குழந்தை நீதி கதைகள்: உங்க குட்டி பசங்க இந்த சேட்டையை பண்றாங்களா? அப்போ இந்த கதையை படிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டீஸ், எப்படி இருக்கீங்க, யாரெல்லாம் நம்ம கதைல வர விஷ்ணு பண்ற சேட்டைகளை செய்றவங்க. நீங்க இல்லனாலும் உங்க நண்பர்கள் யார் இருந்தாலும் அவங்களுக்கு இந்த கதையை படிச்சி சொல்லுங்க. அப்புறம் யாருக்கு மிஸ் கொடுக்குற ஹோம் ஒர்க் பண்ண பிடிக்கும். சரி சரி கதைக்குள்ள போலாம்.

நம்ம கதையோட நாயகன் தான் விஷ்ணு. அவன் வீட்டுக்கு பக்கத்துல இருக்க ஸ்கூல்ல 5ம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு பூஜானு ஒரு தங்கை இருக்காள். அவளும் அதே ஸ்கூல்ல 2ம் வகுப்பு படிக்கிறாள். விஷ்ணு எப்பவும் வீட்டுல தூங்கிகிட்டே இருப்பான். நிஜமா தூங்குறானான்னு கேட்டீங்கன்னா கண்டிப்பா இல்ல, வீட்டு பாடம் பண்றது அவனுக்கு கஷ்டம், எங்கயாவது வெளில போகணும்னு கிளம்ப சொன்னா கஷ்டம், பக்கத்தில் இருக்கிற கடைல போய் ஏதாவது பொருள் சின்னதா வாங்க சொல்லிருவாங்களோ அப்படினு கஷ்டம் , இதுக்கு ஒரே வழி தூங்குவது போல நடிச்சிட வேண்டியதுதான் . இது நம்ம விஷ்ணுவோட ட்ரிக்ஸ்.

Short story for kids in Tamil : The little boy and his sleep

விஷ்ணு, விஷ்ணு.. அவன் அம்மாதான் எழுப்புறாங்க, தலைவர் எந்திரிக்கவில்லையே வேற என்ன ஹோம் ஒர்க் பண்ணல, லேட் பண்ணிட்டா ஸ்கூல்க்கு லீவு போட்டிடலாம் அப்படினு முடிவு பண்ணி கண்ண இறுக்க மூடிகிட்டான். அவன் நெனச்ச மாதிரி லேட் பண்ணி லீவ் போட்டுட்டான்.

விஷ்ணுவோட அம்மாவுக்கு , இதை எப்படியாச்சும் சரி பண்ணி ஆகணும்னு ஒரே யோசனை. டக்குனு ஒரு ஐடியா அவங்களுக்கு வந்துச்சு. விஷ்ணு, விஷ்ணு கீழ வா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு அவன் அம்மா கூப்பிட்டாங்க கிச்சன்ல இருந்து. இவன் கடைக்கு கூப்டறாங்க, எந்திரிக்காதடா கைப்பிள்ளை தூங்குனு கண்ண இறுக்கமா மூடிக்கிட்டான். அம்மா இது வேலைக்கு ஆகாதுனு முடிவு பண்ணி உனக்காக ஐஸ் கிரீம் வாங்கியிருக்கேன் வாடான்னு கூப்பிட்டாங்க. அப்போ கூட விஷ்ணு எந்திரிக்கவில்லை. அம்மா மீண்டும் மீண்டும் அவனை கூப்பிட்டு பாத்தாங்க. அவன் அம்மாவோட வார்த்தைகளை நம்பவில்லை. இது மாதிரி பல தடவை அம்மா கூப்பிட்டு எழுப்பினாங்க, நாம தூங்குவோம் அப்படினு இறுக்க கண்ணை மூடி கொண்டு படுத்திருந்தான்.

அம்மா கூப்பிடுறத விட்டுட்டாங்க. கொஞ்சம் நேரம் கழித்து எந்திரிச்ச விஷ்ணு நேரே ஃபிரிட்ஜ் இருக்க இடத்துக்கு போனான். அம்மா கிச்சன் ல இல்லை. சரி ஃபிரிட்ஜ் ல இருக்கும்னு திறந்து பார்த்தான். அங்க எதுவும் இல்லை. நல்லவேளை நாம ஏமாறல. எதையாவது செய்ய சொல்லி தான் கூப்பிட்ருப்பாங்க என எண்ணிக்கொண்டே டைனிங் டேபிளை பார்த்தான். காலியான 3 ஐஸ்கிரீம் டப்பாக்கள் இருந்தன. விஷ்ணுக்கு செம ஷாக்.

அம்மா, அம்மா என்னோட பங்கு ஐஸ் கிரீம் எங்க என விஷ்ணு கேட்டான். அதுவாடா, ஃபிரிட்ஜ் ஒர்க் ஆகல வாங்குன ஐஸ்கிரீம் மெல்ட் ஆகுற மாதிரி இருந்தது உன்ன கூப்பிட்டேன் நீ வேற அசந்து தூங்குன அதான் நானும் தங்கச்சியும், பக்கத்துவீட்டு ரோஷனும் சாப்பிட்டோம் என கூறினார். விஷ்ணுக்கு வருத்தப்படுவதை தவிர வேற வழி இல்லை. அம்மா சொன்னார், ரெண்டு நாளைக்கு முன்னாடி உன்ன கூப்பிட்டேன் இல்லையா அந்த பக்கத்துக்கு வீட்டு பப்பீஸ் வந்திருக்குன்னு நீ தான் வரல, பூஜா அது கூட நல்லா விளையாடினாள். அப்புறம் ரோஷன் அம்மா கிட்ட கேட்டு 2 மணி நேரத்துக்கு கேம் சீடி வாங்கிட்டு வந்தேன் நீ நல்லா தூங்கின, பூஜாவும் நானும் விளையாடிட்டு கொடுத்துட்டோம்.

அவ்வளவுதான் விஷ்ணு எவ்ளோ விஷயத்தை மிஸ் பண்ணிருக்கோம் என நினைத்தான். இப்போ விஷ்ணு எதையும் மிஸ் பண்றது இல்ல. ஸ்கூல் விட்டதும் ஹோம் ஒர்க் , அப்பறம் பூஜா கூட விளையாட்டு அப்படின்னு அவன் தொலைத்ததை சரி செய்து கொண்டான்.

அடடா இப்போ சொல்லுங்க உங்கள்ல யாரெல்லாம் இந்த மாதிரி சாக்கு போக்கு சொல்லி முக்கியமான நிகழ்வுகளை மிஸ் பண்ணியிருக்கீங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+