குழந்தை நீதி கதைகள்: ஹே குருவி சிட்டு குருவி- வாயினால் நொந்த குருவி
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ் , ஒரு குட்டி கதையை உங்க கிட்ட சொல்ல போக வேகத்துலையே திரும்ப வந்துருக்கேன். அளவிலும் கம்மி, அறிவிலும் கம்மியா இருக்கிற ஒரு குருவிய பத்தி சொல்றேன். கேக்கறீங்களா? சீக்கரம் வாங்க.
ஒருவழியா கோடைகாலத்தின் இறுதிக்கட்டம் அது. பெரிய ஆலமரத்துல ஒரு ஜோடி சிட்டுகுருவிகள் வசித்து வந்தன. இரண்டும் மழைக்காலம் வரதுக்கு முன்னாடி உறுதியான கூட்டைக்கட்ட எண்ணின. நன்கு வேலைசெய்யும் குணமுடைய இரண்டும் சீக்கரம் தாங்கள் நினைத்த படி அழகிய வீடு கட்டி மகிழ்ச்சியாக இருந்தன.
ஒருநாள் மிகவும் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போ இவங்க கூடு இருக்கிற மரத்துக்கு கீழ ஒரு குரங்கு வந்து ஒதுங்கியது. மழைல ரொம்ப நனஞ்சுருச்சு, மேலும் அந்த குரங்கு குளிர்ல நடுங்கி கொண்டிருந்தது. அந்த குரங்கை பார்த்து பெண் குருவி,

"ஐயா ஏன் இப்படி மழையில் நனையறீங்க. உங்க வீட்டுக்கு போகலையா?னு கேட்டுச்சு.
அதற்கு அந்த குரங்கு சொல்லுச்சு, "எனக்கு தனியா வீடு எல்லாம் இல்லம்மா. நான் மரத்துக்கு மரம் மாறி மாறி தங்குவேன். இதை கேட்ட அந்த பெண் குருவி, "இந்த குரங்குக்கு மூளை இல்லையா? எதிர்காலத்திற்கு சேகரிக்காத சோம்பேறி குரங்கு போலனு. விமர்ச்சித்தது. கோபப்பட்ட அந்த குரங்கு, "குருவியம்மா கொஞ்சம் அமைதியா இரு. குரங்குகள் எதுவும் வீடு கட்டுவதில்லை. நாங்க மரத்தில்தான் தங்குவோம்னு" சொல்லுச்சு.
அமைதியாகாத குருவி மேலும், "நாங்க பாருங்க. எங்களோட சிறு அலகை வெச்சு, இந்த மாறி அழகிய கூடு கட்டிருக்கிறோம். ஆனால் உன்னிடம் இரண்டு கைகள் இருந்தும் உங்களால ஒரு சின்ன வீடு கூட கட்ட முடியாதா? என்று கூறி சிரித்தது. குரங்குக்கு கோபம் அதிகமானது.
குரங்கு கோபமாவதை பார்த்த ஆண் குருவி பெண் குருவியிடம் ," அமைதியாக இரு , அவரை ஏளனம் செய்வதால் நமக்கு எந்த நல்லதும் நடக்காது, அவரவர்களுக்கு இருக்கும் வாழ்க்கையை வாழ விடுவதே சிறந்தது" என்றது. இதை காதிலே போட்டுக்கொள்ளாத அந்த பெண் குருவி சிரிப்பதை நிறுத்தவில்லை
"ஏய் குருவி ஒரு வாட்டி சொன்னா புரியாதா? சிரிக்கிறதை நிறுத்துனு கத்தியது. குரங்கு கத்திய பிறகும், பெண் குருவியோ விட்டபாடில்லை. சிரித்துகொண்டே இருந்தது.

கோபம் தலைக்கேறிய குரங்கு தன்னோட இரண்டு கைகளை கொண்டு அந்த குருவின் கூட்டை கிழித்து எரிந்தது. அந்த குருவிக்கு இப்பொது கோபம் வந்தது. ஆனால் என்ன செய்ய முடியும். சிரிச்ச அளவுக்கு அழுதுட்டு மழையில் நனைந்தபடி இருந்தது. தேவையில்லாத பேச்சினால் தனக்கு தான் நஷ்டம்னு மனசுல நெனச்சு வருந்தியது.
குட்டி கதை எப்படி இருந்தது குட்டிஸ். நம்மளோட வாயை அளவாக பயன்படுத்தினால் நம்ம வாழ்க்கையும் வளமாக இருக்கும். இல்லன்னா வாயே நமக்கு வினையாகும். சில நேரங்களில் நாம் அடுத்தவர் வாழ்க்கையில் தலையிடாமல், நமக்கு கிடைத்த வாழ்க்கையை அழகாக செதுக்கிவிடலாம். ஆக குழந்தைகளே சிந்தித்து சிறப்பாக உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் எவ்விடத்தும் நாவடக்கம் வேண்டும்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications