குழந்தை நீதி கதைகள்: குதிரைகள் இந்த உலகத்தை சொந்தமாக்கினால், நமது நிலைமை என்ன? சுவாரசிய கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எல்லோரும் எப்படி இருக்கீங்க. ஒருவேளை நம்ம உபயோகிக்கிற இந்த தொழிநுட்பம் இல்லமா இருந்து இருந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும். அப்படி ஒருத்தர் அந்த காலத்துல யோசிச்சு என்ன பண்ணி இருக்காரு கதையை படிச்சு தெரிஞ்சிக்கோங்க.

கிளைவ் அந்த காலத்தில் இங்கிலாந்து நகரத்தில் இருந்த அரசாங்கத்தில் ஒரு மிகச்சிறந்த ஆலோசகர். அன்றைய அரசருக்கு அறிவுரைகள் வழங்குவதில் மிகவும் சிறந்தவர் இவர். மக்கள் பசியால் வறுமையில் வாடுவார்கள் என அவர் கணித்து சொன்னார். அதற்கான முன்னேற்பாடுகளை அரசருக்கு அறிவுறுத்தி செய்ததால், அன்றைய பஞ்சத்தில் இருந்து மக்கள் பிழைத்தார்கள்.

Short story for kids in Tamil : The Horses

ஒருநாள் அரசரிடம் மிகவும் முக்கிமான எதிர்கால நிலையை பற்றி பேசுவதற்காக கிளைவ் விரைந்தார். அவரது குதிரை வண்டியில் புறப்பட்டார். அவரது வண்டிக்கு முன்னும் பின்னும் குதிரையில் வீரர்கள் வந்தார்கள். திடிரென அவரது வண்டி ஒரு கல்லில் ஏறி தடுமாறியது. அதுவரை அரசரிடம் பேசி ஆலோசிக்க வேண்டிய விஷயத்தை யோசித்து கொண்டிருந்தவருக்கு, திடிரென இடைமறித்தது போல ஒரு வாசனை. தன்னுடைய குதிரை வண்டியை ஓட்டும் ஜாக்கோபிடம் உனக்கு ஏதும் வாசனை வருகிறதா? என்று கேட்டார். அவன் இல்லை என்றான். ஒரு சிந்தனையிலே என்ன வாசனை எங்கிருந்து வருகிறது என்று அந்த திசையை வெறிக்க பார்த்து கொண்டிருந்தார். அவர் பார்க்கும் இடமெல்லாம் குதிரைகள் தென்பட்டன.

கிளைவ் இன்னும் ஆழ்ந்த சிந்தனைக்குள் இறங்கினார். அரசரின் அவைக்குள் நுழைந்தார் கிளைவ். அவரின் தலைமை காவலன் கிளைவ் வருமுன் இடை மறித்தான். கிளைவ் கோப்படாமல் விக்டரை நிமிர்ந்து பார்த்தார். அரசர்க்கு மற்றொரு ஆலோசனை கூட்டம் இருக்கிறது என்றான் விக்டர். கிளைவ் எதுவும் பெருசாக பேசாமல் அரண்மையின் காத்திருப்பு அறையில் இருந்தார். அவரின் தீவிர சிந்தனையை பார்த்து கொண்டிருந்தான் விக்டர்.

அப்போது அங்கிருந்த ஜன்னலின் வழியாக குதிரைகள், குதிரை வண்டிகள் என அவர் அதையே பார்த்து கொண்டிருந்தார். அப்போது மீண்டும் ஒரு வாசனை அவரின் மூக்கை துளைத்தது. விக்டரிடம் உனக்கு அந்த வாசனை வருகிறதா என்றார். விக்டர் என்ன வாசனை என அதை கூர்மையாக நுகர்ந்தான். அவனுக்கு பெரிதும் புலப்படவில்லை. கிளைவ் சொன்னார் அது குதிரைகளின் சாணம் தான். சாதாரணமாக ஒரு வீட்டில் எத்தனை குதிரைகள் இருக்கிறது என்றார். குறைந்தது ஒரு குதிரை இருக்கும், அதுவே குதிரை வண்டி வைத்திருக்கிறார்கள் என்றால் 3 பேருக்கு ஏற்றார் போல இருக்கும் வண்டிக்கு 2 குதிரைகள் இருக்கும் என்றார் விக்டர். இதை கேட்டதும் இன்னும் சிந்தனையில் மூழ்கினர் கிளைவ்.

மீண்டும் கிளைவ் சொன்னார், அப்படியென்றால் இன்னும் கொஞ்ச காலங்களில் குதிரைகள் இல்லாத வீடுகளே இருக்காது, அதற்காக நிலம் வேண்டும். தற்போது மக்கள் குதிரை சாணத்தை நிலத்திற்கு அடியில் புதைக்கிறார்கள். அப்படியென்றால் இதற்காகவே தனி நிலம் வேண்டும். நிலம் பாழாய் போகும், அதன் விஷம் நிலத்தை மட்டுமில்லை நிலத்தடி நீரையும் வீணாக்கும். அதை உபயோகப்படுத்தும் நாமும் விரைவில் இறந்து விடுவோம். அப்போது குதிரைகள் தான் அதிகமாக இருக்கும் என அவரது சிந்தனையை விக்டரிடம் சொன்னார்.

இதை கேட்ட விக்டருக்கு அதிர்ச்சியாக இருந்தது, நீங்கள் சிந்திக்கும் அளவுக்கு நடக்க வாய்ப்பு இருக்கலாம் ஆனால் இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை நாம் குதிரைகளை பயணத்திற்கு உபயோகிக்கவில்லை என்றால் இந்நேரம் நடந்து தான் சென்று கொண்டிருப்போம். ஏன் ஒருவேளை நாம் இந்த பறவைகள் போல பறக்கவும் செய்யலாம் பயணத்திற்காக குதிரைகள் மட்டுமில்லாமல் வேறு ஏதோ ஒன்றை கண்டுபிடித்திருக்கலாம். அதனால் இந்தளவுக்கு பயப்பட தேவை இல்லை என்றான் விக்டர். கிளைவ் போல ஆழ்ந்த சிந்தனை இல்லனாலும், எதார்த்தமாக அவன் சிந்தித்து சொன்னது போலவே இப்போது பயணத்திற்கு கார் முதல் ஏரோபிலேன் வரை நாம் பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+