குழந்தை நீதி கதைகள்: மோட்டியும் ப்ளாக்கியும்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குழந்தைகளே , நாய் , பூனை,முயல் வளர்ப்பதுக்கு யாருக்கெல்லாம் பிடிக்கும். இங்க ஒரு வீட்ல நாயும் பூனையும் பண்ற அட்டகாசத்தை பாருங்க. வடை போச்சேன்னு ஏமாந்து போன பூனையை பத்தி படிக்கப்போறோம் வாங்க..

ஒரு குட்டி வீட்ல அழகான ஒரு பூனையும், நாயும் வாழ்ந்து வந்துச்சுங்க.. அந்த குட்டி நாயோட பேரு மோட்டி , அது எப்போதும் துறு துறுன்னு இருக்கும், என்ன கொடுத்தாலும் சாப்பிடும். அது ஒரு சமத்து நாய்க்குட்டி. அந்த வீட்ல இருக்குற பூனையோட பேரு ப்ளாக்கி , ஆனா அது பேருக்கும் அதுக்கும் சம்மந்தமே இருக்காது. ஏன்னா அது ரொம்ப வைட் ஆ புசு புசுனு இருக்கும். ப்ளாக்கி மீன் மட்டும்தான் சாப்பாடா எடுத்துக்கும், ஆனா மோட்டி குடக்குறதெல்லாம் சாப்ட்டுக்கும். இவங்க ரெண்டு பேரு கூடவும் குட்டி பசங்க அழகா விளையாடுவாங்க.

Short story for kids in Tamil : The Moti and the Blacky

ப்ளாக்கிக்கு அத எப்போவும் கொஞ்சிகிட்டே இருக்கனும் மோட்டிய யாரும் தூக்க கூடாதுனு நெனைக்கும். அப்படி மோட்டி கூட யாராச்சும் கொஞ்சி விளையாடிட்டா அவங்க பக்கம் கூட போகாது இந்த ப்ளாக்கி. அதுக்கு வைக்கிற உணவை சாப்பிட்டு மூஞ்ச தூக்கி வச்ச மாதிரி பொய் ஓரமா படுத்துக்கும். அதுதான் அதோட ஒரிஜினல் சுபாவம்.

ஒருநாள் அவங்க வீட்ல உள்ள எல்லோரும் பக்கத்துல நடக்குற பொருட்காட்சிக்கு போகலாம்னு யோசிச்சிச்சாங்க. ஆனால் அங்க வீட்டு பிராணிகளை கூட்டி போக அனுமதி இல்லை. அதுனால மோட்டி அப்புறம் ப்ளாக்கிய விட்டு போக முடிவு பண்ணாங்க. மோட்டி , பிளாக்கி சோகமா இருந்துச்சுங்க. ஆனால் வீட்டில் இருக்கும் அப்பா, அம்மா, குழந்தைகள் வீட்டுக்கு திரும்பி வர நேரம் ஆகும்ங்கறதால சாப்பிடுறதுக்கு உணவை தயார் செய்து வச்சாங்க.

உணவை பாத்ததும் மோட்டி ஓடி போய் சாப்பிட போனது. அது நல்ல சாப்டுட்டு வந்து அதோட இடத்துல சமத்தா இருந்துச்சு. என்னடா இவ்ளோ சீக்கிரம் சாப்டுட்டானே இந்த மோட்டி , நம்மள கூட்டிட்டு போகாம விட்டுட்டு போறாங்கன்னு சொரணை இருக்கா கோபம் கூட வராதா இவனுக்குனு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டே கோவமா இருந்தாலும் சாப்பிட போச்சு நம்ம ப்ளாக்கி. ஏமாத்திட்டீங்களேடா! பாலும், ப்ரெட்டுமா.. நான் சாப்பிடுற மீன் எங்கடா னு அப்பா, அம்மாவ மொறச்சு பாத்துச்சு.. பாவம் அது பேசுறது நமக்குத்தான் புரியாதே!.. அவங்களும் சரி ப்ளாக்கி சாப்பிட போகுதுனு கிளம்பி போக ஆரம்பிச்சாங்க.. பூனைக்கு செம கோபம், ஓடி வந்து சோஃபால இருந்து ஜன்னல் வழியே அவங்கள எட்டி பாத்து மொறச்சிகிட்டே இருந்துச்சு.. அவங்க கிளம்பி போய்ட்டாங்க.. ப்ளாக்கி சோகமா சோஃபால படுத்துகிச்சு.

நம்ம மோட்டி, சாப்டுட்டு ஜாலியா விளையாடிட்டு இருந்துச்சு. ப்ளாக்கி அத பார்த்து கோவப்பட்டாலும் சாப்பிடல. அப்டியே சோகமாவே மீன் இல்லையேன்னு வருத்தப்பட்டுட்டே இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல ப்ளாக்கிக்கு பசி எடுக்க ஆரம்பிச்சிது. புலி பசித்தாலும் புல்ல திங்காதுடா..ன்னு பாலையும் பிரட்டையும் சுத்தி வந்துகிட்டே இருந்தது. இத பார்த்த மோட்டி , இந்த பூனை என்ன பண்ணுதுனு பாத்துகிட்டே இருந்துச்சு. விளையாடி, விளையாடி நம்ம மோட்டி சோர்ந்தும் போச்சு. ப்ளாக்கி என்னனா அதோட சாப்பாட வெறிச்சு பாத்துகிட்டே ஷோபாவுக்கு வந்துச்சு. சரி போய் சாப்பிடுவோம் பசி வேற கிள்ளுதே அப்படினு நடந்து உணவை தேடி வந்த ப்ளாக்கிக்கு பெரிய ஷாக்.. அதோட பால், பிரட் ரெண்டும் காலி. ஆமா நம்ம மோட்டி சாப்ட்ருச்சு. வடை போச்சேன்னு சோகமா போய்டுச்சு ப்ளாக்கி.

ஆகா குழந்தைகளே, உங்கள்ல எத்தனை பேருக்கு இந்த மாதிரி கிடைச்சதும் போச்சேன்னு நடந்துருக்கு. நமக்கு கிடைச்சத வச்சி நாம சந்தோசமா இருக்கனும். இல்லனா அதுவும் நமக்கு கிடைக்காம போயிடும். ஆகையால் இருப்பதை வைத்து திருப்தி அடைந்து கொள்வதே புத்திசாலித்தனம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+