குழந்தை நீதி கதைகள்: அழகால் வந்த ஆணவம்.. உஷாரான ஸ்னோயி!
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டீஸ், எப்படி இருக்கீங்க.. பரீட்சை விடுமுறை எப்படி கழிக்கிறீர்கள். சரி உங்களிடம் ஒரு கேள்வி எப்பொழுதாவது நீங்கள் அழகு என்று ஆணவம் கொண்டிருக்கிறீர்களா? ஒரு வேளை நீங்கள் அழகு என்ற பெருமை உங்களில் யாருக்காவது இருந்தால் கண்டிப்பாக இந்த கதையை படிங்க.
ஸ்னோயி.. ஸ்னோயி என அழைத்துக்கொண்டே கிரண் வீட்டிற்குள் நுழைந்தான். அவன் பள்ளி விடுமுறைக்கு தனது சித்தி வீட்டிற்கு சென்று அன்று தான் வீட்டிற்கு மீண்டும் வந்தான். அவன் அழைக்கும் சத்தம் கேட்டும் ஸ்னோயி அதை காதில் வாங்கி கொள்ளவில்லை.

மீண்டும் ஸ்னோயி.. என கிரண் அழைக்க, சோபாவில் இருந்து கொண்டே இவனுக்கு வேறு வேலையில்லை எப்போ பாரு நம்மை கூப்பிட்டு கொண்டே இருப்பான் என அலுத்து கொண்ட ஸ்னோயி அவனது மெத்தைக்கு சென்று படுத்தான். இருந்தாலும் விடாமல் அவனை தேடி சென்று கட்டிப்பிடித்தான் கிரண்.
உடலை சிலுப்பி கொண்டு அவன் பிடியில் இருந்து தப்பித்து ஓடினான் ஸ்னோயி. புஸு புஸுவென இருக்கும் அவனது வெள்ளை முடி, நேர்த்தியாக வெட்டப்பட்டு, குட்டி காதுகள், நீண்ட வால் என மிகவும் அழகானவன் ஸ்னோயி. ஆமாம் ஸ்னோயி ஒரு நாய் குட்டி தான்.
ஸ்னோயிக்கு, அவனை யார் தூக்கினாலும் தொட்டாலும் பிடிக்காது, தனது அழகான மிருதுவான முடி கலைவதாக அவனே நினைத்து கொள்வான். கிரணின் அப்பா, அம்மா என யாருடனும் செல்லமாட்டான். கிரணின் நண்பர்கள் வந்தாலும் அவர்களை பார்த்து கோவமாக குரைத்து கொண்டே ஓடி விடுவான்.
இருந்தாலும் கிரண் அவனை தேடுவதை விடவில்லை. அப்படித்தான் ஒருநாள், கிரணின் வீட்டிற்கு பின்னால் இருக்கும் தோட்டத்தில் திடீரென நாய் குரைக்கும் சத்தம் கேட்க, அவன் அங்கு நெருங்கி சென்றான். அங்கு ஒரு குட்டி நாய் அழுக்காக இருக்க, என்னாச்சி உனக்கு.. பசிக்குதா.. உன் பேரு என்ன.. சரி மோட்டி ஆ.. இங்கயே இரு, நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன் என சொல்லி வீட்டுக்குள் சென்றான்.

இதை பார்த்த ஸ்னோயி மோட்டியை பார்த்து 2 முறை குரைத்தான். பின்னர், அவன் நம்மை விட அழுக்காக இருக்கிறான் அவனை எப்படி கிரானுக்கு பிடிக்கும் என நினைத்து கொண்டு மீண்டும் சோபாவில் படுத்துகொண்டான்.
மோட்டிக்கு உணவை கொடுத்ததும் அது கிரணின் கையை நக்கி நன்றி சொன்னது. சரி இங்கிருந்து போ என கிரண் சொல்ல, மோட்டி அந்த தோட்டத்தில் ஒரு ஓரமாய் படுத்துக்கொண்டது. கிரணின் அம்மா தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்யும்போது மோட்டி உடன் நடந்து கம்பெனி கொடுத்தது. அப்பாவுடன் பந்து விளையாடியது. கிரண் பள்ளி விட்டு திரும்பும் போதெல்லாம் அவனை நக்கி முத்தம் கொடுத்தது.
இதையெல்லாம் பார்த்த கிரணின் அப்பா, உனக்கு மோட்டி பிடிக்குமா? இல்லை ஸ்னோயி பிடிக்குமா என கேட்க, ஸ்னோயி வேற யாரு என்னதான் சொல்வான். பின்ன அழுக்கா இருக்குற அவனையா சொல்லுவான் என நினைத்து கொள்ள, கிரண் நிச்சயமா மோட்டியை தான் பிடிக்கும் என்று சொன்னான்.
ஏன் என்று கிரணின் அப்பா கேட்க, அதுவா அவன் நான் தனியாக இருக்கும்போதெல்லாம் என்னுடன் விளையாடுவான். அம்மாவுடன் நடந்து செல்வான், என் நண்பர்களுடன் விளையாடுவான். ஆனால் ஸ்னோயி எப்போதும் அந்த சோபாவிலே படுத்துக்கொள்வான். அவன் என்னுடன் இருந்ததே இல்லை என்று சொல்லவும் அதை கேட்ட ஸ்னோயி ஷாக் ஆகி நின்றது.
அழகினால் நம்முடன் யாரும் இருக்க மாட்டார்கள். அன்பினால் மட்டுமே நெருக்கமானவர்களை உடன் வைத்திருக்க முடியும் என்பதை உணர்ந்த ஸ்னோயி, கொஞ்சம் கொஞ்சமாக கிரானுடன் நெருங்கி பழக ஆரம்பித்தது. அவனுடன் விளையாடி அவன் அன்பை பெற்றது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications