குழந்தை நீதி கதைகள்: கடவுளை நேர்ல பார்த்தா நீங்க என்ன கேட்பீங்க?.. இவர் என்ன கேட்ருக்கார் பாருங்க!
சென்னை: Kids story in Tamil: ஹாய் பிரண்ட்ஸ்! குட்டியான ஒரு நிமிட கதைகள் படிக்க நமக்கு பிடிக்கும் இல்லையா. அது போலத்தான் ஜென் கதைகளும் உங்க நேரத்தை விரயம் செய்யாமல் படிக்கலாம். ஜென் கதைகள் பத்தி இங்க நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கலாம். தெரியலைனாலும் பரவாயில்லை. அந்த காலத்துல துறவிகள் வாழ்ந்தாங்க அவங்க சில தத்துவங்களை நம்ம வாழ்க்கையோடு ஒத்துப்போற மாதிரி கதைகளாக சொல்வாங்க. சரி கதை படிக்கலாம் வாங்க.
ஒரு நாள் துறவியை காண ஒரு சாதாரண மனிதன் சென்றான். அவன் தன் வாழ்க்கையில் விரக்தியாக இருப்பதாகவும் யாரை நம்புவது என்று தெரியவில்லை என துறவியிடம் சொல்லி வருந்தி இருக்கிறான். துறவி அவனிடம், உனக்கு ஒரு கதை சொல்கிறேன் நீ எளிதில் புரிந்து கொள்வாய் என்றார். ஒருவன் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருக்கிறான். திடிரென அவன் கனவில் கடவுளை காண்கிறான். அவரிடம் பேட்டி எடுப்பது போல செல்கிறான்.

அவன் கடவுளை நோக்கி, கேள்விகளை கேட்கலாமா? என்கிறான்
கடவுள் சிரித்தவாறே, கேள் ! என்கிறார்.
நீங்கள் படைத்த மனித இனத்தில் எது உங்களை ஆச்சர்யப்படுத்துகிறது? என்றான்.
கடவுள் பதில் அளிக்கிறார், மனிதன் தன் குழந்தை பருவத்தில் இருந்து சீக்கிரமாக வளர்ந்து விடவேண்டும் என்று பெரியவனாக வளந்து விடுகிறான். ஆனால் வளர்ந்த பிறகு அவன் எண்ணங்கள் குழந்தை போன்றே இருக்கிறது.
பணம் சம்பாதிப்பதற்காக வாழ்க்கை முழுவதும் உடல்நலனை கருதாமல் ஓடுகிறான். சம்பாதித்ததை பிற்பகுதியில் உடல்நிலை சரியில்லை என செலவு செய்கிறான்.
எதிர்காலம் என்னவாகுமோ என்று எண்ணியே நிகழ்காலத்தை தொலைக்கிறான். நிகழ்காலமும் இல்லாமல் எதிர்காலமும் இல்லாமல் பின்பு தவிக்கிறான்.
சாகாமல் இருப்பதற்காகவே வாழ்கிறான்.. ஆனால் வாழாமலே சாகிறான்..
கடவுள் அடுத்த கேள்விக்காக கைகளை அசைக்கிறார்..
நீங்கள் கடவுள் , நீங்கள் படைத்த இந்த உலகத்தில் வாழும் இந்த மனிதர்களுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கை பாடம் என்ன ? என்றான்.
கடவுள் உதடசைய மவுனமாக சிரித்தார்..
குழந்தாய்.. யாரும் உன்னை நேசிக்க வேண்டும் என போராடாதே.. அவர்கள் நேசிக்கும் அளவுக்கு உன் செயல்கள் இருக்கட்டும்..
வாழ்க்கையில் அவன் எவ்வளவு சம்பாதித்தான் என்பது முக்கியம் இல்லை.. அதை எவ்வாறு சம்பாதித்தான் என்பதே முக்கியம்..
ஒன்றைவிட மற்றொன்று சிறந்ததாக இருக்கிறதா என்பதை ஒப்பிட்டுக்கொண்டே இருக்காதே..
அனைத்தும் இருந்தால் அவன் பணக்காரன் என்று எண்ணாதே.. யாருக்கு தேவைகள் உண்மையில் குறைவோ அவனே பணக்காரன்..
நாம் நேசிக்கும் ஒருவரை எளிதில் புண்படுத்திவிடலாம்.. ஆனால் அவர்கள் மனதில் ஏற்பட்ட வலி மறைய ஆண்டுகள் ஆகலாம்..
பணம் இருந்தால் அனைத்தையும் வாங்கி விடலாம் என்று எண்ணாதே.. உண்மையான அன்பை பணத்தால் வாங்க முடியாது..
ஒருவரின் கண்ணோட்டத்தில் இருந்து மற்றொருவர் கண்ணோட்டம் வேறாகத்தான் இருக்கும்..
நல்ல நண்பன் என்பவன் தனது நட்பை எந்த சூழலிலும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.. அவன் கடினமான சூழலிலும் உடன் நிற்க வேண்டும்..
அடுத்தவர்களை மன்னித்தால் மட்டும் போதாது.. நமது தவறுகளை உணர்ந்து நம்மை மன்னித்து கொள்ள தெரிந்து கொள்ள வேண்டும்..
நீ பேசியதையும் செய்தததையும் மற்றவர் மறக்கலாம்... . ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற வலிகளை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!"
பேட்டி முடிந்தது என்பதைபோல் கடவுள் கண்ணசைத்தார்.. அவனும் கனவில் இருந்து முழித்தான் என்றார் துறவி.
தெளிந்த மனநிலையை பெற்றவனாய் அந்த மனிதன் கிளம்பி சென்றான்.












Click it and Unblock the Notifications