குழந்தை நீதி கதைகள்: ஆரஞ்சு மரம் இப்படித்தான் வந்துச்சா? யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க. சரி நீங்க நம்ம விசித்திர கதைகளை படிக்கிறீங்களா. கதையில் எதாவது புதுசா கொண்டு வரணும்னு ஆசை பட்டீங்கன்னா கமெண்ட் பண்ணுங்க. உங்க எல்லோருக்கும் ஆரஞ்சு புடிக்கும் இல்லையா, ஆனால் அந்த மரம் எப்படி வந்துச்சு தெரியுமா? சரி கதையை படிச்சு தெரிஞ்சிக்கலாமா?

ரேயான் ரொம்பவே சுட்டி தனம் நிறைந்த புத்திசாலியான பையன். அவன் நம்ம ஹார்ரி பாட்டர் போல ஒரு மாயாஜால ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தான். வளர வளர அவனது அறிவும், சாமர்த்தியமும் அதிகமா ஆனது. அவனுக்கு அந்த ஸ்கூல்ல ரொம்ப புடிச்ச ஆசிரியர் ஹாக்ரிட். ரேயான் வளர்ந்து அந்த ஸ்கூல் கடைசி நாளில் தனக்கு பிடிச்ச ஹாக்ரிட் சார் கிட்ட உங்களால தான் நான் நல்ல விஷயங்களை கத்துக்கிட்டேன். உங்களுக்கு ஏதாச்சும் பண்ணனும் என்று கேட்டான். ஹாக்ரிட் நான் என்கிட்ட படிக்கிற மாணவர்கள்கிட்ட இருந்து எதுவும் வாங்குறது இல்ல. உங்களுக்கு அறிவை புகட்ட தான் நான் இங்க இருக்கேன் என்றார் பெருந்தன்மையாக.

Short story for kids in Tamil :The Orange Witch

ரேயான் விடாமல், சரி வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க என்று கேட்க, எனக்கு வேணாம் ஆனால், நம்ம ஸ்கூல்ல இருந்த ஒரு முக்கியமான மாயாஜாலங்கள் அடங்கிய புத்தகத்தை ஒரு சூனியக்காரி எடுத்துட்டு போயிட்டாள். அதை உன்னால் மட்டுமே மீட்டு தர முடியும். அதை பண்ணுவியா என்று கேட்க, அவனும் சரி எங்கே போகணும் என்று கேட்டான்.

அவர் ஒரு மலையை குறிப்பிட்டு சொல்லி, அவள் மிகவும் தந்திரக்காரி, மாயாஜாலம் மட்டும் வைத்து அவளை தோற்கடிக்க முடியாது, நீ சிந்தித்து செயல்படு. ஒருவேளை உனக்கு ஏதும் தோன்றவில்லை என்றால் இந்த மூன்று பளிங்கு கற்களை வைத்து கொள். தேவைப்படும்போது அதை உபயோகப்படுத்து என்றார் ஹாக்ரிட்.

அதை எடுத்து கொண்டு பல வாரங்கள் நடந்து, சூனியக்காரி இருக்கும் மலையை நெருங்கினான். அவள் ஒரு மரத்தினாலான வீட்டில் உறங்கி கொண்டிருப்பதை கண்டான். அவள் அருகில் ஒரு மேஜையில் ஒரு பெரிய புத்தகம் போல் ஒன்று இருப்பதை கண்டான். கண்டிப்பாக அதை தூக்கிவிட்டாலும் ஓட முடியாது. யோசித்து கொண்டிருந்த அவனது கையில் இருந்த பளிங்கு கற்கள் மின்னின. உடனே ஒரு கல்லை எடுத்து அந்த புத்தகத்தின் மேல் வீசி அவன் பாக்கெட்டில் வைக்கும் அளவிற்கு அது சிறியதாக இருக்க வேண்டும் என்றான். புத்தகம் குறுகி சின்னதாக மாறியது.

மரத்தில் ஏறி குதித்து, புத்தகத்தை எடுத்து பாக்கெட்டில் வைத்தான். அருகில் இருந்த பூஜாடியை கவனிக்காமல் இடறி விழுந்தான். அவ்வளவுதான் சூனியக்காரி விழித்தெழுந்தாள். அவனை தனது பெரிய கைகளால் பிடித்து ஆக உன்னை அப்படியே என் வாயில் போட்டு முழுங்கினால் ருசியாக இருக்கும் என்றாள். ச்சா ச்சா, அப்பெடியெல்லாம் இருக்க மாட்டேன். என் மேல் ஒரே வியர்வை நாற்றம் நான் பல நாட்கள் நடந்து இங்கு வந்து மாட்டி கொண்டேன், நீ என்னை குளிக்க வைத்து பிறகு உண் என்றான் ரேயான்.

அதுவும் சரிதான் என்ற சூனியக்காரி, அவனை அருகில் இருந்த அருவிக்கு அழைத்து சென்றாள். இடுப்பில் ஒரு கயிறை கட்டி ஆற்றில் இறக்கினாள். சிறிது தூரம் சென்ற ரேயான் கயிறை ஒரு மரத்தில் இருக்க கட்டினான். இன்னொரு கூழாங்கல்லை எடுத்து அந்த மரத்தின் மீது வீசி என்னை போல பேசி பதில் சொல் என்று சொன்னான்.

கொஞ்ச நேரம் ஆகியும் ரேயான் வராததால் கயிற்றை இழுத்து பார்த்தால் சூனியக்காரி. அது இறுக்கமாக இருந்தது. நீ அங்குதான் இருக்கிறாயா? என்றாள். மரத்தின் மீது வீசிய பளிங்கு கல் ஆமாம் என்று ரேயானின் குரலில் பதில் அளித்தது. மீண்டும் நேரம் ஆகி வராததால் நீ இருக்கிறாயா என்றாள் சூனியக்காரி. மரமும் ஆமாம் இங்குதான் இருக்கிறேன் என்றது ரேயானின் குரலில். ரேயான் வருவது போல் அறிகுறி இல்லாததால் கயிற்றை பிடித்து வேகமாக இழுத்தாள் சூனியக்காரி. மரம் வேரோடு பிய்த்துக்கொண்டு ஓடியது.

அதிர்ச்சியில் உறைந்த சூனியக்காரி வேகமாக ரேயானை பிடிப்பதற்காக பறந்தாள். புத்தகம் திருடு போனதை கூட மறந்த அவள் ஒரு போடி பையன் தன்னை ஏமாற்றிவிட்டானே என வெறிகொண்டு பறந்தாள். ஆனால் அவள் இருந்த இடம் இன்னும் அதிகமான மலைகள் அருவிகள் என் நிறைய தடைகள் இருந்தது. இது எப்படி இங்கு வந்தது என யோசித்து கொண்டிருக்கும்போது ரேயான் பளிங்கு கல்லை வீசி நிறைய மலைகள் அருவிகள் வரட்டும் என சொல்லி அங்கிருந்து தப்பித்து ஹாக்ரிடை தேடி வந்து சேர்ந்தான்.

ஹாக்ரிட், உடனடியாக ரேயானை மறைத்தார். கண்டிப்பாக, அவனை தேடி அவள் வருவாள் என்று யோசித்தார். அவள் தேடி ஹாக்ரிட் இருக்கும் ஒரு மாளிகையை அடைந்தாள். அந்த பொடியனின் வாசனை இங்குதான் வருகிறது. அவன் இங்குதான் இருக்கிறான், எங்கே எங்கே என்று ஹாக்ரிடை நோக்கி கேட்க ஆரம்பித்தாள் சூனியக்காரி.

Short story for kids in Tamil :The Orange Witch

நீ வெகு தூரத்தில் இருந்து வந்திருக்கிறாய், முதலில் சாப்பிடு என்று சப்பாத்தியை கொடுத்தான். இதை யார் சாப்பிடுவது, எனக்கு அவன்தான் வேண்டும். அவன் இங்குதான் எங்கோ இருக்கிறான். கண்டிப்பாக எனக்கு அவன் வேண்டும் என்று கூறினாள். விடாத ஹாக்ரிட் முதலில் இதை சாப்பிடு என சப்பாத்தியை கொடுக்க அவள் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் அமைதியானாள். இதை வைத்து அவளை திசை திருப்ப முயன்றார் ஹாக்ரிட். நீ பெரிய சூனியக்காரியா? உன்னால் வானை தொடும் அளவுக்கு உயரமாக முடியுமா என்றார். ஆமாம் வா வெளியே, என்று வானளவு உயர்ந்து காட்டினாள்.

அப்படி என்றால் உன்னால் சிறிய விதையாக மாறமுடியுமா என்றார் ஹாக்ரிட். கண்டிப்பாக ஏன் முடியாது? என்று சற்றும் யோசிக்காமல் சிறிய விதையாக மாறினாள் சூனியக்காரி. கொஞ்சமும் தாமதிக்காத ஹாக்ரிட், அந்த விதையை மண்ணில் புதைத்தார். அது சட்டென வளர்ந்து ஒரு ஆரஞ்சு மரமாக மாறியது. சூனியக்காரியின் சக்திகள் ஆரஞ்சு மரத்தில் நிறைந்தன. சூனியக்காரியால் பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை. ஹாக்ரிட் சாமர்த்தியமாக செயல்பட்டதால் ரேயான் மட்டுமில்லாமல் புத்தகமும் காப்பற்றப்பட்டது. சூனியக்காரியால் ஆரஞ்சு பழத்தில் எனர்ஜி கொடுக்கும் அளவுக்கு சக்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+