Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: மீண்டும் மீண்டுமா? ஏமாந்து போன திருடன், ரிவென்ஜ் எடுத்தானா ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டீஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க, லீவு முடிஞ்சு ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டீங்களா? சரி உங்க பிரண்ட்ஸ் கிட்ட சொல்றதுக்கு நான் ஒரு கதையை உங்களுக்காக எடுத்துட்டு வந்துருக்கேன். நீங்க இதை படிச்சிட்டு, பிரண்ட்ஸுக்கும் சொல்லுங்க. வாங்க கதைக்குள்ள போலாம்.

முன்னொரு காலத்தில், நாகலாபுரம் அப்படினு ஒரு அழகான கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் மாயா என்ற பெண் இருந்தாள். அவளுக்கு சோம்பேறியான கணவன் ஒருவன் இருந்தான். எந்த அளவுக்கு சோம்பேறி என்றால், வடிவேலு ஒரு படத்தில் சும்மா இருக்கிறதே வேலையாக சொல்வார் இல்லையா அந்த அளவுக்கு படு சோம்பேறி.

Short story for kids in Tamil : Maya and The thief

இவர்களுக்கு பாழாய் போன ஒரு நிலம் இருந்தது. மாயா தினமும் அங்கு சென்று அதை சரி செய்வாள். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அந்த நிலத்தின் அருகில் ஒரு கோவில் இருந்தது. அவளது கணவன் அவளுடன் நிலத்திற்கு சென்றாலும், அந்த கோவிலில் சென்று அமர்ந்து கொண்டு அங்கு போகிறவங்களை பற்றி புறணி பேசி கொண்டிருப்பான்.

ஒருநாள் மாயா நிலத்தை பண் செய்ய கிளம்பினாள். அவள் கணவன் வீட்டில் இருந்தான். அவள் வீட்டின் வழியாக வந்த வியாபாரி ஒருவன் அவளது கணவனிடம் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என கேட்டான். அதை எடுத்து கொடுக்காமல், அவனையே நீ உள்ளே சென்று எடுத்துக்கொள் என்றான். வியாபாரியும் சமையலறையில் இருந்து தேவையானதை எடுத்து உண்டான். ஏதோ அவன் நல்லவன் என்பதால் வீட்டில் இருந்து எந்த பொருளையும் திருடவில்லை. திருடும் அளவுக்கு மாயா வீட்டிலும் பெரிய பொருட்கள் இல்லை. ஆனாலும் அவளது கணவன் படுக்கையில் இருந்து எழாமல் வியாபாரியை உள்ளே அனுமதிப்பது சரியான செயல் அல்ல.

அப்படிதான் ஒருநாள் மாயா அவளது நிலத்தை தோண்டி விதைப்பதற்காக செம்மை செய்து கொண்டிருந்தாள். அந்த வழியாக வந்த வழிப்போக்கன் ஒருவன் அவளிடம் இந்த நிலத்தை என்னிடம் விற்கிறாயா? ஏன் தனியாக கஷ்டப்படுகிறாய், என்றான். மாயா சிறு புன்னகையுடன் இது என் முன்னோர்கள் எனக்காக கொடுத்தது இதை விற்க எனக்கு விருப்பமில்லை என்றாள். வழிப்போக்கன் ஒரு திருடன் அவன் அருகில் இருக்கும் கோவில் சிலையில் இருக்கும் நகைகளை திருடும் எண்ணத்தில் நிலத்தை விலைக்கு கேட்டான்.

அவன் நிலத்திற்கு இரட்டிப்பு விலை தருகிறேன் என்றான். அவன் எண்ணத்தில் நிலத்தில் சுரங்கப்பாதை தயார் செய்து கோவிலில் இருக்கும் நகையை எடுத்து விடலாம் என்று திட்டம் போட்டிருந்தான். ஆனால் இதை அறியாத மாயா நிலத்தை விற்க மாட்டேன் என் உறுதியாக சொன்னாள். வழிப்போக்கன் ஐந்து மடங்கு விலை கொடுத்து வாங்குகிறேன், நீ கஷ்டப்பட வேண்டாம், அந்த பணத்தை வைத்து வேலை செய்யாமல் வாழலாம் என்றான். பாழான இந்த நிலத்திற்கு இவ்வளவு விலை கொடுக்கிறானே, இதில் ஏதோ தவறாக இருக்கிறது என மாயா நினைத்தாள்.

அவனிடம், நான் இதில் விவசாயம் செய்ய போகிறன் என்று நீங்கள் நினைத்துவிட்டீர்களா? அதுதான் இல்லை. இந்த நிலத்தை என் முன்னோர்கள் காலத்தில் இருந்தே வைத்துள்ளார்கள். அவர்கள் சேர்த்து வைத்த பெரும் புதையல் இந்த நிலத்தில் இருப்பதாக சொன்னார்கள். என் கணவரும் புதையல் எந்த இடத்தில் இருக்கும் என்ற குறிப்பையும் கண்டுபிடித்து விட்டார். யாராவது புதையலை விட்டு முட்டாள்தனமாக கொஞ்ச பணத்திற்காக நிலத்தை விற்பார்களா? என்றாள் மாயா.

திருடனோ சிறு புன்னகை செய்துவிட்டு, ஆமாம் நீயே வைத்துக்கொள். அது உனக்கு சொந்தமானது என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அவன் மனதுக்குள் முட்டாள் பெண் யாராவது புதையல் இருக்கு என்பதை வெளியே கூறுவார்களா என நினைத்து கொண்டே இரவுக்காக காத்திருந்தான்.

மாயா பொழுது சாய்ந்ததும் கடப்பாரை, மண்வெட்டியை எடுத்து வீட்டுக்கு புறப்பட்டாள். கிராமமே அமைதியாக ஆனது. திருடன் நிலத்தின் வழியாக கோவிலில் திருட செல்வதை விட, இந்த புதையலை எடுத்து விட்டால் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழலாம் என திட்டம் போட்டான்.

திருடன் நிலத்தின் ஒரு மூலை முடுக்கில்லாமல் தோண்டினான். எங்கு தேடியும் எந்த புதையலும் கிடைக்கவில்லை. சூரியன் வர தொடங்கியது, இதற்குமேல் இங்கு இருந்தால் ஆபத்து என எண்ணி அங்கிருந்து சென்று விட்டான். காலையில் நிலத்திற்கு வந்த மாயா எதிர்பார்த்தது போலவே நிலம் செம்மையாக விதைப்பதற்கு ஏதுவாக இருந்தது. அவன் மேல் இருந்த சந்தேகத்தை அவள் வேறு வழியில் பயன்படுத்தி கொண்டாள்.

Short story for kids in Tamil : Maya and The thief

விதைகளை விதைத்து, நல்ல விளைச்சல் பெற்றாள். இப்போது அவளுக்கு நகைகள், சேர்த்து வைக்க பணம் என ஏழ்மையில் இருந்து விலகினாள். ஏமாந்து போன திருடன் கொஞ்ச நாள் கழித்து அவளை பார்த்தான். இந்தமுறை அவன் கெட்டப்பை மாற்றி வந்தான். மாயா அணிந்திருந்த நகைகளை பார்த்து அப்போ இவளுக்கு புதையல் கிடைத்துவிட்டது போல, மாயாவின் வீட்டை கொள்ளையடிக்க முடிவு செய்தான். அதன் பிறகு என்ன நேர்ந்தது என்று அடுத்த வார கதையில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆகவே குழந்தைகளே, நம்மை சுற்றி என்ன நடக்கிறது, அதிலிருந்து நமக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என யோசித்து செயல்படுங்கள். திருடன் ரிவென்ஜ் எடுத்தானா என்பதை அடுத்த வாரம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+