குழந்தை நீதி கதைகள்: நீங்க யாரா இருக்க விரும்புறீங்க?
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. படிப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டீங்களா? இல்லையென்றால் சீக்கிரம் கவனத்தை சிதறவிடாமல் இருக்க தயாராகுங்க. நீங்க கவனத்துடன் சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் சிறப்பாக அமையும். அப்படியே இன்னைக்கு என்ன கதைன்னு படிக்கலாமா? வாங்க..
அப்பா, அம்மா, பாட்டி, ஜாக் அப்பறம் நம்ம ஜெனி இவங்க எல்லோரும் ஒரு வீட்டில் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள். ஜாக், ஜெனி ரெண்டும் பேருமே இரட்டையர்கள். அவங்க கொஞ்சம் குறும்பும் அப்புறம் சமத்து பசங்களாகவும் இருந்தாங்க. அதனாலேயே அப்பா அம்மா இரண்டு பேருமே ரொம்பவும் மெனக்கெடல் பண்ணல.

என்ன சொன்னாலும் ரெண்டு பேருமே கேட்டு அதன் படி செய்ய கூடியவர்கள். ஸ்கூல் போயிட்டு வந்து வெளியே விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதன் பிறகு வீட்டில் சின்ன சின்ன உதவிகள் படிப்பு என சரியாக நேரத்தை பயன்படுத்தி கொண்டார்கள்.
பாட்டி கொஞ்சம் வயதானவர்கள். அவங்களால படிக்கட்டு எல்லாம் ஏறி எந்த வேலையும் செய்ய முடியாது. அதனால் அம்மா தான் அவர்களுக்கான உதவிகளை செஞ்சாங்க. அப்பா தினமும் அலுவலகம் போனா வர இரவு ஆகிவிடும். ஒருநாள் அம்மா ஒரு வங்கி வேலையா வெளியே செல்ல வேண்டி இருந்தது.
அப்போ ஜாக், ஜெனி ரெண்டு பேரையும் அம்மா கூப்பிட்டு பாட்டி வயதானவங்க, அவங்களை மாடி படியெல்லாம் ஏற வைக்காம அவங்களுக்கு தேவையான உதவிய செய்யுங்கள் என சொல்லிவிட்டு சென்றார். ஜாக் ஜெனி ரெண்டு பேருமே பாட்டி கூப்பிட்டதும் ஓடி போய் உதவிகளை செஞ்சாங்க.
பாட்டி சொன்னாங்க எனக்கு ஒரு லெட்டர் எழுதுற வேலை இருக்கு, வெளியில காய்கறி டெலிவரி பண்ற பையன் வருவான். அவன் வந்ததும் நான் கூப்பிட்டேன்னு சொல்லுங்க. அவனை கவனிக்கல அப்படின்னா அவன் போய் விடுவான், அதனால வாசலிலே கொஞ்சம் கவனமா பாருங்க என்றார். இருவரும் பல மணி நேரமாக வாசலையே வெறிக்க வெறிக்க பார்த்தார்கள்.
யாரும் வந்த மாதிரி இல்லை. பாட்டியே அவர்களை கூப்பிட்டு என்ன மன்னிச்சிடுங்க இன்னைக்கு அவன் வரக்கூடிய நாள் இல்ல போல என சொன்னார். எனக்கு இந்த லெட்டரை கண்டிப்பாக இன்னைக்கு போஸ்ட் பாக்ஸில் போடணும் என்ன பண்ண என கேட்டார்.
ஐயோ, பாட்டி ரெட் கலர் பெட்டியா அது ரொம்ப உயரத்துல இருக்கே எப்படி போட முடியும் என்றான். ஜெனியும் ஆமாம் பாட்டி என சொல்ல, பாட்டி சோகமானார். அவரது முகம் வாடியது இருவருக்குமே பிடிக்கவில்லை. பாட்டி அப்பா வந்ததும் போடலாமா? என ஜாக் கேட்க அவன் வந்தாலும் நாளைக்கு தானே போட முடியும் என்றார்.
இப்போ என்ன பண்ணுவது என யோசிக்க, எந்த ஒரு ஐடியாவும் கிடைக்கவில்லை. பாட்டி முகம் வாடியது. ஜாக் ஜெனியிடம் வா, விளையாடலாம் என்று சொல்ல, பாட்டி கடிதத்தை டேபிள் மேல வைத்து சென்றார். ஆனால் அவரின் சோகமான முகம் ஜெனியை விளையாட விடவில்லை. அவள் சிந்தித்து கொண்டே இருக்க ஒரு ஐடியா கிடைத்தது.
வீட்டில் இருந்த நாற்காலியையும் அந்த லெட்டரையும் தூக்கி கொண்டு ரோட்டை கடந்து அந்த சிகப்பு நிற தபால் பெட்டியை அடைந்தாள். நாற்காலியை பாதுகாப்பாக அதன் அருகில் போட்டு விட்டு, அதன் மேல் ஏறி கடிதத்தை அந்த பெட்டியில் போட்டாள். அப்போதுதான் அவளுக்கு சந்தோசமாக இருந்தது.
ஜெனி வீட்டிற்கு திரும்பவும், பாட்டி லெட்டரை தேடவும் சரியாக இருந்தது. நாற்காலியை எடுத்து கொண்டு எங்கே சென்றாய், என் லெட்டர் எங்கே என கேட்க, அதை போஸ்ட் செய்து விட்டேன் என்றாள் ஜெனி. எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது என பாட்டி கேட்க, அதுவா...

நானும் ஜாக்க்கும் அம்மா ஷெல்ப் மேல ஒளித்து வைத்திருக்கும் தின்பண்டங்களை இதன் மேல் ஏறி நின்று தான் எடுப்போம். அப்போ நாங்க ரொம்ப உயரமா தெரிவோம். உங்க லெட்டரை அப்படிதான் உயரமாகி போஸ்ட் செய்தேன் என்றாள். பாட்டி அவளை கட்டிப்பிடித்து உம்மா கொடுத்தார்.
ஜாக்கை அழைத்து அவள் யோசித்து செயல்பட்டதை பாட்டி சொல்ல அவன் சாரி பாட்டி நான் யோசிக்கவில்லை என்றான். அதற்கு பாட்டி ஒரு வேலையை கவனமாக செய்தால் அதை எப்படி முடிக்கலாம் என பல எண்ணங்கள் தோன்றும் என்றார். அவனும் சரி பாட்டி என்றான்.
ஆக, குட்டிஸ் இவங்க ரெண்டு பேருல நீங்க யாராக இருக்க போறீங்க என சிந்தியுங்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications