குழந்தை நீதி கதைகள்: நானெல்லாம் எவ்ளோ பெரிய ஸ்விம்மர் தெரியுமா? மோனாவின் பெருமைகள்
சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டீஸ், எப்படி இருக்கீங்க.. மழையில் ஜாலியா விளையாடுறீங்களா.. கொஞ்சம் பாதுகாப்பாகவும் இருப்பது நல்லது. உங்களில் யாருக்கெல்லாம் நீச்சல் நல்லா தெரியும். உங்கள் நண்பர்களில் யாருக்காவது நீச்சல் தெரியுமா? சரி தெரியும் சொல்ற நண்பர்கள்கிட்ட இந்த கதையை சொல்ல மறக்காதீங்க.
மதிய உணவு இடைவேளை வர, மோனா தனது டிபன் பாக்ஸை திறந்தாள். அருகில் இருந்த சுனில், சர்மா, ரேணு எல்லாம் அவள் பக்கம் திரும்பவே, ஒரு நொடியில் டிபன் காலி ஆனது. சர்மா.. ஆமா இவ்ளோ ருசியா இருக்கே உங்க அம்மா நல்ல சமைக்கிறாங்க சொல்லு என சொல்ல, மோனா குறுக்கிட்டு அம்மாவா.. இதன் நான் தான் சமைத்தேன் என்றாள்.

ஷாக்கான ரேணு, நீயா.. உன்ன எப்படி உங்க அம்மா அடுப்பு பக்கத்தில் விடுறாங்க. என்னை எல்லாம் எங்க அம்மா தீ சுட்டுடும் சொல்லியே பக்கத்தில் நிக்க கூட விட மாட்றாங்க. ஆசை பட்டு கேட்டா கூட இன்னும் கொஞ்சம் வருஷம் ஆகட்டும் சொல்லிடுறாங்க. சிரித்த சர்மா, அப்போ உனக்கு சமைக்கவே தெரியாதா என்றான் ஏளனமாக.
உன்னை மட்டும் உங்க அம்மா எப்படி செய்ய விடுறாங்க, சுனில் கேட்க. எங்க அப்பாவும் அம்மாவும் 2நாள் ஊருக்கு போனா நான்தானே சமைக்கணும் என்றாள் மோனா. தனியா இரண்டு நாள் வீட்ல இருந்தியா.. அதிர்ச்சியானான் சர்மா. ஆமா, அதுனால் என்ன என்னோட ரூம் இருட்டா இருந்தாலும் என்னால் இருக்க முடியும் என மோனா சொல்ல மணி அடித்தது.
வீட்டுக்கு திரும்பும் போது, இந்த மோனா பாத்தியா எல்லாமே தெரிஞ்சி வச்சிருக்கா என்றான் சுனில். ஆமாம் சமைக்கிறாள், இருட்டுலையும் தனியாக இருக்கிறாள் பாரேன் என்றான் சர்மா. நானெல்லாம் ரொம்ப பயப்படுவேன்ப்பா என்றாள் ரேணு.
உனக்கு ஒண்ணு தெரியுமா? அவ நீச்சல் பயிற்சிக்கு போறாளாம். அவளோட கோச் நீ சூப்பரா பண்ற, உன்னால கடல்ல கூட நீந்த முடியும் என்று சொன்னாராம் என்றாள் ரேணு. ஓ.. இது வேறயா.. அவளுக்கு நிறைய திறமைகள் இருக்குல்ல, நம்ம தான் சும்மா தண்டமா இருக்கிறோம் என பேசிக்கொண்டே வீட்டை அடைந்தார்கள்.
மறுநாள் ஆசிரியை, நாளை ஏரி சுற்றி பார்க்க செல்கிறோம். உங்களுக்கு தேவையான பொருட்கள், ஸ்னாக்ஸ் எல்லாம் எடுத்து வாருங்கள் என சொல்ல, மாணவர்கள் குஷியானார்கள். பிக்னிக்கிற்கு தயாரான மாணவர்களை ஆசிரியர் சில விதிமுறைகள் சொல்லி அழைத்து சென்றார். இந்த ஏரியில் குளிக்க அனுமதி கொடுத்திருந்தா என்னோட அழகான நீச்சல் உடையை எடுத்து வந்திருப்பேன் என்றாள் மோனா.
மோனா.. என்னோட கோச், தினம் தினம் நீ நல்லா பண்ற, உன்னால தனியாவே கரைகளை கடக்க முடியும் சொன்னாங்க தெரியுமா என சொல்ல, சுனில் மிஸ் தான் நம்ம கரையை தவிர வேறு எங்கும் நிற்க கூடாது சொல்லிட்டாங்களே என்றான். ஆமா, இல்லை என்றால் ஏரியின் அந்த கரையை தொட்டு திரும்பி வந்திருப்பேன் என்றாள் மோனா.
ஒருவேளை இந்த ஏரி ஆழமாக இருக்கலாம் என்றான் சர்மா. அதற்கு சிரித்த மோனா, நீச்சல் தெரிஞ்சவங்களுக்கு ஆழம் எல்லாம் பெரிய விஷயமே இல்லை என்றாள். மாணவர்கள் சிலர் கரையில் பிடித்து விளையாடி கொண்டிருக்க, அதிதி பந்தை பிடிக்க முயலும்போது ஏரியில் தவறி விழ, சுனில்.. மோனா அவளை காப்பாற்று.. காப்பாற்று என்று கத்தினான்.
அரவிந்த் நீ ஆசிரியை அழைத்து வா, மோனா என்ன செய்கிறாய்.. அவளை காப்பாற்று என ரேணு, சர்மா கத்த.. நின்ன இடத்தை விட்டு ஒரு இன்ச் கூட நகராமல் அதிர்ச்சியில் இருந்தாள் மோனா. ரேணு அவளை பிடித்து, அதிதிக்கு நீச்சல் தெரியாது, அவள் மூழ்கி விடுவாள் அவளை காப்பாற்று என சொல்ல, மோனா ஏதோ முணுமுணுத்தாள்.

எனக்கு நீச்சல் தெரியாது, நான் பொய் சொன்னேன் என சொன்னதையே சொல்ல, அதற்கு அரவிந்த் ஆசிரியை அழைத்து வந்து, அவர் ஏரியில் குதித்து அதிதியை காப்பாற்றினார். அடுத்த நொடியே பேருந்தில் மாணவர்கள் கிளம்பினார்கள். ஒருவர் கூட மோனாவின் அருகில் இல்லை, மோனா அழுது அழுது கண்கள் சிவந்து போய் இருந்தாள்.
எதற்காக அவள் பொய் சொன்னாள், என கூட்டமாக இருந்து முணுமுணுத்தது அவள் காதுகளில் கேட்டு கொண்டே இருந்தது. 2,3 நாட்கள் ஆகியும் அவளிடம் யாருமே பேசவிலை. மோனா தனது நண்பர்களை வீட்டுக்கு வரவைத்தாள். தான் சொன்ன பொய்கள் அனைத்திற்கும் மன்னித்துவிடுங்கள். பேசாமல் இருக்காதீர்கள் என்றாள்.
நண்பர்களும் அவளை மன்னித்து ஏற்று கொண்டார்கள். ஆனால் நீ திரும்பவும் பொய் சொன்னால், ஹே.. ஸ்விம்மர்! அப்படித்தான் கூப்பிடுவோம் என்றான் சுனில். மோனாவும் அதற்கு ஒத்துக்கொண்டாள். அதே போல் நடந்தும் கொண்டாள்.
ஆகையால் குழந்தைகளே, நீங்கள் சொல்லும் பொய் எப்போது வினையாக மாறும் என்று உங்களுக்கே தெரியாது, அதனால் உண்மை காயப்படுத்தினாலும் அதை பேசுவதே சிறந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications