Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: நீங்களும் ஆகலாம் ஹீரோ.. மக்களை காப்பாற்றிய பாபி..

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. உங்களில் பலருக்கும் பரீட்சைகள் தொடங்கியிருக்கும் இல்லையா. தேர்வில் கவனமாக இருங்கள். அதே சமயத்தில் உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனித்து கொள்ளுங்கள். பாபி ஹீரோ ஆன கதையை படிச்சு பாருங்க. கண்டிப்பா நீங்களும் ஒரு நாள் ஹீரோ ஆவீர்கள்.

பாபி உங்களை போல தினமும் பள்ளிக்கு செல்லும் சிறுவன். அவன் பள்ளிக்கு போகும் வழியில் சிக்னல் மற்றும் ட்ரெயின் லெவல் கிராஸ்ஸிங் உள்ளது. அவன் எப்போதுமே அவனை சுற்றி என்ன இருக்கிறது என பார்த்துக்கொண்டே நடப்பான். அவன் நண்பர்களும் அவனுடன் தான் வருவார்கள். தினமும் பள்ளிக்கு செல்லும்போது அந்த ட்ராக் ஓரங்களில் இருக்கும் செடிகள், அதில் இருக்கும் பூக்கள் என காலையிலும் மாலையிலும் அவன் கவனிப்பதை தவறவில்லை.

Short story for kids in Tamil The hero

அங்கு இருக்கும் ட்ரெயின் லெவல் கிராஸ்ஸிங் கேட் திறப்பதற்கு, மூடுவதற்கு என கீப்பர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் மிசெஸ் லூயிஸ். அவர் கணவர் லூயிஸ் தவறிய பிறகு அந்த வேலையை அவருக்காக கொடுத்தார்கள். மிசெஸ் லூயிஸ் தினமும் சரியாக கேட் திறப்பதை பாபி பார்ப்பான். அதேபோல அவர் மூடுவதையும் பார்ப்பான். ட்ரெயின் போகும்வரை காத்திருந்து கேட் திறந்ததும் மக்கள் அந்த லெவலை கடப்பார்கள்.

இதையும் கவனமாக கவனிப்பான் பாபி. அவர்கள் வீட்டில் உள்ள சிம்னியில் புகை வெளியேறுவதை வைத்தே காற்று எந்த பக்கம் இருந்து வீசுகிறது என்பதையும் கவனிப்பான். அவன் செல்லும் வழியில் பேக்கரி கடையில் தினமும் புதிதாக என்ன வைத்துள்ளார்கள், சீக்கிரம் இதில் ஏதோ ஒன்றை வாங்கி ருசி பார்க்க வேண்டும் என அதையும் யோசித்தே நடப்பான்.

Short story for kids in Tamil The hero

ட்ராக்கின் மறுபுறத்தில் ஒரு வயதானவர் புல்லாங்குழல் வாசித்து கொண்டே இருப்பார். அவருக்கு மக்கள் லெவல் கிராஸ் செய்த உடன் சில நாணயங்களை கொடுப்பார்கள். யார் யார் அவன் வழக்கமாக செல்லும்போது வருகிறார்கள் என அதையும் கவனிப்பான். மிசெஸ் லூயிஸ் வீட்டில் புதிதாக ஏதும் செடி வைத்திருக்கிறார்கள் என்றால் அதுவும் அவன் கண்களை அடைந்துவிடும். அவ்வளவு தெளிவாக பார்த்து வைத்துள்ளான் பாபி.

அன்று பள்ளிக்கு சென்று திரும்பும் நேரம். மிசெஸ் லூயிஸ் வீட்டு சிம்னியில் எந்த புகையும் வரவில்லை. புகை வரவேண்டுமெனில் கண்டிப்பாக சமைக்க வேண்டும். அப்படியெனில் லூயிஸ் சமைக்கவில்லையா? விறகு தீர்ந்திருக்குமா? இரவு உணவிற்கு என்ன செய்வார்கள் என யோசித்து கொண்டே லெவல் கிராஸ் செய்கிறான்.

Short story for kids in Tamil The hero

பாபியும் மிசெஸ் லூயிஸும் பெரிதாக பேசி கொண்டதில்லை. இருந்தாலும் அவன் தினமும் அவரை பார்க்கும்போது சிறிதாக புன்னகை செய்திருப்பான். மிசெஸ் லூயிஸ் பார்ப்பதற்கு மிகவும் அமைதியான பெண்ணாக தெரிந்தார் பாபிக்கு. அவர் வீட்டில் சமைக்கவில்லை என்ன ஆயிருக்கும் வயதானவர் வேற என யோசித்து கொண்டே அவரது வீட்டின் கதவை தட்டினான்.

உள்ளே வா என்ற குரல் கேட்க, அந்த திசைக்கு நடந்தான். மிசெஸ் லூயிஸின் கால்களில் கட்டுகள் போட்டு இருந்தன. ஷாக் ஆன பாபி என்ன ஆச்சு என்ற வினவினான். மிசெஸ் லூயிஸ், அது வயதாகிவிட்டதால் பாத்ரூமில் தவறி விழுந்துவிட்டேன், அதனால் கால்களில் தசை முறிவு ஏற்பட்டது என நடந்தவற்றை கூறினார்.

அப்படியென்றால் இனிமேல் லெவல் கிராஸ் கேட்டை யார் திறப்பார்கள், மூடுவார்கள் என்று கேட்க, சட்டென பதறிய மிசெஸ் லூயிஸ் இன்னும் ஒரு நிமிடத்தில் ட்ரெயின் வரும் உன்னால் அந்த கேட்டை மூட முடியுமா என்று கேட்க, பாபியும் தாமதம் பண்ணாமல் வெளியே வந்து ட்ரெயின் வருவதை கண்டான். இனி ஒரு செகண்ட் விட்டாலும் பாதையில் நடக்கும் மக்களுக்கு ஆபத்து என்பதை புரிந்து கொண்டான்.

அவன் சிறியவன் என்பதால் மக்கள் அவன் பேச்சை கேட்கவில்லை. முதலில் வேகமாக ஒரு கேட்டை அடைத்தான். மற்றொரு கேட்டை அடைப்பதற்குள் ட்ரெயின் அருகில் வந்தது. ஒருவழியாக மக்களை கேட்டுக்கு வெளியே தள்ளி கேட்டை அடைத்தான்.

சில நொடிகளில் ட்ரெயின் கடந்தது, மக்களும் தப்பினார்கள். ஒருவேளை அந்த சிம்னியில் வரும் புகையை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பாபி சென்றிருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். பாபி அதை தடுத்தான். மக்கள் அவனை ஹீரோவாக கொண்டாடினார்கள். மிசெஸ் லூயிஸ் மகன் இருக்கும் இடத்திற்கு சென்றார். அந்த இடத்திற்கு வேறு கேட் கீப்பர் வந்தார். பாபிக்கு விருதுகள் கொடுத்தார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+