குழந்தை நீதி கதைகள்: ஆத்தி.. இது என்ன ரவிக்கு வந்த சோதனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. யாரெல்லாம் கிறிஸ்துமஸ் லீவுக்காக காத்துகிட்டு இருக்கீங்க. விடுமுறையில் என்ன பண்ணலாம் என்று யோசிச்சிட்டு இருந்தீர்கள் என்றால் அப்படியே இந்த குட்டி கதையை கொஞ்சம் படிங்க.

ரவி.. ரவி.. அம்மா கூப்பிட்டதும் ஓடி வந்தான் ரவி. பிரிட்ஜ்ல ஐஸ்கிரீம் இப்போது தயாராக வச்சிருக்கேன். கடந்த முறை மாதிரி அது ரெடி ஆகுறதுக்குள்ள எடுத்து சாப்பிட்டு விடாத, நீ திருடி தின்னாலும் எனக்கு தெரியும் என சொல்லி கொண்டே சில பைகளை எடுத்தார்.

kids story wild stories children stories tamil story child

அம்மா கடைக்கு போறீங்களா என்றான் ரவி. ஆமாம் நான் சீக்கிரம் வந்து விடுவேன். ஆகையால் நீ அதை எடுத்து சாப்பிட முயற்சிக்காதே என சொல்லிக்கொண்டு கிளம்பினார். ரவியும் நல்ல பையனாக அவனது வீட்டு பாடங்களை எழுதினான், படித்தான். அப்படியே டிவி முன்னால் அமர்ந்து கார்ட்டூன் பார்த்தான்.

ஆனால் அவனது மனசு முழுவதும் அந்த ஐஸ்கிரீம் மேலேயே இருந்தது. அம்மா பிரிட்ஜ் பக்கத்துலயே போக கூடாது சொன்னார்களே ஆனா நம்ம போவோம் சும்மா ரெடி ஆகிவிட்டதா என தெரிந்து கொள்ளலாம் என்று யோசித்தவாறே அருகில் சென்றான்.

kids story wild stories children stories tamil story child

இரண்டு மூன்று முறை பிரிட்ஜை தொட்டு பார்த்தான், திறந்து பார்த்தான் பின் டிவி முன் வந்து அமர்ந்தான் ரவி. அவனுக்கு கொஞ்ச நேரத்தில் பொறுமை போகவே சரி தொட்டு பார்க்கலாம் என்று ஃபிரிஸரில் இருந்த பிங்க் டப்பாவை எடுத்தான். அது கொஞ்சம் டைட்டாக இருந்தது. அப்போ ஐஸ்கிரீம் தயாராகி விட்டது என யோசித்த அவன் அந்த டப்பாவை இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து வேகமாக இழுத்தான்.

அவ்வளவுதான்... முடிந்தது என்பது போல டப்பாவில் மூடி திறந்து ஐஸ்கிரீம் மேலே கொட்டியது. பிரிட்ஜின் உள்ளே கொட்டியதை துடைக்க முயற்சித்தான் ரவி. ஏற்கனவே டப்பாவில் பாதி ஐஸ்கிரீம் கொட்டியது. இனி பிரிட்ஜ் இப்படி அசிங்கமாக இருந்தால் அம்மா கொன்னுவிடுவார்கள் என யோசித்த ரவி கண்ணில் ஒரு துணி சிக்கியது. அங்கிருந்து கையை மட்டும் நீட்டி துணியை தூக்க, அடுத்து ஒரு சத்தம்.

kids story wild stories children stories tamil story child

துணியின் ஓரத்தில் சிக்கிக்கொண்டிருந்த இரண்டு கண்ணாடி டம்ளர்கள் உடைந்து சுக்கு நூறாக நொறுங்க ரவியின் கண்கள் பிதுங்கி கொண்டு வெளியில் வந்தது. போச்சு.. போச்சு.. செத்தேன் என புலம்பிய ரவி ஐஸ்கிரீம் டப்பாவை உள்ளே வைத்து முதலில் சமையலறையை சுத்தம் செய்ய தொடங்கினான்.

அங்கிருந்த துடைப்பத்தை எடுத்து மூலை முடுக்கில் சிதறிய கண்ணாடி துண்டுகளை தேடி தேடி சுத்தம் செய்தான் ரவி. அவனது இதயம் பல நூறு மடங்காய் துடித்து கொண்டிருக்க துடைப்பத்தை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு திரும்ப சுருக்கென அவன் காலில் ஏதோ குத்தியது.

அடுத்த கணமே அழ ஆரம்பித்தான் ரவி.. வலி தாங்க முடியாமல் கதறிய அவன் காலில் இருந்து கண்ணாடி துண்டை பிடுங்கி எடுத்ததும் ரத்தம் கொட்ட தொடங்கியது. அவனுக்கு என்ன செய்யவென்றே தெரியவில்லை. ரத்தத்தை நிப்பாட்ட பாத்ரூம் உள்ள கப்போடில் இருந்த முதலுதவி கிட் நியாபகம் வர வேக வேகமாக அங்கு சென்றான்.

கப்போர்டை திறந்து முதலில் சில காட்டன்களை எடுத்து ரத்தத்தை அழுத்தி நிறுத்த முயற்சித்தான் ரவி. அது நிரம்பி வழிய மீண்டும் சில காட்டன்களை எடுக்க போய் கப்போர்டில் வேகமாக தலையில் முட்டி கொண்டான். அவ்வளவுதான் அடுத்த நொடி அவனுக்கு என்ன நடந்தது என தெரியாமலே சரிந்து கீழே விழுந்தான்.

1 மணி நேரமாவது இருக்கும். அவன் மீண்டும் கண்முழிக்கும் போது , இனி மீண்டும் எதுவும் செய்தால் அடி விழும் என புரிந்து கொண்ட ரவி சோகமாக சோபாவில் வந்து அமர்ந்தான். அவன் அம்மா வீட்டுக்கு திரும்பியதும் கட்டி பிடித்து அழ ஆரம்பித்தான் ரவி.

நடந்ததை எல்லாம் அம்மாவிடம் சொல்ல, அம்மா அவனை திட்டாமல் சரி விடு இதற்காகத்தான் அந்த பக்கம் போகாதே என எச்சரித்தேன் என்றார் அம்மா. சரி அப்போ உனக்கு ஐஸ் கிரீம் குடுக்க முடியாதே காலில் வேறு காயம் இருக்கே என்றார் அம்மா.

ரவி சோகமானதும் சரி கொஞ்சம் தரலாம் என சிரித்தார் அம்மா. அதன் பிறகு ரவி இப்படி ஒரு சேட்டையை செய்யவில்லை. பட்டது போதும்டா எப்பா என அமைதியாக அம்மா கொடுத்ததை சாப்பிட்டு ஜாலியாக இருந்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+