குழந்தை நீதி கதைகள்: வாழ்ந்தா இப்படி வாழணும்டா.. இவங்களை போல யாரெல்லாம் ஆசை பட்டுருக்கீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க, யாரெல்லாம் கதையை மிஸ் பண்ணீங்க. சரி இன்னைக்கு இரண்டு தவளைகளை பத்தின குட்டி கதையோட வந்துருக்கேன். கதையை படிச்சிட்டு நீங்க யாராவது இப்படி ஒரு ஆசை வச்சிருக்கீங்களா சொல்லுங்க. இப்போ கதைக்குள்ள போலாம்.

ஒரு ஊர்ல கொஞ்சம் பக்கத்துலயே , ஒரு தெளிவான நீர் கிணறு இருந்துச்சு. அது பக்கத்துலயே கொஞ்சம் அழுக்கா ஒரு சின்ன குட்டை இருந்துச்சு. இப்போ இங்க ரெண்டு தவளைகள் வாழ்ந்து வந்தது. கிணத்துல ஒரே ஒரு தவளை தான் இருந்துச்சு. ஆனால் பக்கத்துல இருந்த குட்டைல நிறைய தவளைகள் இருந்தன. இங்க நம்ம டோலு தவளை, அப்படியே கிணத்துல பாலு தவளை. இவங்க ரெண்டு நாளா ஒரு ஆசை.

Short story for kids in Tamil : The pond frog and well frog

டோலு தவளைக்கு அது இருந்த குட்டை ரொம்ப அழுக்கா இருக்குறது பிடிக்கல, அது கூட நண்பர்கள் கூட்டமா இருந்தாங்க அதுவும் பிடிக்கல, டோலுவால தனியா எதையும் செய்ய முடியலன்னு எப்போவுமே ஒரு வருத்தம் இருந்துகிட்டே இருந்துச்சு.

பாலு தவளைக்கு அது ரொம்ப தனியா இருக்கோம்னு ஒரே கவலை. வெளிய பாத்தா வானம் தெரியல, இந்த கிணறு எப்போவுமே இருட்டாகவே இருக்குனு வருத்தப்பட்டுச்சு. இவங்க ரெண்டு பேருமே நம்ம இருக்குற இடத்தை விட அது பக்கத்துல இருக்குற இடத்துக்கு போக ரொம்ப ஆசை பட்டாங்க.

ஒருநாள் டோலு துணிஞ்சு போய் கிணத்துக்கு போயிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிடுச்சு. அந்த குட்டையைவிட்டு நடந்து கிணத்து பக்கத்துல போய்டுச்சு. அப்போ பாலு மெதுவா வெளிய வந்து எனக்கு குட்டைல வாழணும் போல இருக்குனு சொல்லிச்சு. இப்போ இரண்டு பேருமே தங்களோட ஆசையை நிறைவேத்திக்க கிளம்பிட்டாங்க.

டோலு கிணத்துக்குள்ள குதிச்சதும் ஒரே இருட்ட இருக்குறது பாத்து முதல பயந்துச்சு. ஆனால் அந்த தண்ணி ரொம்ப தெளிவா இருந்ததும் குஷி ஆனது. இப்போதான் என்னோட நீண்ட நாள் ஆசையான பாடல் எழுத முடியும். யாருமே இல்லாம ரொம்ப அமைதியா இருக்குன்னு சந்தோசம் ஆனது.

பாலு குட்டைக்கு போனதும் அங்க இருந்த அழுக்கு தண்ணிய பாத்து கொஞ்சம் யோசிச்சது, ஆனால் அங்க நிறைய தவளைகளை பார்த்ததும் அதுக்கு தனிமை காணாமல் போனது. அப்படியே திறந்த வான் வெளியை பார்த்ததும் இன்னும் சந்தோசப்பட்டது.

அப்படியே நாட்கள் சென்றது. டோலு இன்னும் ஒரு பாடலை கூட எழுதவில்லை. டோலுவை தொல்லை செய்த நண்பர்களை மிஸ் பண்ண ஆரம்பித்தது. அப்போது சரியான மழை பெய்தது, குட்டையில் பொத்தென தண்ணி விழா ஆரம்பித்தது, பாலுவால் அங்கு மூச்சு கூட விட முடியவில்லை. குட்டை இன்னும் அழுக்காக தெரிந்தது. இங்கு இருந்து கிணத்துக்கு செல்வதுதான் சிறந்தது என தன் இருப்பிடத்துக்கு ஓடியது.

டோலு நண்பர்கள் மற்றும் தன்னுடைய சந்தோசத்தை தேடி குட்டைக்கே திரும்பியது. இப்போது டோலுக்கு பாடலும் பயங்கரமாக தோன்றியது.

" நான் இந்த குட்டைல வாழுற டோலு

நான் பாடுற தவளை சாங்கு

கர்வ் கர்வ் கர்வ் "

இந்த பாட்டை டோலு பாடியதும் அதன் நண்பர்களும் பாட ஆரம்பித்தது. அப்படியே சந்தோசமாக குட்டையில் குதித்து துள்ளியது.

பாலு தனது கிணத்துக்குள் குதித்தும் தாராளமாக மூச்சு விட்டது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்பதை உணர்ந்தது.

ஆகையால் குழந்தைகளே, உங்களுக்கு எதை பார்த்தால் நாம் ஏன் அங்கு இல்லை, நமக்கு ஏன் அவர்களை போல கிடைக்கவில்லை என நீங்கள் எண்ணி கொண்டிருந்தால், அவர்களுக்கும் உங்களை போல ஒரு ஏக்கம் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+