குழந்தை நீதி கதைகள்: சுட்டி சுட்டி உன் வாலை கொஞ்சம் சுருட்டிக்கோ.. சமத்து குட்டி நம்ம கிட்டோ..

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க. ஸ்கூல் ஓபன் பண்ண போறாங்கன்னு எத்தனை பேரு ஹாப்பியா இருக்கீங்க, எத்தனை பேரு லீவு முடிஞ்சுதுன்னு சோகமா இருக்கீங்க.. சரி உங்க சுட்டித்தனமான வால சுருட்டி வச்சிக்கிட்டு ஸ்கூல் போக தயாராகுங்க. உங்கள போல சுட்டி தனம் பண்ணக்கூடிய நாய் குட்டிய பத்தி ஒரு கதையை சொல்ல போறேன். படிக்கலாமா?..

ஒரு அழகான சின்ன வீடு, அதுல அம்மா, அப்பா , குழந்தைகள் என ஹாப்பியா இருந்தாங்க. அவங்க வீட்ல பூனை, நாய், கிளி என வீட்டு பிராணிகளை வளர்த்து வந்தாங்க. அவங்க வீட்ல ஒரு குட்டி பப்பி இருந்துச்சு. அதோட பேரு கிட்டோ . ரொம்ப சுட்டி தனம் கொண்ட குட்டி நாய் அது. அது பிறந்து 3 மாசம் தான் ஆகுது. பாக்குறது கொஞ்சம் புஸு புஸுன்னு இருக்கும். நல்ல வெள்ளை கலருல அங்க அங்க கொஞ்சம் கருப்பு கலர் புள்ளி இருக்கும். நீங்க 101 டால்மேஷன் படம் பார்த்திருக்கீங்களா அதுல வர குட்டி பப்பி மாதிரி நினைச்சுக்கோங்க..

Short story for kids in Tamil : The naughty KIDDO

குட்டி கிட்டோ எப்போவும் துரு துருன்னு இருக்கும். எதையாவது செஞ்சு எதுலையாச்சும் மாட்டிக்கும். அதுலயும் கிட்டோக்கு கூடைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கும். கூடைய பாத்துட்டா அத விடவே விடாது.

இப்போ ஒரு கூடையை பாத்துருச்சுனு வச்சிக்கோங்க அது உள்ள பொய் குதிச்சு விளையாடும். அந்த கூடைக்குள்ள உருண்டு விளையாடிட்டே இருக்கும். அத விட்டு வெளியவே வராது. அந்த கூடைக்குள்ள எதுவும் இல்லனா கிட்டோ உள்ள பொய் மண்டையில் மாட்டிகிட்டு அங்கேயும் இங்கயும் நடக்கும். வீட்டுக்கு புதுசா யாராச்சும் வராங்க அப்படினா, அச்சோ இந்த வீட்ல என்னடா கூடை நடக்குதுன்னு பதறி பாப்பாங்க. நம்ம கிட்டோ உள்ள இருப்பாரு. அவருதான் ரொம்ப குட்டி ஆச்சே, உள்ள இருக்குறது வெளியவும் தெரியாது. அந்த அளவுக்கு கிட்டோக்கு கூடைகள் மீது ஆர்வம் அதிகம்.

ஒருநாள் கிட்டோ இப்படி விளையாடிட்டு இருக்கும்போது அங்க இருந்த ஒரு பெரிய கூடையை பார்த்தது. 'ஆஹா இவ்ளோ பெரிய கூடையா , எப்படி என் கண்ணில படமா இருந்துச்சு' என நினைத்து கொண்டு தலையை உள்ளே விட்டது. கூடை பெருசா இருந்ததால கொஞ்சம் இருட்டா தெரிஞ்சுது, உள்ள என்ன இருக்குதுனு நம்ம கிட்டோ பாக்க முடில. உடனே முன்னங்கால்களையும் உள்ளே விட்டு பார்த்தது. நம்ம கிட்டோ சட்டுனு பயந்துருச்சு.

தீடிரென ஏதோ சீருற மாதிரி சத்தம் கேட்டுச்சு, ஏதோ கிட்டோ மூஞ்சில குத்துற மாதிரி , ஈரமா இருந்துச்சு. கிட்டோ முகத்துல ஏதோ கூர்மையான பொருளை வச்சு கீறின மாதிரி இருந்துச்சு. பாவம் நம்ம கிட்டோ! சட்டுனு கூடையை விட்டு வெளிய குதிச்சுது. பக்கத்துல இருந்த தண்ணி பௌல்ல தலையை விட்டுச்சு. 'அறிவிருக்கா குட்டி' பெரிய சத்தத்துடன் கிட்டோவோட அம்மா வந்துச்சு. ' அந்த பாஸ்கெட்ல தான் அந்த குண்டு பிளாஸ்ஸி வாழ்றாள். அவளோட பூனைக்குட்டிகளை அங்கதான பத்திரமா பாத்துக்குறா, அது உள்ள உன்ன யாரு தலையை விட சொன்னது' செம திட்டு நம்ம கிட்டோக்கு அவங்க அம்மாகிட்ட இருந்து. அதுக்கு அப்புறம் நம்ம கிட்டோ எந்த கூடை பக்கத்துலயும் போறது இல்ல.

ஆகையால் குட்டிஸ் நம்ம கிட்டோ மாதிரி சில நேரங்களில் உங்கள் வால் தனங்களை சுருட்டி வச்சிக்கோங்க. நமக்கு தேவையில்லாத இடங்களுக்கு போக வேண்டாம். செஞ்சி பாத்துடலாம் என சுட்டிதனம் பண்ணாம ஸ்கூல் போறதுக்கு ரெடி ஆகுங்க. இன்னொரு கதைல நாம மீட் பண்ணலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+