை வைத்து வியாபாரம் செய். இப்போது பணம் சம்பாரிப்பது எளிதல்ல என்பதை புரிந்திருப்பாய் என்றாள். அவனும் ஆமாம் என தலையாட்டி அங்கிருந்தது வீட்டுக்கு புறப்பட்டான்.
மார்ட்டின் அப்பா அவனை ஆரத்தழுவி, நீ சிறந்தவன் என்பதை நிரூபித்துவிட்டாய் என கூறினார். அவர்கள் சந்தோசமாக வாழ்க்கையை தொடர்ந்தார்கள்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications