குழந்தை நீதி கதைகள்: ஒதுக்கப்பட்ட நிக்கி.. இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டீஸ், எப்படி இருக்கீங்க. எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். உங்களை சுற்றி நிறைய பேர் இருந்தாலும் எப்பொழுதாவது யாரும் உங்கள் உடன் இல்லாதது போல உணர்ந்து இருக்கீறிர்களா? அப்போ கண்டிப்பா இந்த கதையை படிங்க.

அம்மா.. அம்மா.. இனி நான் அந்த டான்ஸ் கிளாஸ் போக மாட்டேன்.. என அழுதுகொண்டே நிக்கி வீட்டிற்குள் வர அம்மா வேகமாக வந்து அவளிடம் பேச தொடங்கினார். மகளின் தலையில் கை வைத்து முடியை ஒதுக்கி விட்டு தடவி கொடுத்தார். ஒரு நிமிடம் அழுகையை குறைத்து கொண்டாள் நிக்கி.

kids story wild stories children stories tamil story child

ஏன்.. என்ன ஆனது நிக்கி. அங்கு உன்னை யாரும் திட்டினார்களா? உங்க டான்ஸ் மாஸ்டர் ரொம்ப நல்லவங்க, அதட்டி கூட பேச மாட்டங்களே என கேட்டார் அம்மா. மாஸ்டர் என்ன எதுவும் சொல்லல அம்மா, ஆனா நான் போக மாட்டேன் என மீண்டும் அழுதாள்.

நிக்கியின் கைகளை பிடித்து கொண்ட அம்மா, சரி விடு நீ போக விருப்பப்படவில்லை என்றால் விட்டு விடலாம் என சொன்னார். மெதுவாக என்ன நடந்தது என்ன சொல்ல ஆரம்பித்தாள். அங்கு வரும் ரஞ்சனி, மீனா, ஷுஹி எல்லோரும் என்ன ரொம்ப கேலி பண்றாங்க, நான் ரொம்ப திமிர் பிடிச்சவ, சீன் போடுறவனு சொல்லி என்ன ரொம்ப காயப்படுத்துறாங்க. யாரும் என்கிட்ட பேசுறது கூட இல்லம்மா, என சத்தமாக அழுதாள் நிக்கி.

kids story wild stories children stories tamil story child

சரி.. சரி.. நீ அந்த மாதிரி எதுவும் நடந்து கொண்டாயா? என அம்மா கேட்க, அப்படில்லாம் எதுவும் இல்லம்மா, நான் கிளாஸ் போனதும் இவங்க எல்லாம் ஒண்ணா இருப்பாங்க என்கிட்ட பேசமாட்டாங்க, மாஸ்டர் வந்ததும் நான் சீக்கிரமா ஸ்டெப் கத்துக்கிட்டு ஆட ஆரம்பிச்சிடுவேன். ஆன இவங்க ஒழுங்கா பண்ணலன்னு மாஸ்டர் கிட்ட திட்டு வாங்குவாங்க. நான் எதுவும் சொல்லாம அமைதியா இருப்பேன். நான் தனியா ப்ராக்டிஸ் பண்ணிட்டே இருப்பேன் என்றாள் நிக்கி.

சரி, நான் ஒரு சீக்ரெட் சொல்லி தரேன், அத செஞ்சி பாரு கண்டிப்பா உன்ன எல்லோருக்கும் பிடிக்கும் என்றார் அம்மா. அப்படியே செய்றேன்ம்மா என ரகசியத்தை கேட்டுக்கொண்ட நிக்கி, டான்ஸ் கிளாஸ்ஸிற்கு மறுநாள் சென்றாள். நிக்கி, அம்மா சொன்னதை செய்ததுமே, ரஞ்சனி இது எப்படி பண்ணின என கேட்க ஆரம்பித்தாள். பின்னாடி மீனாவும் வந்தாள். அப்படி நிக்கியை கேலி செய்தவர்கள் எல்லாம் அவளுடன் சிரித்து பேச நிக்கி சந்தோஷமானாள்.

kids story wild stories children stories tamil story child

அம்மாவிடம் வந்து, அம்மா.. அம்மா நீங்க சொன்ன மாதிரியே பண்ணினேன் இப்போ எல்லோரும் என்கிட்ட நல்லா பேசுறாங்க, எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு, இனிமேல் கண்டிப்பா நான் போவேன் என்றாள் நிக்கி, மிகவும் சந்தோசமாக. அப்படியா என அம்மா சொன்னார்.

ஆமாம் அம்மா, ஷுஹி டான்ஸ் கிளாஸ்ல இருந்தாள். நான், நீ நேத்து போட்ட அந்த ஸ்டெப் நல்லா இருந்ததுன்னு சொன்னேன். உடனே அவளும் நீ எனக்கு இந்த ஸ்டெப் ஒன்னு சொல்லி தரியா கேட்க, அவ அது நல்லா பண்ணலன்னு மாஸ்டர் திட்டுனாங்க, அதை சொல்லி கொடுக்கும்போதே மீனாவும் ரஞ்சனியும் வந்தாங்க. நான் நல்லா சொல்லி தரேன்னு சொன்னாங்க. அப்போ மாஸ்டர் அதை பார்த்து நிக்கி நீ நல்லா சொல்லி கொடுக்கிற, பேசாமே நீயே மாஸ்டர் ஆயிடுனு சொன்னாங்க. எல்லோரும் நல்லா சிரிச்சோம். ஜாலியா இருந்துச்சு அம்மா என்றாள் நிக்கி.

ஆமாம், அம்மா அதுதான் சொன்னார். நீ நல்லா செய்யும் பொழுது அவர்கள் அதை சரியாக செய்யவில்லை என யாராவது சொன்னால் உன் மேல் ஒரு வெறுப்பு வரும். அதே சமயம் நீ பேசாமல் தனியாக இருந்தால் அது இன்னும் அவர்களுக்கு உன் மேல் தவறான கண்ணோட்டத்தை உருவாக்கும் என்றார். நீயாக முன்வந்து அவர்கள் செய்த சிறு விஷயம் என்றாலும் பாராட்டு என்றார். நீக்கியும் அதை தான் செய்தாள். அவளுக்கு இப்போது ஒரு சந்தோசம் கிடைத்தது.

ஆகவே குழந்தைகளா, உங்கள் உடன் இருப்பவர்களிடம் இருந்து நீங்கள் தனியாக இருப்பதாக நினைத்தால் இதை கண்டிப்பாக செய்து பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+